வேதாகமத் தியானம் எண் - 1728 ஆதவன் 31.10.2025 வெள்ளி
"நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது." ( லுூக்கா 16 : 15 )
சமூகத்தில் மதிப்பும் மரியாதையம் பெற்றுள்ள மனிதர்கள் சிலவேளைகளில் தங்களது துன்மார்க்கச் செயல்கள் காரணமாக போலீசாரால் கைதுசெய்யப்படுவதையும், நீதிமன்ற வாசல்களில் ஏறி இறங்குவதையும், சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவதையும் பார்க்க முடியும். குறிப்பாக, நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படும்போது மாற்றுக்கட்சியினரை ஆளும் கட்சியினர் இப்படிக் கைது செய்கின்றனர்.
ஆனால் கைதுசெய்யப்படும் மனிதர்கள் இதுவரை சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெற்று பெருமையாக வாழ்ந்தவர்கள். அதாவது அவர்கள் மனிதர்முன் நீதிமான்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டவர்கள். இப்போது இவர்கள்மேல் குற்றம் சுமத்துமனிதர்களும் நீதிமான்கள்போல பேசுவார்கள். ஆனால் இருவருக்கும் மனநிலையில் அடிப்படையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை.
மனிதர்களாகிய நாம் ஒருவரின் பதவி, அவரிடமுள்ள செல்வம், அவருக்கு மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கு இவைகளை மட்டும் பார்த்து அவர்களுக்கு மதிப்பளிக்கின்றோம். ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைமுறை, அவனது மனநிலை, இருதயத்தின் நினைவுகள் இவைகள் நமக்குத் தெரியாது. ஆனால் இவைகளை எல்லாம் தேவன் அறிவார். எனவே, இத்தகைய மனிதர்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது." மனிதனே, நீ உன்னைக்குறித்துப் பெருமையாக எண்ணிக்கொள்கின்றாய், மக்கள் உன்னை மதிக்கின்றனர், ஆனால், எனக்கு நீ அருவருப்பானவன் என்கின்றார் கர்த்தர்.
மனிதன் முகத்தைப் பார்க்கின்றான், ஆனால், கர்த்தரோ இருதயத்தில் மறைந்திருக்கும் நினைவுகளையும் பார்க்கின்றார். அன்று ஈசாயின் புதல்வர்களுள் ஒருவனை இஸ்ரவேலின் ராஜாவாக நான் தெரிந்துகொண்டேன், அவனை அபிஷேகம் செய் என்றுகூறி சாமுவேலை தேவன் ஈசாயின் வீட்டிற்கு அனுப்பினார். அப்போது, ஈசாயின் மகன் எலியாபைப் பார்த்து சாமுவேல் இவன்தான் கர்த்தர் தெரிந்துகொண்டவன் என்று எண்ணினான். அப்போது, "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்." (1 சாமுவேல் 16:7)
ஆம் அன்பானவர்களே, நாம் நமது உண்மைக் குணத்தை மறைத்து ஒருவேளை மக்களிடம் நல்ல பெயரையும் மதிப்பையும் பெறலாம். ஆனால், அப்படி மக்கள் நம்மை மேன்மையாகக் கருதுவது கர்த்தரின் பார்வைக்கு அருவருப்பாக இருக்கின்றது. மனிதக்கழிவுகள் நமக்கு அருவருப்பாக உள்ளன; ஆனால் பன்றிகளுக்கு அவை விருப்பமான உணவாக இல்லையா? நமது செயல்பாடுகள், இருதயத்தின் நோக்கம் அனைத்தையும் அவர் அறிவார். எனவே, நமது உண்மையான முகத்தை மனிதர்களுக்குமுன்னும் தேவனுக்குமுன்னும் காட்டி ஒளிவு மறைவற்றவர்களாக தேவன் நம்மை மேன்மையாகக் கருதக்கூடிய வழக்கை வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Within the Seeds” 🌳
Bible Meditation No. 1728
AATHAVAN – Friday, 31 October 2025
“You
are those who justify yourselves in the sight of men, but God knows your
hearts; for that which is highly esteemed among men is detestable in the sight
of God.” (Luke 16:15, NASB)
In
society, we often see people who were once respected and honoured being
arrested for their wicked deeds, standing before courts, or even being
imprisoned. Especially when there is a change in government, those who belong
to the opposition are often detained by those in power.
Yet,
many of these arrested individuals were once held in high regard, living
proudly with social prestige and recognition. In other words, they presented
themselves as righteous before men. Now, those who accuse them speak as though
they themselves are righteous — but in truth, there is no difference between
the two in their hearts.
As
human beings, we often value others based on their position, wealth, or
influence among people. But we do not know their personal life, their inner
attitude, or the thoughts of their heart. However, God knows all these things.
Therefore, Jesus Christ said, “You are those who justify yourselves in the
sight of men, but God knows your hearts; for that which is highly esteemed
among men is detestable in the sight of God.” (Luke 16:15, NASB)
O man,
you may think highly of yourself and others may honour you — but the Lord says,
“To Me, you are detestable.”
Man
looks at the outward appearance, but the Lord looks at the heart. When God sent
Samuel to the house of Jesse to anoint one of his sons as the king of Israel,
Samuel saw Eliab and thought, “Surely this is the Lord’s anointed before
Him.” But the Lord said to Samuel, “Do not look at his appearance or at the
height of his stature, because I have rejected him; for God does not see as man
sees, since man looks at the outward appearance, but the Lord looks at the
heart.” (1 Samuel 16:7, NASB)
Yes,
beloved, we may hide our true character and earn a good name and respect among
people for a time. But what people consider honourable may be detestable in the
eyes of the Lord. Human waste is abominable to us, yet it is delightful food
for pigs! In the same way, our actions and the motives of our hearts are fully
known to God.
Therefore,
let us live honestly, without hypocrisy — showing our true selves both before
men and before God — so that the Lord may find us truly honourable in His
sight.
📖 Message by: Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment