"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1867
🔆 2026 மார்ச் 19, வியாழன்
"லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்." (நெகேமியா 8: 11,12)
இன்றைய தியான வசனம் பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்ட இஸ்ரவேல் மக்களைப்பற்றி கூறுகின்றது. பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான இஸ்ரவேலர் எருசலேம் நகரின் மதில் சுவரைப் பல்வேறு தடைகளுக்குப்பின் கட்டிமுடிந்தனர். அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் தேவனுக்கு நன்றி செலுத்தும்படி அனைவரும் ஒன்றுகூடினர். நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், லேவியர்களும் "தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்." (நெகேமியா 8: 8)
அடிமைத்தனத்தின் துன்பங்களை அனுபவித்திருந்த அந்த மக்களுக்குத் தங்களுக்கு விடுதலையளித்த தேவனுக்கு நன்றி செலுத்துவது முக்கியமான காரியமாக இருந்தது. தங்களது பாவங்களே தங்களது அடிமைத்தனத்துக்கு மூல காரணம் என்பதனை அவர்கள் உணர்த்துகொண்டனர். எனவே அவர்கள் நியாயப்பிரமாணம் வாசிக்கப்பட்டபோது தங்களது மனம் வருத்தப்பட்டு அழுதனர்.
"ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்". (நெகேமியா 8: 9)
"லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்". (நெகேமியா 8: 11)
ஆம் அன்பானவர்களே, இது என்றோ நடந்த சம்பவம் மட்டுமல்ல, இன்றும் பாவ உணர்வடையும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அனுபவிக்கும் மீட்பு அனுபவமாகும். நமது பாவங்களை நாம் உணர்த்து அறிக்கையிட்டு நமக்குள் மாற்றம் ஏற்படுத்துவதை நாம் உணர்ந்துகொள்ளும்போது நமக்குள் அழுகை ஏற்படுகின்றது. மனமகிழ்சி உண்டாகின்றது. அன்று இஸ்ரவேல் மக்கள் பாவ உணர்வடைந்து அழுதபோது, அழாதிருங்கள் இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்று லேவியர்கள் மக்களை உற்சாகமூட்டினார்கள்.
இதுபோலவே பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு அதிசயமாக தேவனால் விடுவிக்கப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரி அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான். பவுலும் சீலாவும், "அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப்போஸ்தலர் நடப்படிகள் 16: 32, 33)
"பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாய் இருந்தான்" (அப்போஸ்தலர் நடப்படிகள் 16: 34) என்று வாசிக்கின்றோம்.
வேதவசனங்களை நாம் கேட்கும்போது தேவனுக்கேற்ற துக்கம் உண்டாகுமானால் நாம் இரட்சிப்பு அடைவது உறுதி. அந்தத் துக்கம் நமக்கு மகிழ்ச்சியையே உண்டாக்கும். "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." (2 கொரிந்தியர் 7: 10) என்று வாசிக்கின்றோம்.
வேத வார்த்தைகள் என்றைக்காவது உங்கள் உள்ளத்தில் பாவ உணர்வைத் தூண்டியுள்ளனவா? நான் இப்படிப்பட்டவனாக இருந்திருக்கிறேனே என என்றாவது நீங்கள் எண்ணிப்பார்த்ததுண்டா? அன்று இப்படி எண்ணியதால்தான் இஸ்ரவேலர் வேத வசனங்களைக் கேட்டு அழுதார்கள்; பவுல் கூறிய வேத வசனங்களைக்கேட்டு சிறைச்சாலை அதிகாரி மனம்திரும்பினான். ஆம், வேத வசனங்களை உலக ஆசீர்வாதம் பெறுவதற்காக வாசிக்காமல், நமது ஆத்தும அழுக்கை நீக்கும் வார்த்தைகளாக விசுவாசித்து வாசித்து ஏற்றுக்கொள்வோமானால் பாவ உணர்வடைவோம்; அப்போது மீட்படைவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"Inside the Seeds" 🌳
📖 AATHAVAN
Bible Meditation - No. 1867
🔆
Thursday, March 19, 2026
"So the Levites calmed
all the people, saying, 'Be still, for the day is holy; do not be grieved.'
Then all the people went away to eat, to drink, to send portions and to
celebrate a great festival, because they understood the words which had been made
known to them." (Nehemiah 8:11-12)
Today’s meditation verse
speaks about the people of Israel receiving forgiveness for their sins. After
returning from Babylonian captivity, the Israelites completed the rebuilding of
the walls of Jerusalem despite many obstacles. Once the work was finished, they
gathered together to give thanks to God. Nehemiah, Ezra the priest and scribe,
and the Levites "read from the book, from the law of God, interpreting
they gave the sense so that they understood the reading." (Nehemiah 8:8)
For those who had endured
the miseries of slavery, offering thanks to the God who delivered them was of
utmost importance. They realized that their own sins were the root cause of
their captivity. Therefore, as the Law was read, their hearts were moved to
sorrow and they wept.
"Then Nehemiah, who was
the governor, and Ezra the priest and scribe, and the Levites who taught the
people said to all the people, 'This day is holy to the Lord your God; do not
mourn or weep.' For all the people were weeping when they heard the words of
the law." (Nehemiah 8:9)
"So, the Levites calmed
all the people, saying, 'Be still, for the day is holy; do not be
grieved.'" (Nehemiah 8:11)
Yes, dearly beloved, this is
not just an event that happened long ago; it is the experience of redemption
that every Christian undergoes today when they come to a conviction of sin.
When we recognize and confess our sins, and realize the transformation happening
within us, it often brings us to tears. Yet, it also brings deep joy. Just as
the Levites encouraged the weeping Israelites by saying, "Do not weep, for
this day is holy; do not be grieved," God comforts us.
Similarly, when Paul and
Silas were imprisoned and miraculously released by God, the jailer took them to
his home. Paul and Silas "spoke the word of the Lord to him together with
all who were in his house. And he took them that very hour of the night and
washed their wounds, and immediately he was baptized, he and all his
household." (Acts 16:32-33)
We further read: "And
he brought them into his house and set food before them, and rejoiced greatly,
having believed in God with his whole household." (Acts 16:34)
If "godly sorrow"
arises within us when we hear the Word of God, our salvation is certain. That
sorrow ultimately produces joy. As it is written: "For the sorrow that is
according to the will of God produces a repentance without regret, leading to
salvation, but the sorrow of the world produces death." (2 Corinthians
7:10)
Have the words of Scripture
ever stirred a sense of sin within your heart? Have you ever reflected and
thought, “Was I really such a person?” It was because they felt this way that
the Israelites wept when they heard the words of Scripture; and the jailer
repented when he heard the words spoken by Paul. Yes, if we read the Scriptures
not merely to receive worldly blessings but believe and accept them as words
that cleanse the impurity of our soul, we will become conscious of our sin; and
then we will receive salvation.
God’s Message: Bro. M. Geo
Prakash
No comments:
Post a Comment