"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1872
🔆 2026 மார்ச் 24, செவ்வாய்
"கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை." ( உபாகமம் 32: 11, 12)
இன்றைய தியான வசனத்தை வாசித்தப்பின் கழுகுகளைக்குறித்து மேலும் அறிந்தால் நல்லது என்று தோன்றியது. வலைத்தளத்தில் கழுகுகளைக்குறித்துத் தேடியபோது ஒரு செய்தி இந்த வசனத்துக்குப் பொருந்துவதாக இருப்பதைக் கண்டுபிடித்தேன்.
கழுகுக் குஞ்சுகள் சிறகுமுளைத்து பறக்கும் காலம் வரும்போது அவை எளிதில் தங்களது கூடுகளைவிட்டு வெளிவருவதில்லை. தாய்க்கழுகு கொண்டு வரும் உணவையே அவை எதிர்பார்த்துக் காத்திருக்கும். குஞ்சுகள் இப்படியே இருந்தால் நல்லதல்ல என்பது தாய்க் கழுகுக்குத் தெரியும். எனவே அது குஞ்சுகளை வெளியேற்ற, குஞ்சுகள் இருக்கும் கூட்டினைத் தனது அலகினால் கொத்திக் கலைத்துவிடும். இப்போது குஞ்சுகளுக்குத் தங்கியிருக்கக் கூடு இல்லாமல்போகும்.
அப்போது அவை வேறு வழியின்றி தாய்க் கழுகை நோக்கிப்பார்க்கும். தாய்க் கழுகு குஞ்சுகளைத் தனது முதுகின்மேல் அமரவைத்து உயரமாகப் பறந்து, குறிப்பிட்ட உயரம் வந்ததும் அவைகளைக் கீழே தள்ளிவிடும். வேறு வழியின்றி குஞ்சுகள் சிறகினை அடித்துப் பறக்க முயலும். தாய்க் கழுகு குஞ்சுகளைக் கவனமாகப் பார்த்துத் தனது சிறகினால் அவ்வப்போது தாங்கிக்கொள்ளும்.
ஆம் அன்பானவர்களே, யாக்கோபைத் தேவன் இப்படித்தான் தாங்கினார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. "கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இதற்கு முந்தின வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்." ( உபாகமம் 32: 10) என்று.
யாக்கோபை வழிநடத்திய தேவன் இன்றும் மாறாதவராகவே இருக்கின்றார். நமது இன்றைய வாழ்க்கை பாழான நிலம் போலவும், ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளிபோலவும் இருக்கலாம். ஆனால் கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறதுபோலக் கர்த்தர் நம்மிடம் செயல்புரிந்து நம்மைத் தாங்கி நடத்துவார்.
தாய்க் கழுகு கூட்டினைக் கலைக்கும்போது குஞ்சுகளுக்குக் கவலையாகத்தான் இருக்கும். அமைதியாக இருந்து வேளாவேளைக்கான உணவினை உண்டுவந்த குஞ்சுகள் இந்தத் துன்பத்தைத் தாங்கியாகவேண்டும். அதுபோல, உயரத்திலிருந்து தாய்க் கழுகு குஞ்சுகளை கீழே தள்ளும்போது அவைகளுக்குத் தாய்க் கழுகு தங்களிடம் கொடுமையாக நடப்பதுபோலத் தெரியும். ஆம், நமது வாழ்விலும் தேவன் இதுபோலச் சில காரியங்களை செய்கின்றார். அது நமது நன்மைக்காகவே என்பதை நாம் உணர்ந்துகொள்வோமானால் கலக்கமடையாமல் இருப்போம்.
கூடு கலைக்கப்படுவதுபோலவும், உயரத்திலிருந்து தள்ளிவிடப்படுவதுபோலவும் நமது வாழ்வில் பலவேளைகளில் துன்பங்கள் ஏற்படலாம். ஆனால் நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போது அப்படி நிகழுமானால் கர்த்தர் நம்மேல் கண்வைத்துள்ளார் என்று பொருள். விசுவாசக் கண்கொண்டு பார்ப்போமானால் தாய்க் கழுகு அருகினில் செட்டைகளை விரித்து அசைவாடுவதைக் காணும் குஞ்சுகளைப்போல நாமும் அவரது பிரசன்னத்தைக் கண்டுணர முடியும். கூடு கலைக்கப்பட்டு, கைவிடப்பட்டதுபோல இருப்பதால்தான் கழுகுக் குஞ்சுகள் அடுத்த வாழ்க்கை நிலைக்குத் தயாராகின்றன.
ஆம், இதுபோலவே கர்த்தர் நம்மிடம் செயல்புரிகின்றார் என்பதனை துன்பவேளைகளில் நாம் மறந்திடக்கூடாது. "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்." ( சங்கீதம் 34: 19)
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"Inside the Seeds" 🌳 📖 AATHAVAN
Bible Meditation - No. 1872
🔆 Tuesday,
March 24, 2026
"Like an eagle
that stirs up its nest, that hovers over its young, He spread His wings and
caught them, He carried them on His pinions. The Lord alone guided him, and
there was no foreign god with him." (Deuteronomy
32:11-12)
After reading today’s
meditation verse, I felt it would be good to learn more about eagles. While
searching online, I found a fact about eagles that perfectly aligns with this
scripture.
When the time comes for
eaglets to grow feathers and fly, they do not easily leave their nests. They
simply wait for the food brought by the mother eagle. The mother eagle knows
that it is not good for the chicks to remain this way forever. Therefore, to
force them out, she uses her beak to peck at and stir up (disturb) the nest
where the chicks reside. Now, the chicks find themselves without a stable place
to stay.
At that moment, having no
other choice, they look toward the mother eagle. The mother eagle lets the
chicks sit on her back, flies high into the air, and upon reaching a certain
height, she drops them. With no other option, the chicks struggle and flap their
wings, attempting to fly. The mother eagle watches them intently and catches
them upon her wings from time to time to support them.
Yes, dear ones, today’s
meditation verse tells us that God sustained Jacob in this very same way. The
scripture says, "The Lord alone guided him, and there was no foreign
god with him." In the preceding verse, we read:
"He found him in a
desert land, and in the howling waste of a wilderness; He encircled him, He
cared for him, He guarded him as the apple of His eye." (Deuteronomy
32:10)
The God who guided Jacob
remains unchanging today. Our life today might feel like a desert land or a
howling, empty wilderness. However, just as an eagle stirs up its nest, hovers
over its young, spreads its wings to take them, and carries them on its pinions,
the Lord will act in our lives to sustain and lead us.
When the mother eagle stirs
up the nest, the chicks surely feel distressed. The chicks, who were living
peacefully and eating their meals on time, must endure this hardship.
Similarly, when the mother eagle pushes them down from a great height, it might
seem to the chicks as though she is acting cruelly toward them. Yes, God
performs similar actions in our lives as well. If we realize that this is for
our own good, we will not be troubled.
Just like the stirring of a
nest or being pushed from a height, many troubles may arise in our lives. But
if such things happen while we are living in a way pleasing to God, it means
the Lord has His eye upon us. If we look through the eyes of faith, we can
sense His presence, just as the chicks see the mother eagle hovering nearby
with spread wings. It is only because the nest is stirred and they feel
"abandoned" that the eaglets become prepared for the next stage of
their lives.
"Many are the
afflictions of the righteous, but the Lord delivers him out of them all." (Psalm
34:19)
Message by: Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment