Thursday, January 09, 2025

சங்கீதம் 44: 6 / Psalm 44:6

 வேதாகமத் தியானம் - எண்:- 1,434

'ஆதவன்' 💚ஜனவரி 11, 2025. 💚சனிக்கிழமை


"என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை." ( சங்கீதம் 44: 6)

இன்றைய தியான வசனம் தனது சுய பலத்தை நம்பாமல் கர்த்தரையே நம்பி வாழக்கூடிய பக்தனுடைய வார்த்தைகளாகும்.  இங்கு வில், பட்டயம் என்பவை சுய பலத்தைக்  குறிக்கும் வார்த்தைகளாக  உள்ளன. அவை நமது உடல் வலிமை, அதிகார பலம், செல்வத்திரட்சி இவைகளைக் குறிக்கின்றன.  இந்த வசனத்தில் சங்கீத ஆசிரியர்,  "நான் இவைகளை நம்பவில்லை, இவை என்னைக் காப்பாற்றப்போவதுமில்லை"  என்கின்றார். 

தொடர்ந்து அடுத்த வசனத்தில் அவர் கூறுகின்றார்:-  "நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்." ( சங்கீதம் 44: 7) என்று.  இதனையே தாவீது ராஜாவும் தனது சங்கீத வார்த்தைகளில்,  "எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான். இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது."  ( சங்கீதம் 33: 16, 17) என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் எவ்வளவு உடல் வலிமை, பணபலம்,  அதிகாரபலம் கொண்டவர்களாக இருந்தாலும் அவை நம்மை இக்கட்டுகளிலிருந்து முற்றிலும் விடுவிக்கமாட்டாது. ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு இந்த அறிவு இருப்பதில்லை. அவர்கள் மிகுதியான உலக பலம் இருப்பதால் இறுமாப்புக்கொண்டு மற்றவர்களை அற்பமாக எண்ணி வாழ்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர் தங்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இதனை உணர்ந்து கொண்டாலும் அந்தச் சமயத்தில் இந்த உணர்வு அவர்களுக்குக் கைகொடுப்பதில்லை. 

நாம் வாழ்வில் கண்டுள்ள பல்வேறு திரைப்பட பிரபலங்கள், அரசியல் ஜாம்பவான்கள் தங்களது இறுதி நாட்களில் மன அமைதியின்றி வாழ்ந்து மடிந்துள்ளனர். காரணம் சுய பலத்தை நம்பிய வாழ்க்கை. 

எனவேதான்  நாம் நமக்கு என்ன உலக ஆசீர்வாதங்கள் இருந்தாலும் அவற்றின்மேல் நம்பிக்கையை வைக்காமல் கர்த்தர்மேல் நம்பிக்கைக் கொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். நாம் நம்பும் உலக ஆசீர்வாதங்கள் நமக்கு எப்போதும் கைகொடுக்காது. எரேமியா தீர்க்கத்தரிசி கூறுகின்றார்:- "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்." ( எரேமியா 17: 7, 8)

மேற்படி வசனத்தில், "உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்." என்று உவமையாகக் கூறப்பட்டுள்ளது நமது உலக துன்பங்களைத்தான். தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாக நடப்பட்டதுமான மரம் எப்படிக்  கடுமையான வெப்பம், மழை இல்லாமை போன்ற எதிர்மறையான சூழ்நிலையிலும் இவைகளைத் தாங்கி பலன்தருகின்றதோ அதுபோலவே தனது சுய பலத்தை நம்பாமல் கர்த்தரையே நம்பி கர்த்தரோடு இணைந்த வாழ்க்கை வாழும் மனிதன் செழிப்போடு இருப்பான். 

இன்றைய தியான வசனம் கூறுவதுபோல எவ்வளவு உடல்பலம், செல்வத் திரட்சி, அதிகார பலம் நமக்கு இருந்தாலும் "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை, கர்த்தரே என் நம்பிக்கையாகக்  கொள்ளுவேன்" எனும் உறுதியோடு வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                   

Scripture Meditation - No. 1,434
AATHAVAN
💚 January 11, 2025. 💚
Saturday

"For I will not trust in my bow, neither shall my sword save me." (Psalm 44:6)

Today's meditation verse reflects the words of a devout believer who chooses to trust in the Lord rather than in personal strength. Here, the "bow" and "sword" symbolize self-reliance—physical strength, power, and wealth. The Psalmist declares, “I do not trust in these things, nor will they save me.”

In the next verse, he continues: "But thou hast saved us from our enemies, and hast put them to shame that hated us." (Psalm 44:7)

Similarly, King David states in his psalms: "There is no king saved by the multitude of an host: a mighty man is not delivered by much strength. A horse is a vain thing for safety: neither shall he deliver any by his great strength." (Psalm 33:16-17)

Yes, beloved, no matter how much physical strength, wealth, or authority we possess, they cannot deliver us from life's critical challenges. Unfortunately, many people fail to realize this. With an abundance of worldly power, they often live in pride, belittling others. Some may come to understand this truth at the very end of their lives, but by then, it may be too late.

Many prominent figures in cinema and politics have spent their final days in turmoil and passed away without peace. The root cause? A life built on self-reliance.

That is why it is essential for us to place our trust not in worldly blessings but in the Lord. The worldly blessings we depend on will fail us when we need them most. As the prophet Jeremiah says: "Blessed is the man that trusteth in the Lord, and whose hope the Lord is. For he shall be as a tree planted by the waters, and that spreadeth out her roots by the river, and shall not see when heat cometh, but her leaf shall be green; and shall not be careful in the year of drought, neither shall cease from yielding fruit." (Jeremiah 17:7-8)

In this verse, the imagery of a tree planted by the waters, thriving despite heat or drought, symbolizes a person who, instead of relying on personal strength, places their trust in the Lord. Just as such a tree bears fruit even in harsh conditions, a life anchored in God’s strength flourishes in every situation.

As today's verse reminds us, no matter how much physical strength, wealth, or authority we possess, let us resolve: "I will not trust in my bow, neither shall my sword save me; I will place my trust in the Lord."

Message by: Bro. M. Geo Prakash

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

சங்கீதம் 44: 6 / Psalm 44:6

  வேதாகமத் தியானம் - எண்:- 1,434 'ஆதவன்' 💚ஜனவரி 11 , 2025. 💚சனிக்கிழமை "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பத...