"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1703 ஆதவன் 06.10.2025 திங்கள்

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்." ( யாத்திராகமம் 14 : 14 )
நாம் சிறு கைக்குழந்தையாக இருந்தபோது நம்மால் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்தோம். அப்போது நமது அனைத்துத் தேவைகளையும் நமது தாய்தான் செய்தார்கள். மட்டுமல்ல, நமது தகப்பனும், நெருங்கிய உறவினர்களும் நமக்கான அனைத்துப் பணிவிடைகளையும் செய்தனர்; நாம் சும்மா இருந்தோம். இதுபோலவே நாம் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது நமக்கான அனைத்தையும் தேவனே செய்து முடிப்பார்.
இப்படிச் சொல்வதால், நாம் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கவேண்டுமென்று பொருளல்ல. நாம் நமது கடமைகளைச் செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது, நம்மால் முடியாத காரியங்களை கர்த்தர் நமக்காகச் செய்வார். ஒருவேளை நம்மால் எதிர்த்துப் போராட முடியாத நோயாக இருக்கலாம், பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம், நம்மை எதிர்த்துச் செயல்படும் எதிரிகளின் செயல்பாடாக இருக்கலாம் இவை அனைத்திலும் கர்த்தர் நமக்காக யுத்தம்பண்ணுவார்; நாம் சும்மாயிருப்போம்.
வேதத்தில் நாம் "கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர் அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்." ( நாகூம் 1 : 2 ) என்று வாசிக்கின்றோம். அவர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். இங்கு "தம்முடைய சத்துருக்களுக்கு" என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதாவது கர்த்தரது பிள்ளைகளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் அவரது சத்துருக்கள். அவர்கள்மேல் அவர் கோபம் கொள்கின்றார்.
பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டில்கூட நாம் "உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." ( 2 தெசலோனிக்கேயர் 1 : 6 ) என்று வாசிக்கின்றோம். தேவனுடைய பிள்ளைகளுக்கு உபத்திரவம் கொடுப்பவர்களை அவர் உபாத்திரவப்படுத்துகின்றார்; உபத்திரவப்படுகின்ற தனது பிள்ளைகளுக்கு இளைப்பாறுதலை அளிக்கின்றார்.
கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வதால் நாம் நமக்கு எதிராகச் செயல்படுபவர்களை எதிர்த்துப் போராடவேண்டியதில்லை; அவர்களைப் பழிவாங்கும் செயல்களிலும் நாம் ஈடுபடக்கூடாது என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. ஆம், "பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்." ( எபிரெயர் 10 : 30 )
கர்த்தர் நமக்காக யுத்தம் செய்யவேண்டுமானால் நாம் இந்தத் தியானத்தின் ஆரம்பத்தில் பார்த்ததுபோல நமது குணங்கள் குழந்தைத்தனமாக மாறவேண்டும்; தேவ வார்தைகளுக்கு நாம் கீழ்ப்படியவேண்டும். ஆம், "அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு." ( ரோமர் 12 : 20 - 21 )
இப்படித் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்வோமானால், "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்." என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Inside the Seeds” 🌳
Scripture Meditation No. 1703
AATHAVAN – Monday, 06.10.2025
“The Lord will fight for you,
while you keep silent.” (Exodus 14:14 NASB)
When we were little infants,
we could do nothing by ourselves. At that stage, it was our mothers who
provided for all our needs. Not only that, but our fathers and close relatives
also took care of everything concerning us, while we simply rested. In the same
way, when we live a life pleasing to God, He will accomplish all that concerns
us.
This does not mean that we
should sit idle and do nothing. We must fulfil our responsibilities. But when
we do so, the Lord will take care of the matters that are beyond our ability.
It may be a sickness that we cannot overcome, a financial crisis, or enemies
who rise against us. In all these things, the Lord Himself will fight for us
while we remain still.
The Bible says: “A jealous and
avenging God is the Lord; The Lord is avenging and wrathful. The Lord takes
vengeance on His adversaries, And He reserves wrath for His enemies.” (Nahum
1:2). Notice that it says, “His enemies.” Those who act against the children of
God become His enemies, and He will show His anger toward them.
Not only in the Old Testament,
but also in the New Testament, we read: “For after all it is only right for God
to repay with affliction those who afflict you, and to give relief to you who
are afflicted, along with us, when the Lord Jesus will be revealed from heaven
with His mighty angels.” (2 Thessalonians 1:6–7). God brings affliction upon
those who trouble His children, and He grants rest to those who suffer for His
sake.
Since the Lord fights for us,
we need not rise against those who oppose us, nor should we take revenge. The
Bible warns us clearly: “For we know Him who said, ‘Vengeance is Mine, I will
repay.’ And again, ‘The Lord will judge His people.’” (Hebrews 10:30).
But for the Lord to fight on
our behalf, our character must be childlike, as we saw in the beginning of this
meditation, and we must submit to His Word. As it is written: “But if your
enemy is hungry, feed him; if he is thirsty, give him a drink; for in so doing,
you will heap burning coals on his head. Do not be overcome by evil, but
overcome evil with good.” (Romans 12:20–21).
If we live such a life that is
pleasing to God, then surely, as He has promised: “The Lord will fight for you,
while you keep silent.” (Exodus 14:14).
God’s Message: Bro.
M. Geo Prakash
No comments:
Post a Comment