INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Tuesday, January 28, 2025

Meditation Verse - 2 கொரிந்தியர் 9: 10 / 2 Corinthians 9:10

 வேதாகமத் தியானம் - எண்:- 1,452

'ஆதவன்' 💚ஜனவரி 29, 2025. 💚புதன்கிழமை


"விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்." (2 கொரிந்தியர் 9: 10)

பரிசுத்தவான்களுக்கு (அதாவது, நம்மிடையே வாழும் ஆவிக்குரிய  சகோதர சகோதரிகளுக்கு) நாம் உதவிடவேண்டும் என்பதனை விளக்கும்போது அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். இந்த அதிகாரத்தின்  துவக்கத்தில் இதனையே அவர், "பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை." (2 கொரிந்தியர் 9: 1) என்று கூறி ஆரம்பிக்கின்றார்.

இன்றைய தியான வசனத்தில் "விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர்" என்று அவர் கூறியிருந்தாலும் அது நாம் விதைக்கும் தானிய விதையையும் உண்ணும் உணவையும் நேரடியாகக் குறிக்கவில்லை. மாறாக, ஆவிக்குரிய விதையையும் ஆவிக்குரிய வாழ்வின் விளைச்சலையும்  அது குறிக்கின்றது. இதனையே இன்றைய தியான வசனத்தில் இறுதிப்பகுதியில் அவர், "உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்." என்று குறிப்பிடுகின்றார்.

அதாவது நம்மிடையே வறுமையில் வாழும் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கு நாம் உதவிடும்போது தேவன் நம்மில் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார். நாம் நீதியுள்ள ஆவிக்குரிய வாழ்வு வாழ உதவிடுவார். 

சாதாரண பிச்சைக்காரர்களுக்கு உதவுவதற்கும் ஆவிக்குரிய வாழ்வு வாழும் வறியவர்களுக்கு உதவுவதற்கும் வித்தியாசம் உண்டு. காரணம், பிச்சையெடுக்கும் பலர் அந்தப்பணத்தைத் தகாத விதத்தில் செலவழிக்கின்றனர்.  மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளின்முன்னே மது பாட்டில்கள் வாங்குவதற்குக் காத்திருக்கும் பல பிச்சைக்காரர்களை நாம் பார்க்கலாம். மட்டுமல்ல, பிச்சையெடுக்கும் பணத்தில் பீடி, சிகரெட் வாங்குவதற்கும் இதர போதைப் பொருட்களை வாங்குவதற்கும் அவர்களில் பலர் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர்.

நாம் ஒருவருக்கு பிச்சையளிக்கும்போது அவர் அந்தப்பணத்தை என்னகாரியங்களுக்குச் செலவழிகின்றார் என்று  பார்க்கவேண்டிய அவசியம் இல்லையெனினும்  தேவையில் இருக்கும் ஆவிக்குரிய மக்களுக்கு நாம் பணஉதவி செய்வது இவர்களுக்கு உதவுவதைவிட மேலானது.  இந்த உதவிகளை, "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்." (2 கொரிந்தியர் 9: 7) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் நம்மோடு வசிக்கும் ஏழை விசுவாசிகளுக்கு உதவி செய்வோம். அதுவும் காட்டாயத்தின்பேரில் அல்ல, மாறாக நமது மனதின் எண்ணப்படி கொடுத்து உதவுவோம். நாம் மகிழ்வுடன் எவ்வளவு கொடுத்தாலும் அது தேவனுக்கு ஏற்புடையதே. அப்படி நாம் கொடுக்கும்போது விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் நமக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, நம்மில் நீதியின் விளைச்சலைப் பெருகும்படிச் செய்வார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

Scripture Meditation - No: 1,452
AATHAVAN
💚 January 29, 2025 💚
Wednesday

"Now he that ministereth seed to the sower both minister bread for your food, and multiply your seed sown, and increase the fruits of your righteousness." (2 Corinthians 9:10)

When explaining the importance of helping the saints (spiritual brothers and sisters living among us), Apostle Paul brings up today’s meditation verse. At the beginning of this chapter, he states, "For as touching the ministering to the saints, it is superfluous for me to write to you." (2 Corinthians 9:1).

In today’s meditation verse, while Paul says, “He that ministereth seed to the sower both minister bread for your food,” he is not referring directly to the seeds we sow or the food we eat. Instead, he is speaking of spiritual seed and the fruits of a spiritual life. This is clarified in the latter part of the verse, where he states, “and increase the fruits of your righteousness.”

This means that when we help spiritually needy brothers and sisters among us, God will increase the fruits of righteousness in us. He will help us lead a righteous, spiritually enriched life.

There is a difference between helping random beggars and supporting the poor who live a spiritual life. Many beggars misuse the money they receive. In the evenings, you can often see them outside liquor shops, buying alcohol. Some use the alms to buy cigarettes, beedis, or other intoxicants.

While it is not mandatory to track how someone spends the money we give, it is far better to assist those in spiritual need than to aid those who might misuse it. Regarding this, Apostle Paul says, "Every man according as he purposeth in his heart, so let him give; not grudgingly, or of necessity: for God loveth a cheerful giver." (2 Corinthians 9:7).

Dear beloved, let us support the poor believers who live a spiritual life among us. Let us give cheerfully, not out of compulsion, but according to the desire of our hearts. Whatever we give joyfully will be acceptable to God. When we give in this way, the one who provides seed to the sower and bread for food will supply and multiply the seed for sowing and increase the harvest of righteousness in us.

God's Message: Bro. M. Geo Prakash




                                   

No comments: