INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Saturday, January 18, 2025

Meditation Verse - எரேமியா 8: 7 / Jeremiah 8:7

 வேதாகமத் தியானம் - எண்:- 1,443

'ஆதவன்' 💚ஜனவரி 20, 2025. 💚திங்கள்கிழமை


"ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்காட்டுப்புறாவும்கொக்கும்தகைவிலான் குருவியும்  தாங்கள்  வரத்தக்க காலத்தை அறியும்என் ஜனங்களோ கர்த்தரின்  நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று  சொல்." ( எரேமியா 8: 7) 

பறவைகளின் இடப்பெயர்வு பற்றி அறிவியல் பாடத்தில் நாம் படித்துள்ளோம். குளிர் பிரதேசத்துப் பறவைகள் சில குறிப்பிட்டக்  காலங்களில் வெப்பம் தேடி அந்த நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து   இந்தியா போன்ற வெப்பநாடுகளுக்கு  வருவதுண்டுஅவை அங்கு கூடுகட்டிமுட்டையிட்டுகுஞ்சுபொரித்து அவைகளை மீண்டும் தங்கள்  நாட்டிற்கு அழைத்துச் செல்லும். இடப்பெயர்வு செய்யும் பறவைகள் சுமார் ஐயாயிரம் ஆறாயிரம் கிலோமீட்டர் தூரம்  கடல்களைத் தாண்டி பறந்துச் செல்கின்றன. தங்களது சொந்த நாட்டில் குளிர் காலம் எப்போது ஆரம்பமாகும், அங்கிருந்து இடப்பெயர்வு செய்யும் நாட்டிற்குச் சென்றுசேர எவ்வளவு நாட்களாகும்என்ற கணக்குகள் அந்தப் பறவைகளுக்குத் தெரிந்திருக்கின்றதுஆம் அந்த ஞானத்தை தேவன் அவைகளுக்குக் கொடுத்துள்ளார். 

தான் படைத்த ஐந்தறிவு பறவைகளுக்கே இப்படிக் காலங்களைக் கணக்குப்பார்க்கத்தெரிந்திருக்கின்றதே ஆனால் ஆறறிவு கொடுத்திருந்தும் மனிதனுக்கு தேவனது நீதி நியாயங்கள் தெரியவில்லையே என்று இன்றைய தியான வசனத்தில் தேவன் வேதனையுடன் குறிப்பிடுகின்றார்.

தேவன் மனிதர்களைத் தனது சொந்த சாயலிலும் ரூபத்திலும் படைத்தார் என்று நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். ஆனால் வேறு எந்த உயிரினங்களையும் அவர் இப்படிப் படைக்கவில்லை. இப்படிச் சிறப்பானவனாக மனிதனைத் தேவன் படைத்திருந்தும்  மனிதர்களுக்குத் தேவனை அறியும் ஆர்வம் பொதுவாக இல்லாமலேயே இருக்கின்றது. உலகக் காரியங்களைப் பற்றி அறியக் காட்டும் ஆர்வத்தை மனிதர்கள் தேவனை அறியும் காரியங்களுக்குக் காட்டுவதில்லை. 

இன்றைய தியான வசனத்துக்கு இணையாக தேவன் ஏசாயா மூலமும் கூறியுள்ளார், "மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்". (ஏசாயா 1:3) என்று. ஆனால் இந்த உலகத்தில் ஆன்மீக வளர்ச்சிக்கு என்று மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதைப் பார்க்க முடிகின்றது. பல்வேறு ஆலயங்களைக் கட்டுவதைப் பார்க்க முடிகின்றது. ஆனால் இவை தேவன் விரும்பும் காரியங்களல்ல. 

தேவனை அறியாமல் இருந்துகொண்டு நாம் தனிப்பட்ட விதத்தில்  செய்யும் காரியங்கள் தேவ நீதியை வெளிப்படுத்துவதில்லை. தேவனை நாம் அறியும் போதுதான் தேவனது நீதியையும்  அறிய முடியும். எப்படி இயல்பிலேயே  காட்டுப்புறாவும்கொக்கும்தகைவிலான் குரு வியும்  தாங்கள் வரத்தக்க காலத்தை அறிகின்றனவோ அதுபோல தேவனை அறிவது நமது இயல்பான குணமாக மாறவேண்டும். 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனை அறியும் உணர்வுள்ளவர்களாக மாறவேண்டியது அவசியம். நமது வழிபாடுகளையோ, பக்தி முயற்சிகளையோ அல்ல, தேவனை அறியும் அறிவைப் பெறுவதையே தேவன் விரும்புகின்றார். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரோடு ஒப்புரவாகும்போது மட்டுமே அது  சாத்தியம். கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். அப்போது இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ள பறவைகள் தங்கள் வேளையையும் வரத்தக்க காலத்தையும்  அறிவதுபோல நாமும் அவரையும் அவரது நீதி நியாயங்களையும் அறிந்து அவருக்கேற்றபடி வாழமுடியும்.   

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

Scripture Meditation - No: 1,443 

AATHAVAN💚 January 20, 2025, Monday 💚

"Yea, the stork in the heaven knoweth her appointed times; and the turtle and the crane and the swallow observe the time of their coming; but my people know not the judgment of the LORD." (Jeremiah 8:7, KJV)

In our science lessons, we learned about bird migration. Birds from cold regions migrate to warmer countries like India during specific seasons to escape the cold. They build nests, lay eggs, hatch chicks, and eventually return to their native lands with the young ones. Migratory birds travel incredible distances, crossing seas up to 5,000-6,000 kilometres. These birds instinctively know when winter begins in their homeland and how long it will take to reach their migration destination. This wisdom is God-given.

If such five-sense creatures can discern times and seasons, how is it that humans, endowed with six senses, fail to understand the judgments and justice of God? This is the lament of God in today’s meditation verse.

We read in the Bible that God created humans in His image and likeness. Unlike any other creature, humans hold this unique distinction. Yet, humans often lack the desire to know God. While they show great enthusiasm for worldly knowledge, the same enthusiasm is absent when it comes to understanding God.

In alignment with today’s verse, God declares through Isaiah: "The ox knoweth his owner, and the ass his master's crib: but Israel doth not know, my people doth not consider." (Isaiah 1:3, KJV)

However, we see people displaying interest in spiritual development by building magnificent temples and engaging in religious activities. But these are not the things that God truly desires.

Our personal efforts, devoid of knowing God, do not reflect His righteousness. Only by knowing God can we understand His justice and live according to it. Just as the turtle, crane, and swallow instinctively recognize their appointed times, knowing God should become a natural attribute of our lives.

Yes, dear friends, it is essential to become people who seek to know God. God desires not our rituals or devotional attempts but the knowledge of Him. This can happen only when our sins are forgiven, and we are reconciled to Him. Let us confess our sins to Christ and seek His forgiveness. Then, like the birds who know their appointed times, we too can know God, understand His justice, and live lives pleasing to Him.

Message by: Bro. M. Geo Prakash                                             

No comments: