Thursday, January 02, 2025

Meditation Verse - எரேமியா 9: 6 / Jeremiah 9:6

 வேதாகமத் தியானம் - எண்:- 1,429

'ஆதவன்' 💚ஜனவரி 06, 2025. 💚திங்கள்கிழமை

"கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 9: 6)

பலரும் தவறாமல் ஆலயங்களுக்குச் சென்று ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டாலும் ஆலய காரியங்களில் முனைப்புடன் செயல்பட்டாலும் தனிப்பட்ட முறையில் தேவனை அறியாமல் இருக்கின்றனர்.  ஆனால் அவர்களோ ஆலய காரியங்களில் தாங்கள் முனைப்புடன் ஈடுபடுவதால் தங்களைத் தேவனை அறிந்தவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். 

தேவனை வாழ்க்கையில் அறிந்து அவரது அன்பை ருசித்தவர்கள் மற்ற மனிதர்கள் எல்லோரும் தங்களைப்போல தேவனை  அறிந்தவர்களாக மாறவேண்டுமென்று ஜெபிக்கின்றனர்; நற்செய்தியை அறிவிக்கின்றனர். ஆனாலும் பெரும்பாலான மக்கள் சுவிசேஷ சத்தியங்களுக்குச் செவிகொடுப்பதில்லை. உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே தேவனை நோக்கி ஜெபித்து பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வேண்டுதல்கள் செய்து கொண்டிருக்கின்றனர்; தங்களது வாழ்வில் மெய்யான தேவனை அறியாதிருக்கின்றனர். 

இதற்குக் காரணம் என்ன என்பதனை தேவன்  இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். அதாவது, "கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள்" என்கின்றார் தேவன்.  கபடம் என்பது உள்ளொன்று வைத்து வெளியொன்றை பேசும் செயலைக் குறிக்கின்றது. கபடம் என்றால் என்ன என்பதனை இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து தேவன் கூறுகின்றார்:- "அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன்தன் அயலானோடே தன்தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான்." ( எரேமியா 9: 8)

அதாவது நேரில் ஒருவரைப் பார்க்கும்போது அவர்களுக்கு நல்லவர்கள்போலவும் அவர்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துசென்றபின் அவர்களைக்குறித்து அவதூறாகப் பேசுவதும்தான் கபடம். இப்படிக் கபட குணம் இருப்பதால் தேவன் அவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தவில்லை என்கின்றார். ஆம் அன்பானவர்களே, தேவன் மனிதர்கள்  சுத்த எண்ணம் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார். 

வேத வசனங்களை வாசிக்கும்போதோ மற்றவர்கள் அவைகளைப் பேசும்போதோ நமது இருதயத்தில் அது நமது தவறை உணர்த்துமானால் நாம் அவற்றைத் திருத்திக்கொள்ளவேண்டும். ஒரு முறை எனக்குத் தெரிந்த, என்னிடம் நன்கு பேசக்கூடிய  ஒருவர் எனது நண்பரொருவரிடம், "ஜியோ தனது "ஆதவன்" தினசரி தியானங்களில் மறைமுகமாக என்னைக் குறித்து எழுதுகின்றார். அது எனக்கு கஷ்டமாக இருக்கின்றது" என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையில் நான் அப்படி எழுதுவதில்லை. தேவனது வார்த்தைகள் அவரது உள்ளத்தில் அவரது தவறை உணர்த்தியுள்ளன, அவரோ தவறாகவே புரிந்துகொண்டு என்னைக் குற்றப்படுத்துகின்றார்.  ஆனாலும் என்னிடம் பேசும்போது அதனை மறைத்து நான் எழுதும் தியானங்களைப் பாராட்டுகின்றார். 

தேவன் நேரடியாக வந்து மனிதர்களிடம் உன்னைத் திருத்திக்கொள் என்று கூறமாட்டார். வசனங்கள் வழியாக ஏதோ முறையில் மனிதர்களுடன் இடைப்படுவார். அதனை உணர்ந்து நம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டும்.  இன்றைய தியான வசனம் அறிவுறுத்துவதன்படி கபட குணம் நம்மிடம் இருக்குமானால் நம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டும். இயேசு கிறிஸ்து கூறினார், "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.' ( மத்தேயு 5: 37) என்று. கபடமில்லாத மனிதன் உள்ளதை உள்ளபடி பேசுபவனாக இருப்பான். 

இத்தகைய இருதய சுத்தமுள்ளவர்களே தேவனை வாழ்வில் அறிய முடியும். அவர்களுக்குத் தேவன் தன்னை வெளிப்படுத்துவார். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5: 8) 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Scripture Meditation - No: 1,429 
AATHAVAN 💚 January 06, 2025, Monday 

"Thine habitation is in the midst of deceit; through deceit they refuse to know me, saith the Lord." (Jeremiah 9:6)

Many people faithfully attend church services and enthusiastically participate in church activities. However, they fail to know God personally. Yet, they assume that their active involvement in church work means they know God.

Those who have known God in their lives and tasted His love pray that others may also come to know God as they do; they proclaim the Good News. However, the majority of people do not heed the truths of the Gospel. They seek God only for worldly blessings, visiting various places of worship and offering prayers, yet they fail to truly know the living God in their lives.

In today's meditation verse, God explains the reason for this: "Through deceit they refuse to know me." Deceit refers to actions where one harbors one thing internally but speaks or acts differently externally. God further elaborates on what deceit means in the following verse: "Their tongue is as an arrow shot out; it speaketh deceit: one speaketh peaceably to his neighbour with his mouth, but in heart he layeth his wait." (Jeremiah 9:8)

This means that someone might speak kindly to a person in their presence but speak ill of them behind their back. God says He does not reveal Himself to such deceitful people. Yes, dear ones, God desires that humans possess pure hearts.

When reading Scripture or hearing it from others, if it convicts us of our wrongs, we must correct ourselves. I recall an incident where someone I knew, who always spoke kindly to me, told one of my friends: "Geo is indirectly writing about me in his 'Aathavan' daily meditations, it troubles me." In reality, I never wrote anything about him. The Word of God had convicted him of his wrongdoing, but he misunderstood and blamed me. However, when speaking to me, he hides it and appreciate the meditations I write.

God will not directly appear and tell people to correct themselves. Instead, He uses His Word to speak to them in various ways. We must understand this and amend our lives. Today's meditation verse advises us to eliminate deceitful tendencies. Jesus Christ said: "But let your communication be, Yea, yea; Nay, nay: for whatsoever is more than these cometh of evil." (Matthew 5:37). A person without deceit speaks truthfully and straightforwardly.

Only those with pure hearts can truly know God in their lives. God reveals Himself to them. "Blessed are the pure in heart: for they shall see God." (Matthew 5:8)

Message by: Bro. M. Geo Prakash

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

Meditation Verse - வெளி. விசேஷம் 22: 14 / Revelation 22:14

  வேதாகமத் தியானம் - எண்:- 1,432 'ஆதவன்' 💚ஜனவரி 09 , 2025. 💚வியாழக்கிழமை "ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாச...