DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, March 08, 2026

🦋 Meditation verse - எபேசியர் 4: 24 / Ephesians 4:24

 "விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1859

🔆 2026 மார்ச் 11, புதன்    


"மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 4: 24)

நீதி, நியாயம் குறித்துப் பலரும் பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். பிரச்சனைகள் ஏற்படும்போது, "நீ செய்வது உனக்கே சரியாகத் தெரிகிறதா?" என்று மற்றவர்களைப் பார்த்துச் சிலர் சிலவேளைகளில் கோபத்தில் கேட்பதுண்டு.  அதற்கு மற்றவர், "நான் நியாயமாகத்தான் செய்கின்றேன்" என்பார்கள். அதாவது, இரண்டுபேரும் நீதி நியாயத்தைத் தாங்கள் கடைபிடிப்பதாகக் கூறிக்கொள்கின்றனர். அப்படியானால் எதுதான் மெய்யான நீதி? யார் கூறுவது உண்மை?

மேலும் சிலர் தங்களுக்குப் பிடித்தமானவர்கள் செய்யும் தவறையும் நியாயப்படுத்துவார்கள். சமீபத்தில், டீ கடை ஒன்றில் டீ அருந்திக் கொண்டிருக்கும்போது இருவர் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். சொந்த மனைவியைத் தள்ளிவிட்டு வேறொரு நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் ஒருவரது விசுவாசி அந்த நடிகருக்கு ஆதரவாக, "இதில் என்னத் தவறு இருக்கின்றது? அவருக்குப் பிடித்தவருடன் வாழ அவருக்கு உரிமை இல்லையா?" என்று கூறினார். அதற்கு மற்றவர், "உங்கள் மருமகன் இப்படி உங்கள் மகளைத் தள்ளிவிட்டு இப்படி வேறொரு பெண்ணை மணந்துகொள்ள முயன்றால் இதுபோல பேசுவார்களா?" என்று கேட்டார். அதற்கு மற்றவர் பதில் பேசாமல் இருந்தார்.    

ஆம் அன்பானவர்களே, மனிதர்களது நீதிகள் இப்படி ஆளுக்கு ஆள் வேறுபடும் நீதியாகவே இருக்கின்றது.  ஒரு நீதிபதி குற்றவாளி என்று அறிவித்த மனிதன் மேல் முறையீடு செய்து இன்னொரு நீதிபதியால் விடுதலை பெறுவதை நாம் பார்க்கின்றோம். எனவே, மனிதர்களது நீதி தேவனுக்குமுன் அழுக்கான கந்தைபோலவே இருக்கின்றது.  "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம்  அழுக்கான  கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டு போகிறது" (ஏசாயா 64:6)

இன்றைய தியான வசனம் மெய்யான நீதி மற்றும்  பரிசுத்தத்தைக் குறித்துக் கூறுகின்றது.  தேவன் ஒருவரே நீதியும் பரிசுத்தமும் உள்ளவராக இருக்கின்றார். "ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்."(1பேதுரு3:18). எனவே,  அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் மரித்து உயிர்த்தவரே நம்மை மெய்யான நீதியுள்ளவர்களாக மாற்ற முடியும். 

இன்றைய தியான வசனம், "தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்துகின்றது. நமது பாவங்களுக்காக மரித்து உயிர்த்த கிறிஸ்து நமக்குள் வரும்போது மட்டுமே நாம் அவரைத் தரித்துக்கொண்டவர்கள் என்று கூறமுடியும். இப்படி நாம் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டால் மட்டுமே மெய்யான நீதியும் பரிசுத்தமுமுள்ளவர்களாக மாறமுடியும். 

நாம் நீதியுள்ளவர்களாய் வாழ்கின்றோமென்றால் நாம் கிறிஸ்துவுக்குள் பிறந்தவர்கள் என்பது அதன்மூலம் விளங்கும். ஆம், "அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்." (1 யோவான்  2 : 29) கிறிஸ்து இயேசுவை வாழ்வில் தரித்துக்கொண்டு மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் வாழ்வோம்; அதாவது, பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்வோம். 

நீதியும், பரிசுத்தமும் இல்லாமால் ஒருவனும் தேவனை அறிவதும் இல்லை; அவரிடம் சேர்வதுமில்லை. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

“Within the Seeds” 🌳

📖 AATHAVAN Bible Meditation – No. 1859
🔆
Wednesday, March 11, 2026

“Put on the new self, which in the likeness of God has been created in righteousness and holiness of the truth.” — Ephesians 4:24

We often hear many people speaking about righteousness and justice. When conflicts arise, someone may angrily ask another person, “Do you think what you are doing is right?” The other person may reply, “I am acting justly.” In this way, both individuals claim that they are standing for justice. If that is the case, what truly is righteousness? Whose judgment is correct?

At times, people even justify the mistakes of those they like. Recently, while I was drinking tea at a tea stall, I overheard two people having a conversation. One of them supported a certain actor who had abandoned his wife and was closely involved with another actress. He argued in defense of the actor, “What is wrong with that? Doesn’t he have the right to live with the person he likes?” The other person then asked him, “If your own son-in-law pushed aside your daughter and tried to marry another woman, would you still say the same thing?” Hearing this, the first man had no answer and remained silent.

Dear friends, this is how human standards of righteousness often change from person to person. We also see cases where a man declared guilty by one judge is later acquitted by another judge upon appeal. Therefore, human righteousness cannot stand before God. The Bible declares:

“For all of us have become like one who is unclean, And all our righteous deeds are like a filthy garment; And all of us wither like a leaf, And our wrongdoings, like the wind, take us away.” — Isaiah 64:6

Today’s meditation verse speaks about true righteousness and holiness. God alone is perfectly righteous and holy.

“For Christ also suffered for sins once for all time, the righteous for the unrighteous, so that He might bring us to God, having been put to death in the flesh, but made alive in the spirit.” — 1 Peter 3:18

The One who died and rose again—the Righteous One who suffered for the unrighteous—alone has the power to make us truly righteous.

Today’s meditation verse urges us to “put on the new self, created in the likeness of God.” Only when Christ, who died and rose again for our sins, comes into our lives can we truly say that we have put on Christ. When we put on Christ, we are transformed to live in true righteousness and holiness.

When we live righteously, it becomes evident that we are born of Him.

“If you know that He is righteous, you know that everyone who practices righteousness also has been born of Him.” — 1 John 2:29

Therefore, let us put on Christ Jesus in our lives and live in true righteousness and holiness. As the Apostle Paul teaches, let us put on the new self, created in the likeness of God.

Without righteousness and holiness, no one can truly know God or come to Him.

God’s Message: Bro. M. Geo Prakash

No comments: