INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Friday, January 24, 2025

Meditation Verse - லுூக்கா 24: 29 / Luke 24:29

 வேதாகமத் தியானம் - எண்:- 1,448

'ஆதவன்' 💚ஜனவரி 25, 2025. 💚சனிக்கிழமை


"அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்." ( லுூக்கா 24: 29)

கிறிஸ்து அனுபவத்தை நாம் நமது வாழ்வில் பெற்று மகிழ்ந்திட  முதலில் நாம் அவரை வருந்தி அழைக்கவேண்டியது அவசியம். 

உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து எம்மாவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனது சீடர்கள் இரண்டுபேருடன் ஒரு கிராமத்தான் போல  கூடவே நடந்து சென்றார். அவர்களும் அவரை  யார் என்று அறிந்துகொள்ளவில்லை. எருசலேமில் இயேசு கொலைசெய்யப்பட்ட சம்பவங்களைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டு சென்றனர். 

மரணமடைந்த கிறிஸ்து இயேசுவுக்காக அவர்கள் கவலையோடு இருந்ததை இயேசு அறிந்தார். மேசியா கொல்லப்படவேண்டும் என்று பழைய ஏற்பட்டு நூலில் எழுதப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை அவர் அவர்களுக்கு விளக்கிக்கூறி அவர்களைத் தேற்றினார்.  அவர்கள் செல்லவேண்டிய இடம் வந்தபின்னர் அவர் அதனைக்கடந்து செல்பவரைப்போலக்  கட்டிக்கொண்டார். அப்போது அந்தச் சீடர்கள், "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள்."

அவர்களோடு தங்கிய அவர் உணவு உண்ணும்போது தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். தன்னை யார் என்று அறியாமலேயே அழைத்தச் சீடர்கள் அறியும்படி அவர்களது கண்களைத் திறந்தார். இன்று நம்மில் பலரும் கிறிஸ்தவர்கள் எனினும் தனிப்பட்ட முறையில் அவரை அறியாதவர்களாகவே இருக்கின்றோம். "நீர் எங்களுடனே தங்கியிரும்" என்று நாம் அறியாத இயேசுவை நம்மோடு தங்கும்படி நாம் அழைக்கும்போது அவர் நம்முள்ளத்தில் வருவார்; தன்னை நமக்கு வெளிப்படுத்துவார். 

இதுபோலவே, இயேசு கிறிஸ்து உயிரோடு உலகினில் வாழ்ந்தபோது கானாவூர் திருமண வீட்டார் அவரை அழைத்தனர். "இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்." ( யோவான் 2: 2) என்று வாசிக்கின்றோம். அந்த வீட்டார் அவர் தங்களுக்கு அற்புதம் செய்வார் என்று அறிந்தோ அற்புதத்தை விரும்பியோ அழைக்கவில்லை. காரணம், இயேசு கிறிஸ்து அதற்கு முன் எந்த அற்புதமும் செய்திருக்கவில்லை.  இயேசு தங்கள் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று விரும்பித்தான் அழைத்தனர். ஆனால் இயேசு கிறிஸ்து தனது முதல் அற்புதத்தை அந்தத் திருமண வீட்டில் செய்து தன்னை உலகுக்கு வெளிப்படுத்தினார். 

ஆம் அன்பானவர்களே, இந்தச் சம்பவங்கள் நாம் கிறிஸ்துவை அறியவும் அவர்மூலம் அற்புதங்களைப் பெற்றுக்கொள்ளவும் வழிகாட்டுபனவையாக உள்ளன. முதலில் நாம் அந்தச் சீடர்கள் அழைத்ததுபோல அவரை நமது உள்ளத்தில் வரும்படி  அழைக்கவேண்டும். மட்டுமல்ல, கானாவூர் திருமண வீட்டார் இயேசு தங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று அழைத்ததுபோல அவர் நம் உள்ளத்திலும்  வீட்டிலும் வரவேண்டும் எனும் ஒரே எண்ணமுடையவர்களாக அழைக்கவேண்டும். 

இப்படி கிறிஸ்துவை நாம் அழைக்கும்போது அவர் நமது உள்ளத்தில் புதிய ஆவியால் நிரப்பி நம்மில் வந்து தங்குவார். நாம் எதிர்பாராத  அற்புதங்களை நாம் காணும்படிச் செய்வார்.   நீர் எங்களுடனே தங்கியிரும், என்று அவரை அழைப்போம்; அப்பொழுது அவர் நம்முடனே தங்கும்படி உள்ளே வருவார். 

"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." ( எரேமியா 33: 3) என்கிறார் தேவனாகிய கர்த்தர்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                        

Scripture Meditation - No: 1,448

AATHAVAN 💚 January 25, 2025 💚 Saturday

"But they constrained him, saying, Abide with us: for it is toward evening, and the day is far spent. And he went in to tarry with them." (Luke 24:29)

To experience the presence of Christ and rejoice in our lives, it is essential to invite Him earnestly.

The risen Lord Jesus Christ walked with two of His disciples on their way to a village called Emmaus. They did not recognize Him as He journeyed with them. As they discussed the events surrounding Jesus’ crucifixion in Jerusalem, He perceived their sorrow.

Jesus, knowing their distress over His death, explained the prophecies about the Messiah's suffering as written in the Old Testament, comforting them. When they reached their destination, He acted as though He would go further. But the disciples pleaded earnestly, saying, "Abide with us: for it is toward evening, and the day is far spent."

Jesus stayed with them, and while breaking bread, He revealed Himself. Their eyes were opened, and they recognized Him. Today, many of us identify as Christians, yet we do not personally know Him. When we invite Jesus with the words, "Abide with us," He will enter our hearts and reveal Himself to us.

Similarly, during His earthly ministry, Jesus attended the wedding at Cana. As the Bible records, "And both Jesus was called, and his disciples, to the marriage" (John 2:2). The hosts did not invite Him expecting a miracle, as He had not performed any miracles before that. They invited Him simply because they desired His presence. Yet, Jesus performed His first miracle there, turning water into wine, and revealed His glory to the world.

Beloved, these events serve as a guide for us to know Christ and receive His wonders. Like the disciples who invited Him into their home and the hosts at Cana who welcomed Him into their wedding, we must invite Him earnestly into our hearts and homes.

When we sincerely call upon Christ, He will fill our hearts with His Spirit and abide with us. He will work miracles beyond our expectations. Let us say, "Abide with us," and He will surely come and dwell with us.

"Call unto me, and I will answer thee, and shew thee great and mighty things, which thou knowest not." (Jeremiah 33:3)

God’s Message by: Bro. M. Geo Prakash





                       

No comments: