DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, April 29, 2026

🦋 Meditation verse - சங்கீதம் 18 : 25, 26 / Psalm 18:25-26

 "விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1910               🔆 2026 மே 01, வெள்ளி 


"தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்." ( சங்கீதம் 18 : 25, 26 )

ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரை அங்கு பணிபுரியும் எல்லா ஆசிரியர்களுக்கும் அங்கு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறிட முடியாது.  ஒவ்வொருவரும் அவரை ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்ப்பதுண்டு. சிலர் ஹிட்லராக, கொடுங்கோலனாகவும், வேறு சிலர் நல்ல நிர்வாகியாகவும்,  திறமைசாலியாகவும் பார்ப்பதுண்டு. அவருக்குத் தங்களின் மனதின் எண்ணப்படி பல்வேறு பட்டப்பெயர்களையும் வைப்பதுண்டு. 

அதாவது, நல்ல திறமையான ஆசிரியர்களுக்கு அந்தத் தலைமை ஆசிரியர் நல்லவராகவும், ஒழுங்காக பாடம் நடத்தாமல் அடிக்கடி விடுமுறையெடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர் கெட்டவராகவும், முரட்டு குணமுள்ளவராகவும் தோன்றுவார். இதுபோலவே மாணவர்களிலும் சிறப்பாக படிக்கும் மாணவர்கள் அவரை நல்லவராகவே பார்ப்பார்கள்.

இதுபோலவே தேவனும் மக்களது மனநிலைக்கேற்ப அவர்களுக்குத் தோன்றுவார். இரக்கமுள்ளவர்களுக்கு அவர் இரக்கமுள்ளவராகவும்  உத்தம வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அவர் உத்தமராகவும்; புனிதர்களுக்கு அவர் புனிதராகவும், மாறுபாடுள்ள கேடுகெட்டவர்களுக்கு அவர்  மாறுபாடு உள்ளவராகவும் தோன்றுவார்.  அதாவது அவரவர் மனநிலைக்கேற்பத்தான் தேவன் ஒவ்வொவருவருக்கும் தோன்றுவார். 

ஆனால் பலரும் இதனை எளிதில் உணர்ந்துகொள்வதில்லை. எனவேதான் துன்மார்க்கமாக நடக்கும் மனிதன் தனக்குக் கேடானவை நடக்கும்போது தனது தவறை உணர்ந்துகொள்ளாமல், தேவனைக் குற்றபடுத்துபவனாக இருப்பான்.  "கடவுளுக்கு எங்கே கண் இருக்கிறது? அவருக்குக் காதும் கேட்பதில்லை. எனவே, என் ஜெபத்தை அவர் கேட்பதில்லை" எனச் சிலர் விரக்தியில் கூறுவதுண்டு.  ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கை நிலையை சீர்தூக்கிப் பார்க்க மறந்துவிடுகின்றனர். 

அன்பானவர்களே, தேவனிடம் எந்த மாறுபாடும் இல்லை. "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1 : 17 ) என்று வாசிக்கின்றோம். நம்மிடம் அவர் மாறுபாட்டைக் காட்டுகின்றாரென்றால் நம்மிடம் உள்ள குறைகளை நாம் கண்டறிந்துத் திருத்திக்கொள்ளவேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனத்துக்கு இணையாக இயேசு கிறிஸ்து கூறினார், "ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்." ( மத்தேயு 7 : 2 ) ஆம், நாம் அளக்கும் அளவின்படியே தேவன் நமக்கு அளப்பார்;  நாம் தயவுள்ளவராக, உத்தமர்களாக புனிதர்களாக இருந்தால் அதற்கேற்பவும் நமது செயல்கள் அவருக்கு எதிராக மாறுபாடுள்ளவையாக இருக்குமானால் அதற்கேற்ப மாறுபாடுள்ள பலனையும் அவரிடமிருந்து பெறுவோம். 

ஒரே விதமான ஒளியைத்தான் நாம் அனைவரும் சூரியனிடமிருந்து பெறுகின்றோம். ஆனால், கருப்புக்கண்ணாடி அணிந்து பார்த்தால் கருப்பாகவும், பச்சை நிறக் கண்ணாடி அணிந்து பார்த்தால் பச்சையாகவும்தான் தெரியும்.  கர்த்தர் இரக்கமும், கிருபையும் நீடிய சாந்தமும் உள்ளவர். இதனை அவர் மோசேயிடம் கூறவில்லையா?  "கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்." ( யாத்திராகமம் 34 : 6 )

நமக்கு அவர் எப்படித் தோன்றுகின்றார்? தயவுள்ளவராகவா, இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் உள்ளவராகவா?  இல்லை மாறுபாடுள்ளவராகவா? தேவன்மேல் பழியைப் போடாமல் நம்மை நாமே நிதானித்துப்பார்த்து நம்மைத்  திருத்திக்கொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

"Inside the Seeds" 🌳

📖AATHAVAN Bible Meditation - No. 1910              🔆 Friday, May 01, 2026

"With the kind You show Yourself kind; With the blameless You show Yourself blameless; With the pure You show Yourself pure, And with the perverted You show Yourself astute." (Psalm 18:25-26)

It cannot be said that every teacher and student in a school likes the headmaster. Each person views him from a different perspective. Some may see him as a "Hitler" or a tyrant, while others see him as a good administrator and a talented leader. People often give him various nicknames based on the thoughts of their own hearts.

To be specific, to the talented and hardworking teachers, that Headmaster appears as a good man. However, to the teachers who do not teach properly and take frequent leaves, he appears as a bad and harsh man. Similarly, among the students, those who study well will view him as a good person.

In the same way, God appears to people according to their own mental state. To the merciful, He appears merciful; to those who live a blameless life, He appears blameless; to the pure, He appears pure; and to the perverted and wicked, He appears "perverted" (or astute/crooked). In essence, God manifests to each individual according to their own heart's condition.

Yet, many do not realize this easily. This is why a person walking in wickedness often blames God when bad things happen, rather than realizing their own mistake. Some say in frustration, "Where are God's eyes? He doesn't even have ears; that's why He doesn't hear my prayer." They forget to examine the state of their own lives.

Beloved, there is no change or variation in God. We read:

"Every good thing given and every perfect gift is from above, coming down from the Father of lights, with whom there is no variation or shifting shadow." (James 1:17)

If He seems to show "perverseness" toward us, it is essential that we identify the flaws within ourselves and correct them.

In alignment with today’s meditation verse, Jesus Christ said:

"For in the way you judge, you will be judged; and by your standard of measure, it will be measured to you." (Matthew 7:2)

Yes, God will measure to us according to the measure we use. If we are kind, blameless, and pure, we receive accordingly. If our actions are perverse and against Him, we will receive the corresponding result of that perversity from Him.

We all receive the same light from the sun. However, if you wear black-tinted glasses, the world looks black; if you wear green glasses, it looks green. The Lord is merciful, gracious, and slow to anger. Did He not say this to Moses?

"Then the Lord passed by in front of him and proclaimed, 'The Lord, the Lord God, compassionate and gracious, slow to anger, and abounding in lovingkindness and truth.'" (Exodus 34:6)

How does He appear to us? As a God of kindness, mercy, grace, and patience? Or as a God of perversity? Instead of shifting the blame onto God, let us examine ourselves and correct our ways.

God’s Message: Bro. M. Geo Prakash                                                                                  
                 

No comments: