INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Wednesday, January 15, 2025

Meditation Verse - 2 தெசலோனிக்கேயர் 2: 11, 12 / 2 Thessalonians 2:11-12

 வேதாகமத் தியானம் - எண்:- 1,440

'ஆதவன்' 💚ஜனவரி 17, 2025. 💚வெள்ளிக்கிழமை


"ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும் படிக்கு,  அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்."  (2 தெசலோனிக்கேயர் 2: 11, 12) 

இந்த உலகத்தில் மக்கள் பல்வேறு வஞ்சக எண்ணங்களால் நிறைந்திருக்கக் காரணம் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

உண்மையினை உலகம் எளிதில் ஏற்றுக்கொளவதில்லை ஆனால் பொய்யினை எளிதில் நம்பிவிடுகின்றது. இப்படி பொய்யை நம்புவதால்தான் பல்வேறு ஏமாற்று காரியங்கள் உலகத்தில் நடைபெறுகின்றன. உதாரணமாக, அரசாங்கம் நிர்ணயித்துள்ள வட்டி விகிதங்களைவிட அதிக வட்டி தருவதாகக் கூறுவதால் பல்வேறு ஏமாற்று நிறுவனங்களில் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாறுகின்றனர். இதுபோல பல்வேறு சைபர் குற்றங்கள் நடைபெறக் காரணம் பொய்யை நம்புவதால்தான். 

உண்மையினை ஏற்றுக்கொள்ளாமல் அநீதியான காரியங்களில்  விருப்பம் காட்டுவதுதான் மனிதர்களின் இயல்பான குணமாக இருக்கின்றது. இயேசு கிறிஸ்து உலகத்தில் மனிதனாக வந்திருந்தபோதும் பலரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதனை இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்:- "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது." ( யோவான் 3: 19)

இன்றைய தியான வசனம் "சத்தியத்தை விசுவாசியாமல்" என்று கூறுகின்றது. அப்படியானால் எது சத்தியம் எனும் கேள்வி நமக்குள் எழுகின்றது. அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், தேவனது வசனமே சத்தியம் என்று.  "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17: 17) ஆம் அன்பானவர்களே, தேவனுடைய வசனமே சத்தியம்.  

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்" என்று. அதாவது, அவர்கள் உண்மையான தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாததால் தொடர்ந்து பொய்யிலேயே கெட்டுபோக்கத்தக்கதாக தேவன் அவர்களை இருளிலே நடக்கப்பண்ணுவார். 

மேலும் இப்படி உண்மையினை விசுவாசியாமல் நாம் இருப்போமானால் அது தேவனுடைய கோபத்தை நம்மேல் வருவிபத்தாக  இருக்கும். இதனையே அப்போஸ்தலரான பவுல், "சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது." (ரோமர் 1:18) என்று கூறுகின்றார். அதாவது, உண்மையினை அறிய மனமில்லாமலும் உண்மையாக வாழ மனமில்லாமலும் தங்கள் அநியாயத்தினால் உண்மையினை அடக்கிவைக்கும் மனிதர்கள்மேல் தேவ கோபம் வெளிப்படும் என்கின்றார்.

ஆம்  அன்பானவர்களே, எனவே நாம் சத்தியமான தேவனுடைய வார்த்தைகளை அறிந்தவர்களாக, அவற்றை வாழ்வில்  கடைபிடிப்பவர்களாக  வாழவேண்டியது அவசியம். அப்படி வாழும்போது வாழ்வில் நமக்கு விடுதலையும் கிடைக்கும்.  "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்". (யோவான் 8:32) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Scripture Meditation - No. 1,440
AATHAVAN
💚 January 17, 2025 💚
Friday

"And for this cause God shall send them strong delusion, that they should believe a lie: That they all might be damned who believed not the truth but had pleasure in unrighteousness." (2 Thessalonians 2:11-12)

Today's meditation verse emphasizes that the reason many are filled with deceptive thoughts is their refusal to accept the truth.

The world often rejects truth but easily embraces lies, which leads to numerous deceptions. For instance, people fall prey to fraudulent schemes promising higher interest rates than those offered by the government. Similarly, cybercrimes occur because of people's tendency to believe falsehoods.

Rejecting the truth and indulging in unrighteousness is a natural inclination of humanity. Even when Jesus Christ came into the world as a man, many did not accept Him. Jesus Himself explained why: "And this is the condemnation, that light is come into the world, and men loved darkness rather than light, because their deeds were evil." (John 3:19)

The meditation verse says, "They believed not the truth." This raises the question:  What is truth? The apostle John declares that God's Word is truth: "Sanctify them through thy truth: thy word is truth." (John 17:17)

Yes, dear ones, God's Word is the truth.

The meditation verse further states, "God shall send them strong delusion, that they should believe a lie." This means that when people refuse to accept God's true Word, He allows them to remain in their deception and walk in darkness.

If we also fail to believe the truth, it will result in God's wrath upon us. The apostle Paul confirms this in his words: "For the wrath of God is revealed from heaven against all ungodliness and unrighteousness of men, who hold the truth in unrighteousness." (Romans 1:18)

In essence, those who suppress the truth through their unrighteousness and refuse to know or live by the truth will face God's wrath.

Therefore, dear ones, as those who know the truth in God's Word, it is essential for us to live by it. When we do, we will experience true freedom in our lives, as Jesus said: "And ye shall know the truth, and the truth shall make you free." (John 8:32)

God's Message by: -  Bro. M. Geo Prakash

No comments: