DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, October 23, 2025

🦋 Meditation verse - எபிரெயர் 4: 16 / Hebrews 4:16

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1726                                           ஆதவன் 29.10.2025 புதன்      


"ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4: 16)

தேவனோடுள்ள உறவில் பழைய ஏற்பாட்டுக்கால மக்களுக்கும் நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனை பயப்படத்தக்க ஒருவராகவே பார்த்தனர். தேவனைக்கண்டு பயந்து நடுங்கினர். எனவே, அன்று இஸ்ரவேல் மக்கள்  "மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக,   பேசினால்  நாங்கள்   செத்துப் போவோம் என்றார்கள்." (யாத்திராகமம் 20:19) ஆனால் ஒரு சில பழைய ஏற்பாட்டுக்கால பரிசுத்தவான்கள் தேவனோடு பேசியுள்ளனர். ஆனாலும் அவர்கள் ஒரு தகப்பனோடு பேசுவதுபோல தைரியமாக அவரது குரலைக் கேட்டு மகிழவில்லை. அவரது குரலுக்கு ஒரு அதிகாரிக்குக் கீழ்ப்படிவதுபோலக் கீழ்ப்படிந்தனர்.  

ஆனால் இன்று நாம் தேவன் நம்மோடு பேசுவதை மகிமையான, மகிழ்ச்சியான காரியமாக எண்ணுகின்றோம். அதற்காக ஏங்குகின்றோம்.  ஆம் இதுதான் பழைய ஏற்பாட்டுக்காலத்துக்கும் புதிய ஏற்பாட்டுக்காலத்துக்குமுள்ள வேறுபாடு. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கிருபையின் பிரமாணத்தை நமக்குத் தந்துள்ளார். நாம் தேவனைக்கண்டு பயப்படத்தேவையில்லை, அவர் நமது அப்பா என்று இயேசு கிறிஸ்து நமக்குத்  தேவனை அடையாளம் காட்டினார். அப்போஸ்தலரான பவுலும், "மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்." (கலாத்தியர் 4;6) என்று கூறுகின்றார். 
 
ஆம் அன்பானவர்களே, "அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்." (ரோமர் 8:15) எனவே கிறிஸ்துவிடம் நாம் நெருங்கிச்செல்லப்  பயப்படவேண்டாம். அதனையே இன்றைய தியான வசனத்தில், "தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" என்று வாசிக்கின்றோம்.  அவரிடம் நாம் நெருங்கிச் செல்லும்போது இந்த வசனம் கூறுவதுபோல நாம் அவரது இரக்கத்தையும் சகாயஞ்செய்யும் கிருபையினையும் அடைவோம். 

பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் கிருபாசனம் இருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் ஆசாரியன் மட்டுமே நுழைய முடியும். அதுவும், தன்னை மிருகங்களின் இரத்தத்தால் கழுவி பாவ நிவாரணம் பெற்று அவன் அங்குசென்று மக்களுக்காக வேண்டுதல் செய்வான். ஆனால், விண்ணகத்திலிருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துத்  தனது சுய இரத்தத்தைச் சிந்தி பிரதான ஆசாரியனாக நுழைந்துள்ளார். எனவே, நாம் அவரிடம் தைரியமாகச் செல்லலாம். 

காரணம்,  "இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்." (எபிரெயர் 10:10) கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்ட அனைவருமே ஆசாரியர்கள்தான். எனவே நாம் தைரியமாக விண்ணக கிருபாசனத்தண்டையிலே சேரத் தகுதிபெற்றுள்ளோம். 

"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 ) என்கின்றார் பேதுரு. எனவே நாம்  தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரமுடிகின்றது. 

ஆம் அன்பானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஏற்ப்படுத்தின இரட்சிப்பின் மேன்மை இதுதான். எனவே, அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுவோம். அப்படி மன்னிப்பைப் பெறும்போது, ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே நம்மால் சேர முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                


“Within the Seeds” 🌳

Scripture Meditation No. 1726
AATHAVAN – Wednesday, 29 October 2025

“Therefore, let’s approach the throne of grace with confidence, so that we may receive mercy and find grace for help at the time of our need.” (Hebrews 4:16)

There is a great difference between how people in the Old Testament related with God and how we relate to Him today. The people of the Old Testament viewed God as One to be feared. They trembled in His presence. Thus, the Israelites said to Moses,

“Speak to us yourself and we will listen; but do not have God speak to us, or we will die.” (Exodus 20:19, NASB)

A few of the saints in the Old Testament did speak with God, but even they did not do so with the joyful confidence of children speaking to their Father. They heard His voice and obeyed it with the reverence of servants before a Master.

But today, we count it a glorious and joyous privilege to hear God speak to us. We long for His voice. Yes — this is the fundamental difference between the Old and the New Covenants.

Our Lord Jesus Christ has given us the covenant of grace. We no longer need to fear God as a distant Judge, for Jesus revealed Him to us as our Father. The Apostle Paul says, “Because you are sons, God has sent the Spirit of His Son into our hearts, crying out, ‘Abba! Father!’” (Galatians 4:6, NASB)

Dear beloved, “For you have not received a spirit of slavery leading to fear again, but you have received a spirit of adoption as sons, by which we cry out, ‘Abba! Father!’”
(Romans 8:15, NASB)

Therefore, we need not be afraid to draw near to Christ. As today’s key verse says, “Let us approach the throne of grace with confidence.” When we draw near to Him, we will indeed receive His mercy and find grace to help in time of need.

In the Old Testament, only the high priest could enter the Most Holy Place, where the mercy seat was located in the tabernacle. Even then, he had to cleanse himself with the blood of animals and make atonement for his sins before entering to intercede for the people.

But our Lord Jesus Christ has entered the heavenly Most Holy Place once for all, not with the blood of animals, but with His own precious blood. He became the eternal High Priest on our behalf. Therefore, we can now boldly come before Him.

For, “By this will, we have been sanctified through the offering of the body of Jesus Christ once for all.” (Hebrews 10:10, NASB)

Everyone washed by the blood of Christ has become a priest before God. Hence, we are qualified to approach the heavenly throne of grace with boldness.

As Peter declares,

“But you are a chosen people, a royal priesthood, a holy nation, a people for God’s own possession, so that you may proclaim the excellencies of Him who has called you out of darkness into His marvellous light.” (1 Peter 2:9, NASB)

Therefore, we can confidently approach the throne of grace.

Yes, beloved, this is the greatness of the salvation that the Lord Jesus Christ has prepared for us. Let us confess our sins before Him and seek His forgiveness. And when we receive His mercy, we can boldly draw near to the throne of grace — to obtain the grace that helps us in our time of need.

📖 Devotional Message by: Bro. M. Geo Prakash


No comments: