INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Wednesday, January 22, 2025

Meditation Verse - ரோமர் 1: 11 / Romans 1:11

 வேதாகமத் தியானம் - எண்:- 1,447

'ஆதவன்' 💚ஜனவரி 24, 2025. 💚வெள்ளிக்கிழமை


"உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே," ( ரோமர் 1: 11)

ஆவிக்குரிய வாழ்வில் தேவ அனுபவம் உள்ள மற்ற உடன் சகோதர சகோதரிகளுடன் நாம் உறவுடன் வாழவேண்டியதன் அவசியத்தை இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

அப்படி நாம் ஐக்கியத்துடன் வாழும்போது அது பலவேளைகளில் நமக்கு அறுத்தலும் தேறுதலும் அளிப்பதாக இருக்கும். சில வேளைகளில் உலகப் பிரச்சனைகள், துன்பங்கள் நம்மைச் சோர்வுறச் செய்வதுண்டு. அத்தகைய வேளைகளில் ஆவிக்குரிய ஐக்கியம் நம்மைத் தூக்கிவிடுவதாக இருக்கும். இதனை நான் பலவேளைகளில் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆவிக்குரிய நல்ல ஐக்கியம் இல்லாமல் வாழ்வோமானால் அது நாம் பின்மாறிப்போக காரணமாகவும் அமைந்துவிடும். 

இதனையே நாம், "ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே." ( பிரசங்கி 4 : 10 ) என்று வாசிக்கின்றோம். 

நாம் ஆவிக்குரிய ஐக்கியம் கொள்ளும்போது ஒருவர் ஒருவரது துன்பத்தில் தேறுதல் அளிக்கின்றோம். மேலும் அடுத்தவருக்கு பக்தி விருத்தி உண்டாக்க உதவுகின்றோம். இதனாலேயே அப்போஸ்தலரான பவுல், "ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்." (1 தெசலோனிக்கேயர் 5: 11) என்று அறிவுரை கூறுகின்றார். 

மேலும் இன்றைய தியான வசனத்தில், "உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே," எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஆவிக்குரிய மேலான அனுபவமுள்ள அல்லது நம்மைப்போன்ற அனுபவமுள்ளவர்களை நாம் சந்திக்க ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். பொதுவாக உலக மக்கள் பிரபலமான நடிகர்கள், பாடகர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களைச் சந்திக்க ஆசைப்படுவார்கள். ஆனால் அத்தகைய சந்திப்பில் சற்றுநேர மன மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் பலனாகக்  கிடைத்திடாது. ஆனால் ஆவிக்குரிய நண்பர்களைச் சந்திப்பது இருவருக்குமே நன்மையாக முடியும். 

சாதாரண பள்ளிப் பாடங்களைக்கூட சக மாணவர்களோடு கலந்து உறவாடிப் படிக்கும்போது நமக்குத் தெளிவாகப் பாடங்கள் புரிகின்றன; சந்தேகங்கள் நிவிர்த்தியாகின்றன. அதுபோலவே தான் இதுவும். ஆவியானவர் நமக்கு வேத வசனங்களைத் தெளிவாகப் புரியவைப்பது உண்மைதான் எனினும் நமக்கு ஆவியானவர் புரியவைத்ததை மற்றவர்களோடு நாம் பகிர்ந்துகொள்வதை தேவன் விரும்புகின்றார்.    

ஆம் அன்பானவர்களே, நம்மிலுள்ள விசுவாசத்தினால் மற்றவர்களோடுகூட நாமும் ஆறுதலடையும்படிக்கு, தேவ அனுபவமுள்ள மற்றவர்ககளைக் கண்டு உறவாட வாஞ்சையாயிருப்போம் 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Scripture Meditation - No: 1,447

AATHAVAN 💚 January 24, 2025. 💚 Friday

"That I may be comforted together with you by the mutual faith both of you and me." (Romans 1:11, KJV)

Today's meditation verse highlights the necessity of living in fellowship with fellow believers who have spiritual experiences in their walk with God.

When we live in unity with such individuals, it often brings us encouragement and strength. There are times when the troubles and challenges of the world may weigh us down. In those moments, spiritual fellowship lifts us up. I have personally experienced this on numerous occasions. On the contrary, living without godly fellowship can lead to spiritual decline.

As it is written, "For if they fall, the one will lift up his fellow: but woe to him that is alone when he falleth; for he hath not another to help him up." (Ecclesiastes 4:10, KJV)

When we build spiritual fellowship, we comfort one another in times of trouble and also help in the spiritual growth of others. This is why the apostle Paul advises: "Wherefore comfort yourselves together, and edify one another, even as also ye do." (1 Thessalonians 5:11, KJV)

Additionally, today's verse mentions, "That I may impart unto you some spiritual gift, to the end ye may be established." (Romans 1:11, KJV). This implies that we must desire to meet those who are spiritually experienced or those who share similar spiritual growth as ours. People in the world often yearn to meet celebrities, singers, or political leaders. While such meetings may bring temporary joy, they yield little long-term benefit. However, meeting spiritual friends always leads to mutual edification and blessings.

Even in academics, studying with fellow students often helps in better understanding and clarifying doubts. Similarly, while the Holy Spirit indeed gives us clarity in understanding the Scriptures, God desires that we share with others what the Holy Spirit has taught us.

Yes, dear ones, let us earnestly desire to meet and fellowship with those who have spiritual experiences so that we may be comforted together by our mutual faith.

God’s Message: Bro. M. Geo Prakash

No comments: