🌅ஆதவன் தியானம்🌅
நாம் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு நமது பிரசங்கங்கள், எழுத்துக்கள் மூலம் மட்டும்தான் அறிவிக்கமுடியும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மாறாக, மற்றவர்களிடம் நாம் நடந்துகொள்ளும் விதம் அவர்களை கிறிஸ்துவுக்கு நேராக நடத்தும் என்கின்றார் அப்போஸ்தலராகிய பவுல்.
இன்று ஆவிக்குரியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரின் செயல்பாடுகள் இதற்கு மாறாகவே இருக்கின்றன. பல ஆண்டுகள் பக்கத்து வீட்டு மனிதர்களிடம் அன்பாக நட்பாக பழகிய சிலர், ஆவிக்குரிய சபைகளுக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் இதுவரை நட்புடன் பழகிய அதே பக்கத்துவீட்டு நண்பர்களிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திவிடுகின்றனர். "முன்பு எங்களிடம் நன்றாக பழகி சகோதரர்கள்போல வாழ்ந்தார்கள், இப்போது அப்படி பேசுவது கிடையாது" என்று ஒருமுறை ஒரு ஆவிக்குரிய குடும்பதைக் குறித்து அவர்களது பக்கத்து வீட்டு மனிதர் ஒருவர் என்னிடம் வருத்தத்துடன் கூறினார்.
இது குறித்து அந்த ஆவிக்குரிய விசுவாசியிடம் நான் கேட்டபோது, "அவர்கள் தேவனை அறியாதவர்கள். விக்கிரகங்களை வழிபடுபவர்கள். அவர்களோடு பழகினால் அசுத்தஆவிகள் நம்மைப் பிடித்துக்கொள்ளும்" என்றார். ஆவிக்குரிய சபைகள் தங்கள் விசுவாசிகளை எப்படிப் பழக்கப்படுத்தியிருக்கின்றன பாருங்கள்!! பொதுவாக ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொண்டாலும் பெரும்பாலான சபைகளும் அவற்றின் விசுவாசிகளும் வெள்ளை ஆடைகள் அணிவதையே ஆவிக்குரிய அடையாளமாகக் கருத்திக்கொள்கின்றனர்.
ஆனால் அப்போஸ்தலரான பவுல் இதற்கு மாறாக, அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல; நீங்களும் தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள் என்கின்றார். அதாவது நாம் அவர்களுக்கு பிரியமாக நடக்கும்போதுதான் நமது நடத்தையைப்பார்த்து அவர்கள் இரட்சிக்கப்பட முடியும்; அப்போதுதான் நாம் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கும் கிறிஸ்துவின் சபைக்கும் இடலற்றவர்களாக இருக்க முடியும்.
"நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது." ( யோவான் 15 : 12 ) என்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஆம் அன்பானவர்களே, அன்புதான் கிறிஸ்து நமக்குக் கற்பித்த முக்கிய கட்டளை. அதனைப் புறக்கணித்து வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக மட்டுமே நாம் வாழ்வோமென்றால் நமது ஆவிக்குரிய வாழ்வு அர்த்தமற்றது. ஆவியில் நிரம்பி அந்நியபாஷை பேசுவது மட்டுமே கிறிஸ்தவ வாழ்க்கையல்ல.
அப்போஸ்தலரான பவுல் எச்சரிப்பதுபோல சக மனிதர்களிடம் அன்பற்று வாழ்வோமானால் நாம் சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் தான் இருப்போம் ( 1 கொரிந்தியர் 13 : 1 ) நம்மால் கிறிஸ்துவின் சபைக்கோ மற்றவர்களுக்கோ எந்த பலனும் இருக்காது.
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️
🌅 AATHAVAN MEDITATION 🌅
No. 2099 – Date: 07.11.2026
“Give no offense either to Jews or to Greeks or to the church of God; just as I also, please all people in all things, not seeking my own benefit but the benefit of the many, so that they may be saved.” (1 Corinthians 10:32–33, NASB)
We should never think that we can proclaim Christ to others only through our sermons and writings. On the contrary, the way we conduct ourselves towards others can lead them to Christ, says the Apostle Paul.
Today, the behaviour of many people who claim to be spiritual is quite the opposite. Some people who have maintained loving and friendly relationships with their neighbours for many years stop talking to them and interacting with them as soon as they begin attending spiritual churches. Once, a neighbour of a particular Christian family shared his disappointment with me, saying, “Earlier, they were so friendly with us and lived like brothers. But now they hardly speak to us.”
When I questioned that spiritual believer about this, he replied, “They do not know God. They worship idols. If we associate with them, unclean spirits will take hold of us.” Just look at how some spiritual churches have trained their believers to think and behave! Although many churches call themselves spiritual churches, most of them and their believers consider wearing white clothes to be a mark of spirituality.
However, the Apostle Paul teaches us quite the opposite. He urges us not to cause anyone to stumble, but to seek the benefit of many, so that they may be saved, conducting ourselves in a manner that is pleasing to all. In other words, when we treat others with love and kindness, they can be drawn towards salvation through observing our conduct. Only then can we avoid becoming a stumbling block to those who do not know Christ and to the Church of God.
“This is My commandment, that you love one another, just as I have loved you.” (John 15:12, NASB) said our Lord Jesus Christ.
Yes, dear ones, love is the most important commandment that Christ has taught us. If we ignore this commandment and live merely as Christians who attend worship services, our spiritual life becomes meaningless. Being filled with the Spirit and speaking in tongues alone do not constitute Christian life.
As the Apostle Paul warns us, if we live without love towards our fellow human beings, we are nothing more than a noisy gong or a clanging cymbal (1 Corinthians 13:1, NASB). We will be of no benefit either to the Church of Christ or to other people.
✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:
Post a Comment