"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1908
"கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்." ( எரேமியா 14 : 7 )
ஒரு வேத அறிஞர் கூறினார், "பாவமே செய்யாத பரிசுத்தவான்கள் யாருமில்லை. நாம் இன்று பரிசுத்தவான்கள் என்று கூறும் அனைவரும் முன்னாள் பாவிகளே" என்று. ஆம் அன்பானவர்களே, பாவிகளே தேவனிடம் மன்னிப்பைப் பெற்று பரிசுத்தவான்கள் ஆகின்றனர். இதனையே வேதத்தில் நாம், "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." ( பிரசங்கி 7 : 20 ) என்று வாசிக்கின்றோம்.
நாம் பலவீனமான மனிதர்கள் ஆதலால் அடிக்கடி பாவத்தில் விழுந்துவிடுகின்றோம். ஆனால், பாவத்தில் நாம் அப்படியே விழுந்து கிடக்காமல் தேவ மன்னிப்பைப்பெற்று எழுந்திருக்கவேண்டியது அவசியம். எனேவேதான் ஏசாயா, "துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." ( ஏசாயா 55 : 7 ) என்று கூறுகின்றார்.
இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் எரேமியாவின் ஜெபமாக வாசிக்கின்றோம். "கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்" என்று தேவ கிருபைக்காக கெஞ்சுகிறார் அவர். தாவீது ராஜாவும் பாவம் செய்தபோது இதுபோல, "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." ( சங்கீதம் 51 : 3 ) என்று பாவ அறிக்கையிட்டார்.
ஆம் அன்பானவர்களே, தேவனிடம் அறிக்கையிடும்போது நமது "பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்." ( ஏசாயா 1 : 18 ) பூனைகளைக் கவனித்துப் பாருங்கள், அவை சிறிதளவு அழுக்கு உடம்பில் பட்டாலும் நாவினால் அதனை நக்கிச் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கும். இதற்கு மாறாக, பன்றிகள் எந்த உணர்வும் இல்லாமல் சேற்றில் மகிழ்ச்சியுடன் புரண்டுகொண்டிருக்கும். நாம் பூனைகளைப்போல வாழவே அழைக்கப்பட்டுள்ளோம்.
இந்தப் பாவ மன்னிப்பை நமக்கு அளிக்கவே கிறிஸ்து இயேசு பூமியில் வந்து பாடுபட்டார். நாம் பாவம் செய்து வழிதவறிய ஆடுகளைப்போல இருந்தோம். ஆனால் தேவன் நமது அக்கிரமங்களை அவர்மேல் சுமத்தி அவரை நமது பாவங்களுக்குப் பரிகாரியாக்கினார். இதனை நாம், "நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்." ( ஏசாயா 53 : 6 ) என்று வாசிக்கின்றோம்.
மன்னிப்பைப்பற்றி கூறிய இயேசு கிறிஸ்து, நமக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களை ஏழெழுபதுமுறை மன்னிக்கச் சொல்லி நமக்கு அறிவுறுத்தினார். அப்படியானால் அவர் நம்மை மன்னிக்காமல் இருப்பாரா? எரேமியாவைப்போல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிடுவோம். "இயேசுவே , எனது அக்கிரமங்கள் எனக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எனது சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்; என்னை மன்னியும்" என்று நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிடும்போது பாவமன்னிப்பின் நித்சயத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்வோம்.
ஆம், "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." ( நீதிமொழிகள் 28 : 13 )
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"Inside the Seeds" 🌳
AATHAVAN Bible Meditation -
No. 1908
🔆 Wednesday, April 29, 2026
"Though our iniquities
testify against us, O Lord, act for Your name’s sake! Truly our apostasies have
been many, we have sinned against You." (Jeremiah 14:7)
A Bible scholar once said, "There
are no saints who have never sinned. All those we call saints today are former
sinners." Yes, dear ones, it is sinners who receive forgiveness from
God and become saints. We read this in the Scriptures:
"Indeed, there is not a
righteous man on earth who continually does good and who never sins." (Ecclesiastes
7:20)
Because we are weak human
beings, we frequently fall into sin. However, it is essential that we do not
remain fallen in that state, but rather rise by receiving God's forgiveness.
This is why Isaiah says:
"Let the wicked forsake
his way and the unrighteous man his thoughts; and let him return to the Lord,
and He will have compassion on him, and to our God, for He will abundantly
pardon." (Isaiah 55:7)
We see this heart in today's
meditation verse as a prayer from Jeremiah. He pleads for God’s grace, saying, "O
Lord, even though our iniquities testify against us, act for Your name’s
sake." Similarly, when King David sinned, he confessed:
"For I know my
transgressions, and my sin is ever before me." (Psalm 51:3)
Dearly beloved, when we
confess to God, even if our "sins are as scarlet, they will be as white as
snow; though they are red like crimson, they will be like wool" (Isaiah
1:18).
Consider the cat: if
even a little dirt touches its body, it constantly licks itself clean. In
contrast, pigs wallow in the mud with delight, without any sense of
uncleanness. We are called to live like the former, not the latter.
Christ Jesus came to this
earth and suffered specifically to grant us this forgiveness. We were like
sheep who had sinned and gone astray. But God laid our iniquities upon Him and
made Him the atonement for our sins. As we read:
"All of us like sheep
have gone astray, each of us has turned to his own way; but the Lord has caused
the iniquity of us all to fall on Him." (Isaiah 53:6)
When Jesus spoke about
forgiveness, He instructed us to forgive those who sin against us "seventy
times seven." If that is His standard for us, would He ever refrain from
forgiving us?
Let us confess our sins to the
Lord Jesus Christ just as Jeremiah did. When we cry out, "Jesus, though
my iniquities testify against me, act for Your name's sake; my apostasies are
many, I have sinned against You; forgive me," we will receive the
assurance and joy of forgiveness.
"He who conceals his
transgressions will not prosper, but he who confesses and forsakes them will
find compassion." (Proverbs 28:13)
Message by: Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment