"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1883
"உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாய் எண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்." (சங்கீதம் 22:24)
மனிதர்களது குணங்கள் வித்தியாசமானவை. இந்த உலகத்தில் சில மனிதர்களுக்கு மற்றவர்கள் துன்பப்படும்போது அதனைத் தங்களுக்குள் பேசி மகிழ்வதில் ஒரு இன்பம் இருக்கின்றது. குறிப்பாக, குடும்ப உறவுகளுக்குள் இதனை நாம் பலவேளைகளில் கண்டுகொள்ளலாம். சில குடும்பங்களில் ஒரு சகோதரனோ சகோதரியோ கஷ்டப்படும்போது வசதியுள்ள மற்ற சகோதர சகோதரிகள் துன்பப்படும் சகோதரனை அற்பமாக பேசி ஒதுக்குவதுண்டு. சிலர் ஏழ்மையான தங்களது உடன்பிறப்புகளை மற்றவர்களிடம் அறிமுகம் செய்வதில்லை. ஒரு சிலர் குடும்ப விழாக்களுக்குக்கூட அவர்களை அழைப்பதில்லை.
இதற்குக் காரணம், உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர்கள் அற்பமாக எண்ணுவதும் அவர்களை அருவருப்பதும்தான். ஆனால் தேவன் அப்படிப்பட்டவரல்ல. நாம் அற்பமான மனிதர்களாக இருந்தாலும் தேவன் நம்மை நினைவுகூர்கின்றார். நம்மை அவர் ஒதுக்குவதில்லை. தாவீது இப்படித்தான் ஒதுக்கப்பட்டு அற்பமாக இருந்தார். எனவேதான் இந்தச் சங்கீத ஆரம்ப வசனத்தில் கூறுகின்றார், "நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்." (சங்கீதம் 22:6) என்று.
ஆனால் அன்பானவர்களே, தேவன் நமது ஒவ்வொரு துன்பத்தையும் பார்க்கின்றார். அவைகளிலிருந்து நமக்கு விடுதலையும் அளிக்கின்றார். காரணம், நமது துன்பவேளைகளில் நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் சத்தத்தை அவர் கேட்டு உடனேயே பதில்தருகின்றார். இதனையே தாவீது, "என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்." (சங்கீதம் 22:21) என்று கூறுகின்றார்.
காரணம், நமது தேவன் ஜெபத்தைக் கேட்கின்றவர். "ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்." ( சங்கீதம் 65 : 2 ) என்று நாம் வாசிக்கவில்லையா?
இன்று இதை வாசிக்கும் சகோதரனே சகோதரியே இதுபோல இன்று ஒருவேளை குடும்பத்திலும் சமூகத்திலும் நீங்கள் மற்றவர்களால் அற்பமாக எண்ணப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நமது தேவன் யாரையும் அற்பமாக எண்ணி ஒதுக்குபவரல்ல. மாறாக, நம்மை உபத்திரவப்படுத்துபவர்களுக்கு உபாத்திரவத்தைக் கொடுக்கிற தேவன் என்று கூறப்பட்டுள்ளது. ஆம், "உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." ( 2 தெசலோனிக்கேயர் 1 : 6 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.
நாம் இன்று அனுபவிக்கும் உபத்திரவங்கள், துன்பங்கள், அவமானங்கள், புறக்கணிக்கப்படுதல், அருவருப்பாக எண்ணப்படுதல் போன்றவற்றை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அனுபவித்தார். எனவே நமது மனதின் வேதனைகள் அவருக்குத் தெரியாத ஒன்றல்ல. நாம் மெய்யான தேவபக்தியுள்ளவர்களாக அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்வோமானால் அவரை நோக்கி நாம் கூப்பிடுகையில் நமக்கு அவர் செவிகொடுப்பார்.
மட்டுமல்ல, "கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்." ( 2 பேதுரு 2 : 9 )
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Inside the Seeds 🌳
📖 AATHAVAN Bible Meditation –
No. 1883
🔆 Saturday, April 4, 2026
"For He has not despised
nor abhorred the affliction of the afflicted; nor has He hidden His face from
him; but when he cried to Him for help, He heard." (Psalm 22:24)
Human nature varies greatly.
In this world, some people find a twisted pleasure in discussing and gloating
over the sufferings of others. We often see this manifest within family
relationships. In some families, when a brother or sister is struggling, the
more affluent siblings might speak of them with contempt and distance
themselves. Some choose not to introduce their less fortunate siblings to
others, and some even go as far as excluding them from family functions
altogether.
The root cause of this behaviour
is that they despise the affliction of the afflicted and look upon them with
abhorrence. However, our God is not like that. Even if we are considered
insignificant by human standards, God remembers us. He does not cast us aside.
David experienced this sense of being rejected and belittled, which is why he
cries out in the beginning of this Psalm:
"But I am a worm and not
a man, a reproach of men and despised by the people." (Psalm 22:6)
But dearly beloved, God sees
your every sorrow. He grants us deliverance because He hears our voice when we
cry out to Him in our times of trouble and answers us immediately. David
affirms this by saying:
"Save me from the lion’s
mouth; from the horns of the wild oxen You answer me." (Psalm 22:21)
Our God is a God who hears
prayer. Do we not read, "O You who hear prayer, to You all men
come" (Psalm 65:2)?
Brother, sister, as you read
this today, you may feel belittled or marginalized by your family or society.
But our God never despises or rejects anyone. On the contrary, the Scripture
says He is a God who repays with affliction those who afflict you. As the
Apostle Paul writes:
"For after all it is only
just for God to repay with affliction those who afflict you, and to give relief
to you who are afflicted and to us as well..." (2 Thessalonians 1:6–7)
The Lord Jesus Christ Himself
endured the same tribulations, sufferings, insults, rejection, and contempt
that you may be facing today. Therefore, the pain of your heart is not unknown
to Him. If we live a life of true godliness pleasing to Him, He will surely
hear us when we call upon Him.
Furthermore, remember:
"...the Lord knows how to
rescue the godly from temptation, and to keep the unrighteous under punishment
for the day of judgment." (2 Peter 2:9)
Divine Message: Bro. M. Geo
Prakash
No comments:
Post a Comment