Saturday, January 04, 2025

Meditation Verse - ஆபகூக் 3: 19 / Habakkuk 3:19

 வேதாகமத் தியானம் - எண்:- 1,431

'ஆதவன்' 💚ஜனவரி 08, 2025. 💚புதன்கிழமை


"ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." ( ஆபகூக் 3: 19)

கர்த்தரோடு நடக்கப்பழகியவர்கள் எந்த எதிர்மறையான சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் இருப்பார்கள். தங்களுக்கு இருக்கும் அனைத்தையும் இழந்தாலும் விசுவாசத்தை இழக்கமாட்டார்கள். இதற்கு யோபு நமக்கு மிகப்பெரிய உதாரணமாக இருக்கின்றார். யோபு தனக்கு இருந்தவை அனைத்தையும்  இழந்தார்; ஆனால் விசுவாசத்தை இழக்கவில்லை. 

இன்றைய தியான வசனத்தில்  ஆபகூக் தீர்க்கதரிசி கூறுவது யோபு கூறுவதற்கு இணையானது. ஏனெனில் இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனங்களில் அவர் கூறுகின்றார், "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." ( ஆபகூக் 3: 17, 18) 

யோபு கூறுவதற்கும் ஆபகூக் கூறுவதற்கும் சிறிய வித்தியாசம் உண்டு. யோபு இருந்தவை அனைத்தையும் இழந்தும் விசுவாசத்துடன் இருந்தார். ஆனால் ஆபகூக், தனக்கு எல்லாம் இருந்தும்  தனக்குரியவைகள் எந்த பலனையும் தராமல் போனாலும் தேவன்மேலுள்ள நம்பிக்கையை இழக்காமல் மகிழ்ச்சியாயிருப்பேன் என்கின்றார். தான்  செல்வங்கள், சொத்துக்கள் என்று கருதும் அத்திமரம், திராட்சைச்செடி, ஒலிவமரம், வயல்கள், ஆட்டுமந்தைகள், மாடுகள் இவை எதுவும்  பலன்தராமல் போனாலும் மகிழ்ச்சியாயிருப்பேன் என்கின்றார் அவர்.     

மட்டுமல்ல, "ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." என்கின்றார். அதாவது எனக்கு உரிய சொத்து சுகங்களை நான் பெலனாகக் கருதவில்லை, தேவனையே பெலனாகக் கருதுகின்றேன், எனவே அவர் என்னைக் கைவிடமாட்டார்  என்கின்றார். தாவீது ராஜாவும்"கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 40: 4) என்று கூறுவதை நாம் வாசித்திருக்கலாம். 

கர்த்தர்மேல் நம்பிக்கைகொள்ளும்போது அவர் நமக்கு உறுதி தருகின்றார். மற்றவர்கள் நம்மை அற்பமாக எண்ணி நடத்திட அவர் அனுமதிக்கமாட்டார். இதனையே இன்றைய தியான வசனத்தில்,  "அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." என்று கூறுகின்றார். 

சுருக்கமாக இன்றைய தியான வசனம் கூறும் கருத்து இதுதான்:- கர்த்தரை நம்பி அவர் ஒருவரையே நாம் பற்றிக்கொள்ளும்போது உலக செல்வங்கள் நமக்கு இரண்டாம்பட்சமாகவே தெரியும். அவைகளை நாம் இழந்துவிட்டாலும் நாம் கவலையடையாமல் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்போம். மட்டுமல்ல, அப்போதும் அவர் பிறர் நம்மை அவமானப்படுத்திட அனுமதிக்காமல் நமது பெலனாக இருந்து நம்மை மற்றவர்களைவிட உயர்வாக நடத்துவார்.  

ஆம், "கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்."

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                      

Scripture Meditation - No: 1,431

AATHAVAN💚 January 08, 2025 💚 Wednesday

"The Lord God is my strength, and he will make my feet like hinds' feet, and he will make me to walk upon mine high places." (Habakkuk 3:19)

Those who have learned to walk with the Lord will not lose hope in any adverse situation. Even if they lose everything, they will not lose their faith. Job serves as an outstanding example for us. Despite losing everything he had; Job did not lose his faith.

In today's meditation verse, the prophet Habakkuk conveys a message similar to Job's. In the preceding verses of today's meditation, Habakkuk says:

"Although the fig tree shall not blossom, neither shall fruit be in the vines; the labour of the olive shall fail, and the fields shall yield no meat; the flock shall be cut off from the fold, and there shall be no herd in the stalls: yet I will rejoice in the Lord, I will joy in the God of my salvation." (Habakkuk 3:17-18)

There is a slight difference between what Job says and what Habakkuk declares. Job maintained his faith even after losing everything he had. In contrast, Habakkuk declares that even if all he possesses yields no fruit or benefit, he will not lose his trust in God but will continue to rejoice in Him. He speaks of the fig tree, vine, olive, fields, flocks, and herds—symbols of wealth and resources—yielding nothing, yet he chooses to find joy in the Lord.

Moreover, Habakkuk affirms: "The Lord God is my strength; he will make my feet like hinds' feet, and he will make me to walk upon mine high places." This indicates that he does not rely on material wealth or possessions as his strength but considers the Lord himself to be his strength. Therefore, he is confident that God will not abandon him. Similarly, King David says: "Blessed is that man that maketh the Lord his trust." (Psalm 40:4)

When we place our trust in the Lord, He gives us assurance. He will not allow others to treat us with contempt. This is reflected in today's meditation verse: "He will make my feet like hinds' feet, and he will make me to walk upon mine high places."

In summary, today's meditation verse teaches us that when we trust in the Lord and cling to Him alone, worldly possessions will seem secondary to us. Even if we lose them, we will not be troubled but will continue to rejoice in the Lord. Moreover, He will not allow others to shame us but will be our strength and raise us above others.

Yes, "Blessed is that man that maketh the Lord his trust."


Message by: Bro. M. Geo Prakash                           

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

Meditation Verse - வெளி. விசேஷம் 22: 14 / Revelation 22:14

  வேதாகமத் தியானம் - எண்:- 1,432 'ஆதவன்' 💚ஜனவரி 09 , 2025. 💚வியாழக்கிழமை "ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாச...