DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, October 22, 2025

🦋 Meditation verse - யோவான் 8 : 47 / John 8:47

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1723                                          ஆதவன் 26.10.2025 ஞாயிறு   


"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" ( யோவான் 8 : 47 ) 

ஒரு வீட்டில் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழும் பிள்ளைகள் பெற்றோர் கூறுவதற்குச் செவிகொடுப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், சில குடும்பங்களில் எல்லா பிள்ளைகளும் அப்படிப் பெற்றோருக்குக்  கீழ்ப்படிந்து வாழ்வதில்லை. பெற்றோர் எவ்வளவுதான் அன்புசெய்து அவர்களைப் பராமரித்தாலும் அவர்கள் கீழ்ப்படிவதில்லை. இதுபோலவே, உலகிலுள்ள எல்லா மனிதர்களும் தேவனால் உண்டாக்கப்பட்டவர்கள்தான்; அவரால் பராமரிக்கப்படுபவர்கள்தான்.  ஆனால், எல்லோரும் அவருக்குக் கீழ்ப்படிவதில்லை. 

ஆனால், தேவ வசனங்களுக்குச் செவிகொடுத்து வாழ்பவர்களே வேத அடிப்படையில் தேவனால் உண்டானவர்கள். நாம் தேவனால் உண்டானவர்கள் என்பதை உணர்த்துக்கொண்டால் அவருக்குக் காத்திருந்து அவர் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போம். எனவேதான் "தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" ( யோவான் 8 : 47 ) என்று இயேசு கிறிஸ்துக்  கூறினார். 

அப்படியானால் தேவனுக்குச் செவிகொடாதவர்கள் யார்? அவர்கள் பிசாசானவனால் உண்டானவர்கள் என்றார் இயேசு கிறிஸ்து. அவர் தனக்குச் செவிகொடாத யூதர்களைப்பார்த்துக் கூறினார், "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." ( யோவான் 8 : 44 )

அதாவது தேவ வசனத்துக்குக் கீழ்ப்படியாதவர்கள்  தங்களது பிதாவாகிய பிசாசின் இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறார்கள். மேலும் இயேசு கிறிஸ்து கூறியதன்படிப் பார்த்தால்  அவர்கள், மனுஷகொலைபாதகர்கள்; சத்தியம் இல்லாதவர்கள்; பொய்யர்கள். நாம் தேவனால் உண்டானவர்களா இல்லை பிசாசானவனால் உண்டானவர்களா என்பதை நமது பக்தி முயற்சிகளோ, ஆராதனைகளோ வெளிப்படுத்துவதில்லை. மாறாக தேவனது வசனத்துக்கு எந்த அளவு நாம் செவிகொடுக்கின்றோம் என்பதே வெளிப்படுத்தும். 

நான் ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பகாலத்தில் சென்ற ஆவிக்குரிய ஆலயத்தின் போதகர் மிகச்சிறப்பாக தேவனது வார்த்தைகளை பிரசங்கங்கம்  செய்வார். அவரும் மிகச்சிறந்த ஆவிக்குரிய மனிதர். ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஆலயத்தின் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் இரண்டு நபர்கள் கைகளை உயர்த்தி, துள்ளிக் குதித்து ஆராதிப்பதை பார்த்து நான் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால் அந்தப் போதகர் ஆராதனை முடிந்தபின்னர் அவர்களைத் தனியே அழைத்துத் தேவன் தனக்கு வெளிப்படுத்தியதை அவர்களுக்குக் கூறிக் கண்டிப்பார். எனக்கு முதலில் இது குறித்து எதுவும் புரியவில்லை.  

ஆனால் பின்னர் அந்த இரண்டு நபர்களைப்பற்றி ஒரு நபர்மூலம் அறிந்துகொண்டேன். ஆலயத்தில் துள்ளிக் குதிக்கும் அவர்கள் ஒரே இடத்தில்  வியாபாரம் செய்பவர்கள். அவர்கள் இருவருக்கும் தொழில் போட்டி இருந்தது. ஆலயத்தில் ஆவியில் நிறைந்து துள்ளிக் குதிக்கும் அவர்கள் சண்டையிடும்போது ஒருவருக்கொருவர் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் சாட்சிக்கேடாக வாழ்பவர்கள். அதே போட்டியில்தான் ஆலயத்திலும் போட்டிட்போட்டு ஆராதிக்கின்றனர். 

இது ஒரு உதாரணம்தான். பொதுவாக பல கிறிஸ்தவர்கள் இப்படித்தான் மற்றவர்களிடம் பொறாமையும், பகையுணர்வும், வெறுப்புணர்வும் கொண்டவர்களாக இருக்கின்றனர். கிறிஸ்து கூறுவதன்படி இவர்கள் தேவனால் உண்டானவர்களல்ல. ஆம் அன்பானவர்களே, "தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" அல்லாதவன் அவர்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள். நம்மை நாம் தேவனுக்கு உரியவர்கள் எனக் கருதினால் தேவ வசனங்களுக்குச் செவிகொடுப்பவர்களாக வாழ்வோம். பக்தி முயற்சிகளும் ஆராதனைகளும் இரண்டாம் பட்சமே!!

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                     


 “Inside the Seeds” 🌳

Scripture Meditation No. 1723
AATHAVAN – Sunday, 26 October 2025

“He who is of God hears the words of God.” — John 8:47 

Children who live under the care and authority of their parents naturally listen to what their parents say. Yet, not every child in every family does so. Some disobey their parents, no matter how lovingly they are raised or how carefully they are nurtured.

In the same way, all human beings in this world are created by God and sustained by His grace — but not everyone obeys Him.

Only those who listen to and live by the Word of God are, according to the Scriptures, truly born of God. When we realize that we are of God, we will wait upon Him and give careful attention to His Word. That is why Jesus Christ said, “He who is of God hears the words of God.” — John 8:47 NASB

Then who are those who do not listen to God? Jesus said that they are those who belong to the devil. Speaking to the Jews who refused to listen to Him, Jesus declared:

“You are of your father the devil, and you want to do the desires of your father. He was a murderer from the beginning, and does not stand in the truth because there is no truth in him. Whenever he tells a lie, he speaks from his own nature, because he is a liar and the father of lies.” — John 8:44 NASB

This means that those who refuse to obey the Word of God choose to do the desires of their father, the devil. According to the words of Jesus Christ, such people are murderers, devoid of truth, and liars.

It is not our religious efforts or acts of worship that reveal whether we belong to God or to the devil. Rather, it is how attentively we listen to and obey God’s Word that reveals our true identity.

When I was a young believer, I used to attend a church where the pastor was a deeply spiritual man and a powerful preacher of God’s Word. On Sundays, I noticed two people sitting in the front row, worshiping passionately — lifting their hands, leaping, and praising God with great emotion. I often wondered about their zeal.

But after the service, the pastor would sometimes call them aside and gently correct them about things God had revealed to him. At that time, I didn’t understand why.

Later, I learned from another believer that those two men were business competitors. Though they worshiped fervently in church, outside they were constantly quarrelling — cursing one another with harsh words and damaging their witness before others. Even their worship seemed to be driven by rivalry rather than reverence.

This is just one example. Sadly, many Christians today harbour jealousy, bitterness, and resentment toward others. According to the words of Christ, such people are not born of God.

Yes, beloved, “He who is of God hears the words of God.” Those who do not are of their father, the devil. If we truly believe we belong to God, let us live as people who listen to His Word with obedience and humility. Our piety and worship are secondary — obedience to God’s Word is what truly matters.

📖 Devotional Message by: Bro. M. Geo Prakash
                       

No comments: