"விதைகளின் உள்ளே" 🌳
இன்று கர்த்தர் "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்" என்கின்றார். நான் உன்னை எனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுகொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று ஒருவர் மற்றவரிடம் கூறுவதுபோல உள்ளது இது. அதாவது நம்மை அவருக்கு உரியவர்களாக மாற்றுவேன் என்கின்றார். இந்த உலகத்துக்குரிய திருமணங்கள் பலவேளைகளில் முறிவடைந்து விவாகரத்தில் போய் முடிவடையும். ஆனால் அப்படியில்லாமல் கிறிஸ்துவுடனான விவாகம் நித்தியமானது; முடிவில்லாதது.
விசுவாசி ஒருவர் மீட்பு அனுபவம் பெறுகிறார் என்றால், அவரை தேவன் தனது மணவாட்டியாகத் தெரிந்துள்ளார் என்று பொருள். இப்படி கிறிஸ்து ஒருவரைத் தெரிந்துகொள்வது அவரது கிருபையினால்தான். இதனையே இன்றைய வசனத்தில், "நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." என்று கூறப்பட்டுள்ளது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும் கூறியுள்ளார். "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு." ( எபேசியர் 2 : 8 ) ஆம், கிறிஸ்து நம்மைத் தெரிந்துகொண்டு அவரை நமக்கு வெளிப்படுத்துவது அவரது கிருபையினால்தான்.
இன்றைய வசனத்தில் நம்மை அவருக்கு மணவாட்டியாக அவர் தெரிந்துகொள்வேன் என்று கூறுகின்றார். அடுத்த வசனத்தில் அவர் கூறுகின்றார், "உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்." ( ஓசியா 2 : 20 ) ஆம், நாம் அவரால் தெரிந்துகொள்ளப்படும்போதுதான் மேலான சத்தியங்களை அறிந்து கர்த்தரை அறிந்துகொள்ளமுடியும்.
அன்பானவர்களே, இந்த உலகத்திலுள்ள எல்லா ஆசீர்வாதங்களிலும் மிகப் பெரிய ஆசீர்வாதம் கிறிஸ்துவை அறிந்துகொள்வதுதான். நாம் ஒவ்வொருவரையுமே தனக்கு ஏற்புடையவர்களாக தெரிந்துகொள்ள கிறிஸ்து விரும்புகின்றார். ஆனால் அதற்கு நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டியது அவசியம். நாம் நமது உள்ளத்தினை எந்த ஒளிவுமறைவுமின்றி அவரிடம் திறந்து காட்டவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. உண்மையான நீண்ட மண உறவுக்கு ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை அவசியம்.
மாய்மால வாழ்க்கை வாழ்ந்துகொண்டு வெறும் ஆராதனையிலும் வழிபாடுகளிலும் காலத்தைக் கழித்துக்கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை; அவரை நாம் தனிப்பட்ட விதத்தில் அறியவேண்டியதே அவசியம். அதற்கு நாம் நமது மாய்மாலங்களை விட்டுவிட்டு நமது உள்ளத்தினை எந்த ஒளிவுமறைவுமின்றி அவரிடம் திறந்து காட்டவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.
நமது வாழ்க்கையின் எல்லா குறை நிறைகளும் அவருக்குத் தெரியும். எனவே நாம் அவருக்கு அஞ்சவேண்டியதில்லை. "ஆண்டவரே, எனது உண்மையான நிலைமை இதுதான்" என்று நமது பாவ நிலைமையை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். "( I யோவான் 1:9)
ஆம் அன்பானவர்களே, "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. நம்மை ஏற்றுக்கொள்ள அவர் தயார்; அவரை ஏற்றுக்கொள்ள நாம் தயாரா?
“Inside the Seeds” 🌳
Scripture Meditation No. 1721
AATHAVAN – Friday, 24 October 2025
“I
will betroth you to Me forever; Yes, I will betroth you to Me in righteousness
and in justice, In favour and in compassion.” (Hosea 2:19 NASB)
For
every Christian believer, Christ is the Bridegroom, and we are His bride. The
Book of Revelation reveals this divine mystery — the Bridegroom and His Bride.
The Church and the believers form the Bride, and Christ alone is the
Bridegroom.
Today,
the Lord says, “I will betroth you to Me forever.” It is as though He is
saying, “I am ready to accept you as My life partner.” In other words,
He promises to make us His own. Earthly marriages often end in disappointment
or divorce, but the marriage with Christ is eternal and unbreakable.
When a
believer experiences salvation, it means that God has chosen that person as His
bride. Christ’s choosing is purely an act of His grace. That is why today’s
verse says, “I will betroth you to Me in righteousness and in justice, in favour
and in compassion.” The Apostle Paul also echoes this truth:
“For
by grace you have been saved through faith; and this is not of yourselves, it
is the gift of God.” (Ephesians 2:8 NASB)
Yes,
it is purely by His grace that Christ knows us and reveals Himself to us.
In the
next verse, the Lord adds: “And I will betroth you to Me in faithfulness. Then
you will know the Lord.” (Hosea 2:20 NASB)
Indeed,
only when He chooses and unites us with Himself can we truly know Him and
understand deeper truths.
Dear
beloved, among all the blessings in this world, the greatest blessing is to know
Christ personally. Christ longs to know each of us intimately as His own. But
for that to happen, our sins must be forgiven. We must open our hearts to Him —
without hiding anything. A genuine and lasting relationship requires a
transparent life.
There
is no meaning in living a superficial Christian life — spending our days in
mere worship and rituals without truly knowing Him. We must leave behind all
false appearances and open our inner being honestly before Him.
He already knows all our
weaknesses and shortcomings. Therefore, there is no need to fear. Let us say, “Lord,
this is my true condition,” and confess our sins to Him.
“If we
confess our sins, He is faithful and righteous, so that He will forgive us our
sins and cleanse us from all unrighteousness.” (1 John 1:9 NASB)
Yes,
beloved, the Lord Jesus Christ says, “I will betroth you to Me forever; I
will betroth you to Me in righteousness and in justice, in favour and in
compassion.”
He is ready to accept us — are we ready to accept Him?

No comments:
Post a Comment