INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Sunday, January 19, 2025

Meditation Verse - 1 கொரிந்தியர் 10 : 9 / 1 Corinthians 10:9

 வேதாகமத் தியானம் - எண்:- 1,444

'ஆதவன்' ஜனவரி 21, 2025. 💚செவ்வாய்க்கிழமை


"அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக." ( 1 கொரிந்தியர் 10 : 9 )

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி கானான்  சேசத்தை நோக்கி மோசேயால் வழிநடத்தப்பட்டபோது நடந்த சம்பவத்தை அப்போஸ்தலரான பவுல் புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நமக்கு உதாரணமாக எடுத்துக்கூறி நாம் தேவனை சோதிக்கக்கூடாது எனும் கருத்தை வலியுறுத்துகின்றார். 

தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு வனாந்தரத்தில் தண்ணீரையும் இறைச்சியையும் மன்னாவையும் அளித்து வழிநடத்தினார். ஆனால் அவர்கள் அதனை அற்பமான உணவாக எண்ணிக்கொண்டனர்.  எகித்தில் அவர்கள் உண்டதுபோல அவர்களுக்கு திருப்தியளிக்கும் உணவாக அது தெரியவில்லை. எனவே அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசினார்கள். இதனால் தேவன் அவர்களைக் கொள்ளிவாய்ப் பாம்புகளால் தண்டித்தார். இதனை நாம் எண்ணாகமம் நூலில்  பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்." ( எண்ணாகமம் 21 : 5, 6 )

இன்றைய தியான வசனத்தில் இந்தச் சம்பவத்தை அப்போஸ்தலரான பவுல் நமக்கு எச்சரிக்கையாகக் கூறுகின்றார். அதாவது இஸ்ரவேல் மக்கள் திருப்தியற்று தேவனைச் சோதித்ததுபோல நாம் கிறிஸ்துவைச் சோதிக்கக் கூடாது. அப்படிச் சோதிப்போமானால் நாமும்  அவர்கள் அழிவுற்றதுபோல அழிந்துபோவோம் என்கின்றார். 

இஸ்ரவேல்  மக்களுக்குத் தாங்கள்  அடிமைகளாக வாழ்ந்த எகிப்து வாழ்க்கை சிறப்பானதாகத் தெரிந்ததுபோல கிறிஸ்துவை அறிந்து ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது சிலவேளைகளில் நமது பழைய வாழ்க்கை அனுபவங்கள் நமக்குச் சிறப்பானவைபோலத் தெரியலாம். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழும்போது உலக மக்கள் அனுபவிப்பதுபோன்ற இன்பங்கள் நமக்கு கிடைக்காமலிருக்கலாம். ஆனால் அதற்காக நாம் மனதினுள் முறுமுறுத்து வாழ்வோமானால் நாம் கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாக முடியாது. 

எகிப்திலிருந்து வந்த இஸ்ரவேலர்கள் தேவனைச் சோதித்தபோது பாம்புகளால்   அழிந்துபோயினர். இன்று அதுபோல நாம் கிறிஸ்துவைச் சோதித்து நமது ஆவிக்குரிய வாழ்வில் திருப்தியற்று பழைய பாவ நாட்டங்களில் இன்பமுற்று வாழ்வோமானால் சாத்தான் எனும் வஞ்சக பாம்பு நமது ஆவிக்குரிய வாழ்வைக் கெடுத்து அழித்துவிடுவான். ஆம் அன்பானவர்களே, இதனால்தான் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக." என்று நம்மை அறிவுறுத்துகின்றார். 

எந்த வேளையிலும் இஸ்ரவேலரைப்போல  நாம் பழைய வாழ்க்கையோடு நமது ஆவிக்குரிய புதிய வாழ்வை ஒப்பிட்டு பழைய வாழ்க்கை இப்போதைய வாழ்க்கையைவிட மேலானதாக இருந்தது என எண்ணாமலிருக்கவேண்டும். அப்படி எண்ணுவது கிறிஸ்துவைச் சோதிப்பதாகும். எனவே, அப்படி எண்ணாமல் நமது ஆவிக்குரிய வாழ்வை ரசித்து வாழ்வதே தேவன் விரும்பும் செயலாக இருக்கின்றது. 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

Scripture Meditation - No: 1,444

AATHAVAN 💚 January 21, 2025, 💚 Tuesday

"Neither let us tempt Christ, as some of them also tempted, and were destroyed of serpents." (1 Corinthians 10:9, KJV)

The apostle Paul recounts the story of the Israelites’ journey from Egypt to Canaan, led by Moses, as an example and a warning for us. He emphasizes that we must not test God as the Israelites did.

God provided the Israelites with water, meat, and manna in the wilderness, yet they considered it trivial and unsatisfying compared to the food they ate in Egypt. Dissatisfied, they spoke against God and Moses. As a result, God sent fiery serpents to punish them, as recorded in Numbers:

"And the people spake against God, and against Moses, wherefore have ye brought us up out of Egypt to die in the wilderness? For there is no bread, neither is there any water; and our soul loatheth this light bread. And the LORD sent fiery serpents among the people, and they bit the people; and much people of Israel died." (Numbers 21:5-6, KJV)

In today’s meditation verse, Paul warns us not to repeat the mistakes of the Israelites. They tested God with their discontentment and perished. Similarly, if we test Christ, we too risk destruction.

Just as the Israelites viewed their life in bondage in Egypt as better than their journey to freedom, we may sometimes feel that our former sinful life was more pleasurable than our spiritual walk with Christ. While following Christ, we might lack the worldly pleasures others seem to enjoy. However, if we murmur and grumble about this in our hearts, we cannot please Christ.

When the Israelites tested God, fiery serpents brought destruction. Likewise, if we test Christ through discontentment and return to the pleasures of sin, Satan, the deceiver, can destroy our spiritual life.

Beloved, this is why Paul warns us, "Neither let us tempt Christ, as some of them also tempted, and were destroyed of serpents."

At no time should we compare our spiritual life with our former sinful life, considering the latter superior. Such thoughts are equivalent to testing Christ. Instead, we must delight in our spiritual walk, which is what God desires.

Devotional Message by :- Brother M. Geo Prakash

                                      

No comments: