"விதைகளின் உள்ளே" 🌳
நமது தேவனாகிய கர்த்தர் உலக செல்வ ஆசீர்வாதங்களைத் தந்து நம்மை நடத்துபவரல்ல; மாறாக, நம்மை அவர் விரும்பும் பரிசுத்தமான வழியில் நாம் நடக்க விரும்புபவர், வழி நடத்துபவர். நான் பரிசுத்தர் எனவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்று கூறியவர் அப்படி நாம் பரிசுத்த வாழ்க்கை வாழ விரும்புபவராகவும் அப்படி வாழ உதவி செய்பவராகவும் இருக்கின்றார்.
இது எப்படியென்றால் ஒரு சிறந்த மருத்துவர் தன்னைப்போல தனது மகனும் மகளும் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று ஆசைப்படுவதைப்போலவும், அவர்கள் அப்படி எதிர்காலத்தில் விளங்க அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதுபோலவும் ஆகும்.
ஆம், இதுபோலவே கர்த்தரின் பரிசுத்தமான வழியில் நாம் நடப்பதற்கு வழிகாட்டவும் நமக்கு முன்மாதிரியாக அந்தப் பரிசுத்த வழியில் நடந்து மாதிரி காண்பிக்கவும் இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். எனவேதான் அவர் கூறினார், " நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான் 14: 6) ஆம், பரிசுத்தரான பிதாவை அடைந்திட கிறிஸ்து ஒருவரே வழியும் உண்மையாய் இருக்கின்றார்.
இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்த நாட்களில் தனது சீடர்களோடு இருந்து நடத்தினார். அவர் தனது மீட்புப் பணியினை நிறைவு செய்து மீண்டும் தந்தையிடம் செல்லுமுன்பாக தந்து சீடர்களை வழிநடத்தவும், தன்னை விசுவாசிப்பவர்களை பரிசுத்த வழியில் நடத்திடவும் பரிசுத்த ஆவியனவரை வாக்களித்தார். பரிசுத்த ஆவியான "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து.
"பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று வாக்களித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று பரிசுத்த ஆவியாக நம்முடனிருத்து நடத்துகின்றார்.
ஆனால், இன்றைய பெரும்பாலான மக்களுக்கு இயேசு கிறிஸ்து உலக ஆசீர்வாதங்களை கொடுக்கும் ஒரு தெய்வமாகவே காண்பிக்கப்படுகின்றார். அன்பானவர்களே, இந்த உலகத்தில் நடக்கக்கூடிய காரியங்களைக்கொண்டே இது தவறான எண்ணம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். இன்று உலக அளவில் ஆசீர்வாதங்களை பெற்றுள்ளவர்கள் கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல. கிறிஸ்துவை அறியாத, அவரது போதனைகளைக் கடைபிடிக்காதவர்களே இன்று பெரும் உலக பணக்காரர்களாகவுள்ளனர். இதிலிருந்தே கிறிஸ்து உலக ஆசீர்வாதங்களுக்காக வரவில்லை என்பது தெளிவு.
கிறிஸ்து இல்லாத வாழ்க்கையில் எவ்வளவு பணமோ பதவியோ இருந்தாலும் அங்கு பரிசுத்தம் இருக்காது; தேவனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை இருக்காது. சமுதாயத்தில் மதிப்போடு பார்க்கப்படும் பலர் சில வேளைகளில் தவறு செய்து சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளும்போது அவர்களைப்பற்றி வெளிவரும் செய்திகள், "ஐயோ, இவரா இப்படியெல்லாம் செய்தார்?' என உலகம் ஆச்சரியப்படுகின்றது. ஆனால் நாம் கிறித்துவுக்குள் இருந்தால் இந்த ஆச்சரியம் நமக்கு வராது. காரணம், கிறிஸ்து இல்லாத வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென்று நமக்குத் தெரியும்.
"நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15: 5) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? திராட்சைக் கொடியாகிய அவரோடு நாம் இணைக்கப்பட்டால் மட்டுமே கனியுள்ள வாழ்க்கை வாழ முடியும்.
எனவே அன்பானவர்களே, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற நம் தேவனாகிய கர்த்தரிடம் நாம் நம்மை இணைத்துக்கொள்வோம். அப்போது, அவரே பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து நாம் நடக்கவேண்டிய பாதையில் நம்மை நடத்தி நித்திய ஜீவனை நாம் பெற்றிட உதவி செய்வார்.
“Within the Seeds” 🌳
📖 AATHAVAN
Bible Meditation – No. 1864
🔆 Monday,
March 16, 2026
“This is what the LORD says,
your Redeemer, the Holy One of Israel: ‘I am the LORD your God, who teaches you
to benefit,
who leads you in the way you should go.’” — Isaiah 48:17
The Lord our God does not guide us merely by giving worldly riches and blessings. Rather, He desires that we walk in the holy path that He has prepared for us, and He Himself leads us in that way. The One who said, “You shall be holy, for I am holy,” also desires that we live a holy life and helps us to live in such holiness.
This is similar to how an excellent doctor desires that his son or daughter also become a doctor in the future and does everything possible to help them achieve that goal.
In the same way, Jesus Christ came into the world to guide us to walk in the holy way of the Lord and to set an example by walking in that holy path Himself. That is why He said:
“I am the way, and the truth, and the life; no one comes to the Father except through Me.” — John 14:6
Yes, Christ alone is the way and the truth through whom we can reach the holy Father.
During the days when Jesus Christ lived on earth, He personally stayed with His disciples and guided them. Before completing His redemptive work and returning to the Father, He promised to send the Holy Spirit to guide His disciples and lead all those who believe in Him in the path of holiness. Jesus said:
“And He, when He comes, will convict the world regarding sin, and righteousness, and judgment.” — John 16:8 (NASB)
The Lord Jesus Christ, who promised, “I am the LORD your God who teaches you to benefit and leads you in the way you should go,” is today guiding us through the Holy Spirit who dwells with us.
However, for many people today, Jesus Christ is often presented merely as a deity who grants worldly blessings. Dear friends, by observing what happens in this world, we can understand that this is a mistaken idea. Many who enjoy great worldly prosperity today do not even know Christ. In fact, some of the wealthiest people in the world neither know Christ nor follow His teachings. From this we can clearly understand that Christ did not come to grant worldly prosperity.
No matter how much wealth or position a person may have, if Christ is absent in that life, there will be no holiness and no life pleasing to God. Sometimes people who are respected in society commit serious wrongs and become caught in legal troubles. When such news appears, the world reacts with surprise, saying, “Oh! Did this person really do such things?” But if we understand life without Christ, this should not surprise us, because we know that a life without Christ can easily fall into such situations.
Did not Jesus say:
“I am the vine, you are the branches; the one who remains in Me, and I in him bears much fruit, for apart from Me you can do nothing.” — John 15:5
Only when we remain connected to Him, the true Vine, can we live a fruitful life.
Therefore, dear friends, let us unite ourselves with the Lord our God who teaches us what is beneficial and leads us in the way we should walk. Then He Himself will teach us what is good for us, guide us in the right path, and help us receive eternal life.
God’s Message: Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment