வேதாகமத் தியானம் - எண்:- 1,446
'ஆதவன்' 💚ஜனவரி 23, 2025. 💚வியாழக்கிழமை
"உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்." (1 யோவான் 2 : 17)
இந்த உலகத்தில் வாழும் மக்களில் பலரும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்கள் பிள்ளைகளுக்காக பல்வேறு சொத்து சுகங்களைச் சேர்த்துவைக்கின்றனர். தேவைக்கு இப்படிச் சேர்ப்பது தவறல்ல, ஆனால் இதுவே நிரந்தரம் என்று கருதி துன்மார்க்கத்தில் உழன்று இப்படி சொத்துக்களைக் குவிப்பது ஆபத்தானது. உலகத்தில் வாழும் நாமோ, நமது சொத்துக்களோ நமது பிள்ளைகளோ நிரந்தரமானவைகளல்ல. நமக்குமுன் வாழ்ந்து மடிந்துபோன மூதாதையர்களைப்போல நாமும் மடிந்துபோவோம்.
மட்டுமல்ல, இந்த மொத்த உலகமும் அழிவுக்காகவே வைக்கப்பட்டுள்ளது. உலகத்தின் அழிவுகுறித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பல்வேறு முறை கூறி உலக முடிவுக்குமுன் நடைபெறும் சில அடையாளங்களையும் குறிப்பிட்டுள்ளார். அப்போஸ்தலரான பேதுருவும், "இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தைகளினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது." (2 பேதுரு 3: 7) என்றும், "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்." (2 பேதுரு 3: 10) என்று கூறுகின்றார்.
இந்த உலகம் இப்படி அழிந்தாலும் உலகத்திலுள்ள மற்ற எல்லா உயிரினங்களும் அழிந்தாலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்ப வாழ்ந்து நிலைவாழ்வு எனும் முடிவில்லா வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்களாக இருப்பவர்கள் அழியாமல் நிலைத்திருப்பார்கள். நித்தியஜீவன் எனும் முடிவில்லா வாழ்வு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து வாழ்வோருக்கு உண்டு என்று வேதம் குறிப்பிடுகின்றது. இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம், "உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்." என்று வாசிக்கின்றோம்.
இயேசு கிறிஸ்து கூறினார், "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்." ( யோவான் 6: 27) என்று. மனுஷ குமாரனான அவரே நித்திய வாழ்வைக் கொடுக்கவல்லவர்.
தொடர்ந்து அவர் இது குறித்து பல்வேறுமுறை கூறியுள்ளார். உதாரணமாக, "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 6: 47) மற்றும், "என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்." ( யோவான் 6: 54)
ஆம் அன்பானவர்களே, நாம் உலக இச்சைகொண்டவர்களாக இந்த உலகமே நிரந்தரம் என்று வாழ்வோமானால் பரிதபிக்கக்கூடியவர்களாக இருப்போம். உலகம் முடிவதோடு அழிவது மட்டுமல்ல, பிசாசுக்கு ஆயத்தம்பண்ணியுள்ள நித்திய நரக அக்கினிக்கு இரையாகவும் ஆவோம். இதனை வேதம் இரண்டாம் மரணம் என்று குறிப்பிடுகின்றது. வெளிப்படுத்தின விசேஷத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்" ( வெளிப்படுத்தின விசேஷம் 21: 8)
எனவே நாம் அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல; உலக செல்வங்களுக்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே செயல்களை நடப்பிப்போம். அதனை மனுஷகுமாரனாகிய கிறிஸ்து இயேசு நமக்குக் கொடுப்பார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No. 1,446
AATHAVAN💚
January 23, 2025. 💚
Thursday
"And the world passeth
away, and the lust thereof: but he that doeth the will of God abideth
forever." (1 John 2:17)
Many people in this world
accumulate wealth and possessions for their children, considering their future.
While it is not wrong to prepare for their needs, it is dangerous to toil in
wickedness and amass wealth as if it were eternal. Neither we, our possessions,
nor our children are permanent. Just as our ancestors who lived before us
passed away, so too shall we.
Moreover, the entire world
itself is destined for destruction. The Lord Jesus Christ has repeatedly spoken
about the end of the world, detailing signs that will precede its conclusion.
The apostle Peter also wrote, "But the heavens and the earth, which are
now, by the same word are kept in store, reserved unto fire against the day of
judgment and perdition of ungodly men." (2 Peter 3:7) He further warned,
"But the day of the Lord will come as a thief in the night; in the which
the heavens shall pass away with a great noise, and the elements shall melt
with fervent heat, the earth also and the works that are therein shall be
burned up." (2 Peter 3:10)
Although the world and all
life within it will perish, those who live in accordance with the will of the
Lord Jesus Christ will be deemed worthy of eternal life and will not perish but
endure forever. The Scriptures affirm that eternal life is granted to those who
live by faith in the Lord Jesus Christ. As today’s meditation verse reminds us,
"And the world passeth away, and the lust thereof: but he that doeth the
will of God abideth forever."
Jesus Christ declared,
"Labour not for the meat which perisheth, but for that meat which endureth
unto everlasting life, which the Son of man shall give unto you: for him hath
God the Father sealed." (John 6:27) The Son of Man alone has the power to
give eternal life.
He reiterated this truth on
multiple occasions. For instance: "Verily, verily, I say unto you, He that
believeth on me hath everlasting life." (John 6:47)
"Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I
will raise him up at the last day." (John 6:54)
Yes, beloved, if we live as
lovers of the world, believing it to be permanent, we are to be pitied. The end
of the world signifies not only its destruction but also eternal condemnation
in the lake of fire prepared for the devil. The Bible calls this the second
death. In the book of Revelation, it is written: "But the fearful, and
unbelieving, and the abominable, and murderers, and whoremongers, and
sorcerers, and idolaters, and all liars, shall have their part in the lake
which burneth with fire and brimstone: which is the second death."
(Revelation 21:8)
Therefore, let us not labor
for perishable meat or worldly riches, but for that which leads to eternal
life. This eternal sustenance will be given to us by the Son of Man, Christ
Jesus.
Message by: Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment