INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Monday, January 27, 2025

Meditation Verse - 2 கொரிந்தியர் 9: 8 / 2 Corinthians 9:8

 வேதாகமத் தியானம் - எண்:- 1,451

'ஆதவன்' ஜனவரி 28, 2025. 💚செவ்வாய்க்கிழமை


"மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்." (2 கொரிந்தியர் 9: 8)

இன்று பொதுவாக அனைவரும் உலக ஆசீர்வாதங்களையே தேவனிடம் வேண்டுகின்றோம். ஆனால் தேவன் உலக ஆசீர்வாதங்களை அளிக்கவும் உலகச் செல்வங்களைச் சேர்க்கவும் நமக்கு உதவிட இந்த உலகினில் வரவில்லை. தனது சுய இரத்தத்தால் நம்மை அவர் மீட்டுத் தமக்கு உரியவராகிக்கொண்டது மேலான ஆவிக்குரிய நோக்கத்தில்தான். ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை அறியவில்லை. ஆலயங்களுக்குச் சென்று தங்கள் சுய தேவைகளை விண்ணப்பங்களாக தேவனிடம் எடுத்துச் சொல்வதே ஜெபம் என்றும் ஆன்மிகம் என்றும் எண்ணிக்கொள்கின்றனர்.

எனவேதான் இன்றைய நம்மைத் தெளிவுபடுத்தக்   கூறுகின்றது, "எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்" என்று. அதாவது, நாம் எல்லா காரியங்களிலும் எப்போதும் பூரணமுள்ளவர்களாக இருக்க தேவன் விரும்புகின்றார். அடுத்து, எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்து அவற்றில் நாம் பெருகவேண்டும் என்று விரும்புகின்றார். இப்படிச் செய்வதற்கான கிருபையினை நம்மில் பெருகச் செய்ய அவர் வல்லவராய் இருக்கிறார்.

இந்த வசனத்தின்படிப் பார்ப்போமானால் நாம் நல்ல செயல்கள் செய்வதற்கு தேவனுடைய கிருபை தேவையாக இருக்கின்றது. உலக மனிதர்கள் பலரும் பலவிதமான நல்ல செயல்களைச் செய்கின்றனர். ஆனால் தேவன் அதனைப் பெரிதாகப் பார்ப்பதில்லை. முதலில் நல்லது செய்யும் மனிதர்கள் சம்பூரணம் அடையவேண்டும்.  அதனைத்தான் "எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும்". என்று கூறப்பட்டுள்ளது. சம்பூரணம் என்பது முழுமையைக் குறிக்கின்றது. காரணம், நல்லது செய்வதற்குமுன் முதலில்  நாமே நல்லவர்களாக இருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். 

இதனையே இயேசு கிறிஸ்து, "நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்." ( லுூக்கா 6: 42) என்று கூறினார். சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பை அகற்றுவது நல்ல செயல்தான். ஆனால் அதற்குமுன் நமது கண்ணிலுள்ள உத்திரத்தை உணர்ந்து அகற்றிடவேண்டியது அவசியம் என்கிறார் தேவன்.

ஆம் அன்பானவர்களே,  நல்லது செய்வதால் நம்மை நாமே நியாயப்படுத்தி உண்மையிலேயே நாம் நல்லவர்கள் என்று எண்ணிக்கொள்ளக்கூடாது. அது நம்மை நாமே ஏமாற்றுவதாகும். நாம் முதலில் முழுமை அடையவேண்டும். அதற்குத் தேவனுடைய கிருபை நமக்கு அவசியம். தேவ கிருபையில் பெருகிடவும் தேவன் நம்மூலம் செயல்படவும் நாம் இடம்கொடுக்கவேண்டும். தேவ கிருபை நம்மில் எப்போது பெருகும்? அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்,  "தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது." (2 பேதுரு 1: 2) என்று. 

அதாவது, முதலில் நாம் பிதாவாகிய தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் வளரவேண்டும். அப்போது நம்மில் தேவ கிருபை பெருகிடும். அதன்பின்னர் நாம் செய்யும் நல்ல செயல்கள் உண்மையிலேயே தேவனுக்கேற்ற நல்ல செயல்களாக இருக்கும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                              

Scripture Meditation - No: 1,451

AATHAVAN 💚 January 28, 2025 💚 Tuesday

"And God is able to make all grace abound toward you; that ye, always having all sufficiency in all things, may abound to every good work." (2 Corinthians 9:8, KJV)

Today, many of us often seek worldly blessings from God. However, God did not come into this world to grant us worldly riches or help us accumulate material wealth. Through His own precious blood, He redeemed us to belong to Him, fulfilling a higher spiritual purpose. Unfortunately, many fail to understand this truth. People often perceive prayer and spirituality as merely presenting their personal needs to God at church.

That is why today's Scripture clarifies: "And God is able to make all grace abound toward you; that ye, always having all sufficiency in all things, may abound to every good work." God desires us to be sufficient in all things at all times and to abound in every good work. He is able to increase His grace in us to accomplish this.

When we reflect on this verse, it becomes clear that we need God's grace to perform good works. Many in the world engage in various charitable deeds, but God does not necessarily regard these acts as significant unless the doer is made complete in Him first. As the verse says, "having all sufficiency in all things," God wants us to be complete before we engage in good works.

Jesus Christ also emphasized this principle when He said, "Either how canst thou say to thy brother, Brother, let me pull out the mote that is in thine eye, when thou thyself beholdest not the beam that is in thine own eye? Thou hypocrite, cast out first the beam out of thine own eye, and then shalt thou see clearly to pull out the mote that is in thy brother’s eye." (Luke 6:42, KJV) Removing the speck from your brother's eye is indeed a good deed, but Jesus first calls for the removal of the beam from your own eye.

Beloved, doing good deeds should not lead us to self-justify or consider ourselves righteous. That would only deceive us. We must first seek completion in Christ. For this, we need God's abundant grace. To grow in grace and allow God to work through us, we must make room for Him in our lives.

When does God's grace abound in us? The apostle Peter explains, "Grace and peace be multiplied unto you through the knowledge of God, and of Jesus our Lord." (2 Peter 1:2, KJV)

In other words, we must first grow in the knowledge of God the Father and our Lord Jesus Christ. As we grow in this knowledge, God's grace abounds in us. Then, the good works we perform will be truly acceptable to God.

Message by: Bro. M. Geo Prakash              

No comments: