- Sr. Amutha ICM
Slavery to Brotherhood: The Transforming Power of Christian Love (Philemon 1:7–20)
Grace must become visible in our relationships. In Paul's letter to Philemon, three lives intersect—Onesimus, Philemon and Paul. Through their story, we see how the Scripture breaks down human barriers and transforms broken relationships.
1. Onesimus: A Life Renewed by Grace
Onesimus means "useful." Once a runaway slave, he encounters Paul and discovers a new identity in Christ. Paul writes, "Formerly he was useless to you, but now he is indeed useful to you and to me." He sends him back not as a slave, but as his beloved son and "very heart." His story reminds us that no past failure is beyond the transforming power of God's grace.
2. Philemon: A Heart Called to Forgive
Philemon is challenged to do something even more difficult: to welcome Onesimus not as a slave but as a beloved brother in Christ. Paul does not command him but appeals to his love, asking that his goodness may come freely, not by compulsion. The Gospel calls Philemon to surrender his rights and allow love to overcome resentment and social divisions.
3. Paul: A Mediator of Reconciliation
Paul stands between the two and offers to bear the cost of reconciliation: "If he has wronged you at all, or owes you anything, charge that to my account." His willingness to assume the debt reflects the self-giving love of Christ, who takes upon Himself the burden of our sins to restore our relationship with God.
Where do we find ourselves in this story today? Are we Onesimus, needing God's grace to renew our lives? Are we Philemon, called to forgive and welcome others without conditions? Or are we Paul, willing to build bridges and bear the cost of reconciliation?.
The true test of Christian love is how we transform our relationships. In Christ, strangers become brothers and sisters, debts give way to forgiveness, and broken relationships become opportunities for grace. May we become instruments of this transforming love. Amen.
அடிமைத்தனத்திலிருந்து சகோதரத்துவத்திற்கு: கிறிஸ்தவ அன்பின் மாற்றும் வல்லமை (பிலேமோன் 1:7–20)
கடவுளின் அருள் நம்முடைய உறவுகளில் வெளிப்பட வேண்டும். புனித பவுல் பிலேமோனுக்கு எழுதிய திருமுகத்தில் மூன்று மனிதர்களின் வாழ்க்கையை நாம் சந்திக்கிறோம் – ஒனேசிமு, பிலேமோன், பவுல். இவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளின் வழியாக, இறை வார்த்தை மனிதர்களுக்கிடையே இருக்கும் தடைகளை உடைத்து, முறிந்த உறவுகளை எவ்வாறு புதுப்பிக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.
1. ஒனேசிமு: இறையருளால் புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கை
ஒனேசிமு என்ற பெயருக்கு பயனுள்ளவன் என்று பொருள். ஒரு காலத்தில் தன் தலைவரிடமிருந்து தப்பியோடிய அடிமையாக இருந்த அவன், புனித பவுலைச் சந்தித்ததன் வழியாக கிறிஸ்துவில் ஒரு புதிய அடையாளத்தைக் கண்டு கொள்கிறான். பவுல் எழுதுகிறார்: "முன்பு அவன் உமக்குப் பயனற்றவனாக இருந்தான்; இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பயனுள்ளவனாக இருக்கிறான்."
பவுல் அவனை மீண்டும் அனுப்பும்போது ஓர் அடிமையாக அல்ல, தன் அன்பு மகனாகவும், தன் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர் ஆகவும் அனுப்புகிறார்.
ஒனேசிமுவின் வாழ்க்கை நமக்கு ஓர் உண்மையை நினைவூட்டுகிறது: நம்முடைய கடந்தகாலத் தவறுகளோ தோல்விகளோ எதுவாக இருந்தாலும், அவற்றைவிட இறைவனின் அருள் வல்லமையானது. அந்த அருள் நம் வாழ்க்கையைப் புதிதாக்கும்.
2. பிலேமோன்: மன்னிக்கும் மனதிற்கு அழைக்கப்படுபவர்
பிலேமோனுக்கு இன்னும் பெரியதொரு சவால் காத்திருக்கிறது. ஒனேசிமுவை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஆனால் முன்பு இருந்ததைப்போல ஓர் அடிமையாக அல்ல, கிறிஸ்துவில் அன்பான சகோதரனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பவுல் அவருக்குக் கட்டளை இடவில்லை. மாறாக, அன்பின் அடிப்படையில் வேண்டுகோள் விடுக்கிறார். பிலேமோன் செய்யும் நன்மை கட்டாயத்தினால் அல்ல, மனமுவந்து செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.
நற்செய்தி நமக்கும் இதே சவாலை முன்வைக்கிறது. நம்முடைய உரிமை, பெருமை, மனக்கசப்பு, சமூக வேறுபாடுகள் ஆகியவற்றை விட்டுவிட்டு, அன்பிற்கு முதலிடம் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோமா? மன்னிப்பின் வழியாக மற்றவர்களைச் சகோதர சகோதரி களாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது.
3. பவுல்: ஒப்புரவுக்கு வழி அமைப்பவர்
பவுல் இந்த இருவருக்கும் இடையே ஒரு பாலமாக நிற்கிறார். அவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்கான பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்ள முன்வருகிறார்.
"அவன் உமக்கு ஏதாவது தீங்கு செய்திருந்தாலோ, கடன்பட்டு இருந்தாலோ, அதை என் கணக்கில் எழுதிவிடும்" என்று கூறுகிறார்.
பவுலின் இந்த மனப்பான்மை கிறிஸ்துவின் தன்னலமற்ற அன்பை நமக்கு நினைவூட்டுகிறது. கிறிஸ்து நம்முடைய பாவங்களின் சுமையைத் தம்மீது ஏற்றுக்கொண்டு, இறைவனோடு நம்மை மீண்டும் ஒப்புரவாக்கினார்.
இன்றைய நம் வாழ்க்கையில் இந்த மூவரில் நாம் யாராக இருக்கிறோம்?
இறையருளால் புதுப்பிக்கப்பட வேண்டிய ஒனேசிமுவாக இருக்கிறோமா? மற்றவர்களை நிபந்தனையின்றி மன்னித்து, சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டிய பிலேமோனாக இருக்கிறோமா? அல்லது மனிதர்களுக்கிடையே பாலமாக நின்று, ஒப்புரவுக்காகத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் பவுலாக இருக்கிறோமா?
கிறிஸ்தவ அன்பின் உண்மையான சோதனை, நம்முடைய உறவுகளை நாம் எவ்வாறு மாற்றுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. கிறிஸ்துவில் அந்நியர்கள் சகோதர சகோதரிகளாக மாறுகிறார்கள்; கடன்களுக்குப் பதிலாக மன்னிப்பு மலர்கிறது; முறிந்த உறவுகள்கூட இறையருள் வெளிப்படும் வாய்ப்புகளாக மாறுகின்றன. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் இறை அன்பின் கருவிகளாக நாம் வாழ இறைவன் நமக்கு அருள்புரிவாராக. ஆமென்.
Sr.அமுதா ICM

No comments:
Post a Comment