Wednesday, January 08, 2025

Meditation Verse - பிலிப்பியர் 3: 14 / Philippians 3:14

 வேதாகமத் தியானம் - எண்:- 1,433

'ஆதவன்' 💚ஜனவரி 10, 2025. 💚வெள்ளிக்கிழமை


"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3: 14)

ஆவிக்குரிய வாழ்க்கையினை அப்போஸ்தலரான பவுல் தனது நிரூபங்களில் ஓட்டப்பந்தயம், (1 கொரிந்தியர் 9: 24, 25) மல்யுத்தம் (2 தீமோத்தேயு 2:5) சிலம்பம் (1 கொரிந்தியர் 9: 26) போன்ற விளையாட்டுகளுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். நமது ஆவிக்குரிய வாழ்க்கை எந்த விளையாட்டைப்போல இருந்தாலும் நமது இலக்கு அதில் வெற்றிவாகை சூடுவதாக இருக்கவேண்டுமென்று வலியுறுத்துகின்றார்.   

அதனையே அவர் இன்றைய தியான வசனத்தில், "பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" என்று கூறுகின்றார். அதாவது, தனது இலக்கை இன்னும் தான் அடையவில்லை  "நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3: 12) என்கின்றார்.

நமது பரம அழைப்பின் பந்தயப்  பொருள் என்று குறிப்பிடப்படுவது நித்திய  ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வைத்தான். அந்த இலக்கை அடைவதற்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நமது ஆவிக்குரிய வாழ்க்கை அதனை நோக்கி நகர்வதாகவே இருக்கவேண்டும். அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல் அதனை அடைந்திடவே நாமும் நமது பயணத்தைக் தொடரவேண்டும்.

ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்கு இது அவ்வளவு தெளிவாகப் புரியாது. ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் நாம் தேறினவர்களாக இருக்கின்றோமென்றால்  இந்த சிந்தை நமக்கு இருக்கவேண்டியது அவசியம். இதனையே பவுல் அப்போஸ்தலர் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து கூறுகின்றார்:-  "ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்." ( பிலிப்பியர் 3: 15)

இன்று தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பலருக்கு இந்தத் தெளிவு இருப்பதில்லை. ஆராதனையெனும் பெயரில் ஒரு சில பாடல்களைப்பாடித் துதிப்பதுதான் ஆவிக்குரிய வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.   எனவே பலரிடம் கனியுள்ள ஒரு வாழ்க்கை இல்லாமலிருக்கின்றது. ஆம் அன்பானவர்களே,  தேவனுக்கு ஆராதனை செய்யும் அனைவரும் விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்கள் என்று கூறிட முடியாது. முழுமையான உறுதியான விசுவாசமில்லாதவர்களும் ஆராதனை செய்யலாம். 

மட்டுமல்ல, நித்திய ஜீவனை அடைய இந்த உலகத்தில் விசுவாச போராட்டம் நமக்கு அவசியம். துன்பங்களை விசுவாசத்தோடு ஏற்றுக்கொண்டு வெற்றிபெறும் அனுபவம் அவசியம். அதன் மூலமே நாம் நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ள முடியும். இதனையே அப்போஸ்தலரான பவுல் தனது சீடனாகிய தீமோத்தேயுவுக்கு பின்வருமாறு கூறுகின்றார்:- "விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்" ( 1 தீமோத்தேயு 6: 12)

ஆம் அன்பானவர்களே, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது சுய இரத்தத்தால் ஏற்படுத்தியுள்ள மீட்பினை நாம் பெற்று வாழும்போதுதான் நாம் விசுவாசத்தில் பலத்தவர்களாக வாழமுடியும்; நமது ஆவிக்குரிய இலக்கை நோக்கித் தடையின்றி பயணிக்க முடியும். அப்படி வாழும்போதுதான் நாமும் அப்போஸ்தலரான பவுலைப்போல "கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." என்று கூறமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                        


Bible Meditation - Number: 1,433
‘Aadhavan’
💚 January 10, 2025. 💚
Friday

"I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus." (Philippians 3:14)

The Apostle Paul, in his writings, often compares spiritual life to various athletic pursuits such as running a race (1 Corinthians 9:24-25), wrestling (2 Timothy 2:5), and boxing (1 Corinthians 9:26). Through these analogies, he emphasizes that our spiritual journey, regardless of the sport it resembles, should aim toward achieving victory.

In today’s meditation verse, he says, “I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus.” This signifies that he had not yet attained his ultimate goal. He declares: "Not as though I had already attained, either were already perfect: but I follow after, if that I may apprehend that for which also I am apprehended of Christ Jesus." (Philippians 3:12)

The “prize of the high calling” refers to eternal life – the unending life we are called to inherit. Our spiritual journey must consistently move toward this goal. As Apostle Paul insists, we too must continue our journey with a focus on achieving this ultimate reward.

For those in the early stages of their spiritual journey, this concept may not be very clear. However, as we grow and mature spiritually, this mindset becomes essential. Paul further clarifies this in the following verse: "Let us therefore, as many as be perfect, be thus minded: and if in anything ye be otherwise minded, God shall reveal even this unto you." (Philippians 3:15)

Today, many who claim to be spiritual Christians lack this clarity. They assume that simply singing a few songs of worship constitutes spiritual life. Consequently, their lives often lack the fruit of the Spirit. Dearly beloved, worshiping God does not automatically signify a steadfast faith. Even those with incomplete or wavering faith can participate in worship.

Furthermore, to attain eternal life, the struggle of faith in this world is indispensable. Accepting sufferings with faith and experiencing victory is necessary. Only through such experiences can we lay hold of eternal life. Apostle Paul emphasizes this in his instruction to Timothy: "Fight the good fight of faith, lay hold on eternal life, whereunto thou art also called." (1 Timothy 6:12)

Yes, beloved, only when we live under the redemption wrought by our Lord Jesus Christ through His own precious blood can we become strong in faith and proceed unhindered toward our spiritual goal. It is in living this way that we, like Apostle Paul, can say: "I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus."

Message by: Brother M. Geo Prakash                   

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

சங்கீதம் 44: 6 / Psalm 44:6

  வேதாகமத் தியானம் - எண்:- 1,434 'ஆதவன்' 💚ஜனவரி 11 , 2025. 💚சனிக்கிழமை "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பத...