INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Monday, January 13, 2025

Meditation Verse - கலாத்தியர் 4: 10, 11 / Galatians 4:10-11

வேதாகமத் தியானம் - எண்:- 1,438

'ஆதவன்' 💚ஜனவரி 15, 2025. 💚புதன்கிழமை

"நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்." (கலாத்தியர் 4: 10,11) 

கிறிஸ்தவர்கள்  என்று நம்மைக் கூறிக்கொள்ளவேண்டுமானால் நாம் தேவன்மேல்  நூறுசதம் விசுவாசம் கொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி ஒரு விசுவாச வாழ்க்கை வாழும்போது நாம் அவரைத்தவிர  வேறு எதற்கும் முன்னுரிமை கொடுக்கமாட்டோம்  எதனையும் அவரைவிடப் பெரிதாக  எண்ண மாட்டோம். 

ஆனால் இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பலரும்  புறமத கலாச்சாரங்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் முன்னிலைப்படுத்தி தேவனை அவமதிக்கின்றவர்களாக இருக்கின்றனர். அதனையே அப்போஸ்தலரான பவுல் இங்கு "நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே". என்று குறிப்பிடுகின்றார். பல கிறிஸ்தவ  குடும்பங்களில் நல்ல காரியங்கள் ஏற்பாடுசெய்யும்போது தேவ சித்தத்துக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட  நல்லநாள், நல்ல நேரம், நல்ல மாதம் இவற்றுக்கே முன்னுரிமை கொடுப்பது அவர்களது விசுவாசக் குறைவையும்  கிறிஸ்துவை அவமதிப்பதையுமே காட்டுகின்றது.. 

எவ்வளவோ மேலான விசுவாச சாட்சிகள் வேதத்தில் உண்டு. நமது வாழ்க்கையிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த மகத்தான காரியங்கள் பல உண்டு.  ஆனால் வாழ்வில் அப்படி கிறிஸ்துமூலம் நன்மைகளைப் பெற்றுக்கொண்டதாக  அவற்றிக்குறித்து சாட்சிகூறும் பல கிறிஸ்தவர்களும்கூட நல்ல நேரம், மாதம், காலம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.   இதனையே அப்போஸ்தலரான பவுல்  இன்றைய தியான வசனத்தில்  "நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்." என்று குறிப்பிடுகின்றார். ஆம் இப்படி நாள் நட்சத்திரம் பார்ப்பது நமக்குரிய கிறிஸ்தவ விசுவாசத்தை வீணாக்கிவிட்டோம் என்பதனையே காட்டுகின்றது. 

மட்டுமல்ல, இப்படி நல்லநாள், நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்த பலரது திருமணங்கள் விவாகரத்தில் முடிவதை நாம் பலவேளைகளில் பார்க்கமுடிகிறது. இதுவே இவை தேவையற்ற மூடநம்பிக்கைகள் என்பதற்கு அத்தாட்சி. 

ஆம் அன்பானவர்களே, காலங்களையும் நேரங்களையும் பார்ப்பதைவிட காலத்தையும் நேரத்தையும்  கையில்கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ளவரையே நாம் நோக்கிப்பார்க்கவேண்டியது அவசியம். இதனை உணர்ந்திருந்த சங்கீத ஆசிரியர், "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்." ( சங்கீதம் 31 : 15 ) என்கின்றார். நமது காலங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் உள்ளன. அவரே நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் பிரச்சனைகளுக்கும் தப்புவிக்க வல்லவர். 

நாம் தேவனை அறிந்தவர்களாக வாழ்வோமானால் அவரது காலங்களையும், நியமங்களையும் அவர் நமக்கு வெளிப்படுத்தித் தருவார். காலங்களை அவர் அறியாதவரல்ல; அவரை வாழ்வில் அறிந்தவர்கள் அவர் நியமித்துள்ள நாட்களையும் அறிந்துகொள்வார்கள்.  "சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?" ( யோபு 24 : 1 ) என்று  வேதம் கூறுகின்றது. நேரங்களையும் நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறதை விட்டு அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ளவரையே நோக்கிப்பார்ப்போம். தேவன்  மேலுள்ள நமது விசுவாசம் அவமாகிப் போய்விடாமல் காத்துக்கொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

Bible Meditation - No. 1,438
'Aathavan'
💚 January 15, 2025. 💚
Wednesday

"Ye observe days, and months, and times, and years. I am afraid of you, lest I have bestowed upon you labour in vain." (Galatians 4:10-11)

If we claim to be Christians, it is essential that we live a life of complete trust in God. Such a faith-filled life means prioritizing God above all else and valuing nothing more than Him.

However, today, even among those who identify as Christians, many prioritize cultural traditions and superstitions over God, thereby dishonouring Him. The apostle Paul refers to this behaviour in the verse, "Ye observe days, and months, and times, and years." In many Christian families, while planning significant events, they prioritize “auspicious” days, times, and months over seeking God's will. This reveals a lack of faith and disrespects Christ.

The Bible is filled with examples of great testimonies of faith. In our lives, too, the Lord Jesus Christ has performed marvellous deeds. Yet, many Christians, despite experiencing God's blessings, continue to rely on astrology and superstitions. Paul’s words in today’s verse, "I am afraid of you, lest I have bestowed upon you labour in vain," express the futility of such practices. Observing favourable times and days undermines our Christian faith.

Moreover, we often see marriages arranged based on auspicious timings ending in divorce. This is evidence that these superstitions are unnecessary and baseless.

Dearly beloved, instead of focusing on times and seasons, we must fix our eyes on the One who holds all times and seasons in His hands. The Psalmist realized this truth and declared, "My times are in thy hand: deliver me from the hand of mine enemies, and from them that persecute me." (Psalm 31:15). Our times are in the hands of the Lord Jesus Christ, who alone can deliver us from our troubles and adversaries.

If we live as those who truly know God, He will reveal His appointed times and purposes to us. God is never ignorant of time; those who know Him will also understand His appointed days. As the Scripture says, "Why, seeing times are not hidden from the Almighty, do they that know him not see his days?" (Job 24:1).

Let us stop observing days, months, and times, and instead look to the One who controls them all. Let us guard our faith in God so that it may not be in vain.

Message by: Bro. M. Geo Prakash

No comments: