'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,051 டிசம்பர் 14, 2023 வியாழக்கிழமை
"இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்." ( யாக்கோபு 1 : 15 )
இச்சை என்பது எதனைப்பற்றியாவது நாம் அளவுக்கதிக ஆசைப் படுவதைக் குறிக்கின்றது. இச்சை பாவம் என்று வேதாகமம் கூறுவதற்குக் காரணம் என்ன என்பதனை இன்றைய வசனம் விளக்குகின்றது. அதாவது இப்படி நாம் இச்சைக் கொள்ளும்போது அது பல்வேறுவிதப் பாவங்களைச் செய்யத் தூண்டுகின்றது. அப்படி நாம் பாவத்தில் விழும்போது ஆத்தும மரணத்தை அடைகின்றோம்.
எனவேதான் தேவன் கொடுத்த பத்துக்கட்டளைகளில் இதனை ஒரு கட்டளையாகக் கொடுத்தார். "பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்." ( யாத்திராகமம் 20 : 17 ) என்று வாசிக்கின்றோம்.
இன்றைய பத்திரிகைகளில் அன்றாடம் வரும் கொலை, களவு, கற்பழிப்பு, ஏமாற்று போன்ற காரியங்களுக்குக் காரணம் இச்சைதான். ஆனால் நாம் இச்சையினால் வரும் விளைவுகளைப் பாவமாக எண்ணுகின்றோமேத்தவிர இச்சை பாவம் என்று எண்ணுவதில்லை. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.' ( ரோமர் 7 : 7 )
நாம் மற்றவர்களை உண்மையாக அன்புசெய்யும்போது அவர்களது உடைமைகளை நாம் இச்சிக்கமாட்டோம். இதனையே அப்போஸ்தலரான பவுல், "எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது." ( ரோமர் 13 : 9 ) என்கின்றார்.
எனவே இச்சையை மேற்கொள்ள ஒரே வழி கிறிஸ்து கூறிய மூல கட்டளையான, "தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பது" எனும் கட்டளையை நாம் கைக்கொள்வதுதான். நாம் அனைவருமே ஒரே தேவனால் படைக்கப்பட்டவர்கள், அவரது சாயல் நம் ஒவ்வொருவரிலும் இருக்கின்றது என்பதனை உணர்வதுதான்.
இன்று நம்மிடம் இருக்கும் பண ஆசை, சொத்துக்களை வாங்கிக் குவிக்கவேண்டும் எனும் ஆசை, எல்லோரையும்விடச் சிறந்தவன் எனும் பெயர்பெறவேண்டும் எனும் ஆசை, அப்படிப் பெயர்பெறுவதற்காக நாம் செய்யும் செயல்கள் இவை அனைத்துமே இச்சையின் வெளிப்பாடுதான்.
அன்பானவர்களே, நாம் இந்த இச்சை எனும் குணத்தை நம்மைவிட்டு அகற்றாவிட்டால் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு கூறுவதுபோல அந்த இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, அது நமக்கு ஆத்தும மரணத்தைக் கொண்டுவரும்.
ஆவிக்குரிய வாழ்க்கை வாழ நம்மைக் கிறிஸ்துவுக்குக் கையளித்து மாம்சஉணர்ச்சிகளை மேற்கொள்ளும்போது மட்டுமே நாம் இச்சையினை மேற்கொள்ளமுடியும். பெயரளவு கிறிஸ்தவர்களாக வெறும் பக்திச் சடங்குகளை மட்டும் கடைபிடித்துக் கொண்டிருப்போமானால் இச்சையினை மேற்கொள்ள முடியாது. மேலும், இச்சையினை மேற்கொண்டு ஆவிக்குரியவர்களாக நாம் வாழும்போது நியாயத்தீர்ப்பில் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளமுடியும். "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." ( ரோமர் 8 : 1)
ஆவியின்படி வாழ நம்மை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்போம். தேவனுடைய சத்திய ஆவியாகிய பரிசுத்த ஆவியனானவர் நம்மை தேவனுக்கேற்ற நேரான சீரான வழியில் நடத்துவார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
தொடர்புக்கு:- 9688933712
LUST
'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,051 Thursday, December 14, 2023
"Then
when lust hath conceived, it bringeth forth sin: and sin, when it is finished,
bringeth forth death." (James 1: 15)
Lust refers to our excessive
desire for something. Today's verse explains why the Bible says that lust is a
sin. That is, when we lust like this, it prompts us to commit various sins.
Thus, when we fall into sin, we attain spiritual death.
That is why God gave this as
a commandment in the Ten Commandments. He said, "Thou
shalt not covet thy neighbour's house, thou shalt not covet thy neighbour's
wife, nor his manservant, nor his maidservant, nor his ox, nor his ass, nor any
thing that is thy neighbour's." (Exodus 20: 17)
When we read the newspapers
today, we could see, lust is the cause of murder, robbery, rape and cheating. But
we do not consider lust as a sin, as we consider the consequences of lust as
sin. That is why the apostle Paul says, "...for I had not known lust, except the law
had said, Thou shalt not covet." (Romans 7: 7)
When we truly love others we
do not covet their possessions. This is what the apostle Paul said, "For
this, Thou shalt not commit adultery, Thou shalt not kill, Thou shalt not
steal, Thou shalt not bear false witness, Thou shalt not covet; and if there be
any other commandment, it is briefly comprehended in this saying, namely, Thou
shalt love thy neighbour as thyself." (Romans 13: 9)
So the only way to overcome
lust is to follow Christ's commandment, "Love thy neighbour as thyself”.
It is to realize that we are all created by the same God and His image is in
each of us.
The desire for money that we
have today, the desire to buy and accumulate property, the desire to be known
as better than everyone else, and the actions we do to gain such fame are all
manifestations of lust.
Beloved, if we do not rid
ourselves of this character of lust, as the apostle James says in today's
meditation verse, that lust will conceive and give birth to sin, and when the
sin is complete, it will bring us soul death.
We can only overcome lust
when we give ourselves over to Christ to live a spiritual life. As nominal
Christians, if we observe only devotional rituals, we cannot overcome lust. When
we live as spiritual beings without lust, we can escape punishment in judgment.
"There
is therefore now no condemnation to them which are in Christ Jesus, who walk
not after the flesh, but after the Spirit." (Romans 8: 1)
Let us commit ourselves to
Christ to live according to the Spirit. God's Spirit of truth, the Holy Spirit,
will lead us in a straight and even path to God.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash