Friday, January 10, 2025

Meditation Verse - 1 கொரிந்தியர் 16: 13 / 1 Corinthians 16:13

 வேதாகமத் தியானம் - எண்:- 1,435

'ஆதவன்' 💚ஜனவரி 12, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை

"விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்." (1 கொரிந்தியர் 16: 13)

இன்றைய தியான வசனம் ஆவிக்குரிய வாழ்வில் நாம் கடைபிடிக்கவேண்டிய நான்கு குணங்களை வலியுறுத்திக் கூறுகின்றது. அவை:- நாம் ஆவிக்குரிய காரியங்களில் விழிப்புடன் இருக்கவேண்டும், கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருக்கவேண்டும், ஒரு ஆணைப்போல உறுதிவேண்டும்,  இறுதியில் ஆவியானவரின் திடன் பொருந்தியவர்களாக இருந்து உலகத்தை வெற்றிகொள்ளவேண்டும்.  

இங்கு விழித்திருப்பது என்பது உறங்காமல் இருப்பதைக் குறிக்கவில்லை. மாறாக, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும் என்று நமக்குத் தெரியாது. அது இரவில் திருடன் வருவதுபோல வரும் என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். மேலும் அவர் கூறிய 10 கன்னியர் உவமையில் இதனையே வலியுறுத்திக் கூறினார். அந்த உவமையின் இறுதியில் அவர் கூறுகின்றார்:- "மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்." ( மத்தேயு 25: 13) என்று. அதாவது நாம் அவர் எப்போது வந்தாலும் அவரை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கவேண்டும். 

இரண்டாவது, இந்த வசனத்தில் விசுவாசத்தைப் பற்றிக்  கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மார்க்கமே விசுவாசத்தை அடிப்டையாகக் கொண்டது தான். தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கைக்கு விசுவாசமே அடிப்படை. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு, "விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்." ( தீத்து 1: 14) என்று அறிவுரை கூறுகின்றார். எனவே தேவன்மேலுள்ள விசுவாசத்தில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.

மூன்றாவது இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ளது, புருஷராயிருங்கள் என்று. அதாவது ஒரு நல்ல ஆண்மகனைப்போல நாம் திடமான உறுதியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். இந்த உறுதி நமக்குள் ஆவியானவர் செயல்படும்போதுதான் நம்மில் வெளிப்படும். புயல்காற்று கப்பலை அலைக்கழித்து உயிர் பிழைப்போமோ மாட்டோமோ என்று கப்பல் பயணிகள் மனம்தளர்ந்து இருந்தபோது அப்போஸ்தலரான பவுல் திடமான புருஷனாக இருந்து அவர்களைத் தைரியப்படுத்தியதை நாம் அப்போஸ்தலர்ப்பணி நூலில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:-  "ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 27: 25)

இன்றைய தியான வசனம் இறுதியாகக் கூறுகின்றது, திடன் கொள்ளுங்கள் என்று. ஆம் அன்பானவர்களே, உலகத்தின் உபத்திரவங்கள், துன்பங்களைக்கண்டு மனம் துவளாமல் நாம் திடன்கொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். இதனையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து   "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." ( யோவான் 16: 33) என்று நமக்கு அறிவுறுத்தினார். 

எனவே இன்றைய தியான வசனம் கூறும் நான்கு காரியங்களையும் நாம் கடைபிடிக்க உறுதியாக இருப்போம். அவரது வருகைக்காக விழிப்பாய் இருப்போம், விசுவாசத்தை தளரவிடாமல் காத்துக்கொண்டு ஒரு ஆண்மகனைப்போல உறுதியாகச் செயல்படுவோம், திடன்கொண்டவர்களாக நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தை ஜெயித்ததுபோல நாமும் ஜெயம் பெற்றவர்களாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

Scripture Meditation - No. 1,435

AATHAVAN 💚 January 12, 2025, 💚 Sunday

"Watch ye, stand fast in the faith, quit you like men, be

 strong." (1 Corinthians 16:13)

Today's meditation verse emphasizes four essential qualities we must cultivate in our spiritual life. These are:

Being watchful in spiritual matters.

Standing firm in faith in the Lord.

Acting with courage like a man.

Being strong in the Spirit to overcome the world.

Here, being watchful does not mean staying awake physically but being spiritually alert. Our Lord Jesus Christ has reminded us that His second coming will occur unexpectedly, like a thief in the night. He also emphasized this truth in the parable of the ten virgins, concluding with, "Watch therefore, for ye know neither the day nor the hour wherein the Son of man cometh." (Matthew 25:13) This means we must always be prepared to meet Him, regardless of when He comes.

The verse also speaks of faith, which is foundational to Christian life. A life acceptable to God is built on faith. That is why Apostle Paul advised his disciple Titus, "Rebuke them sharply, that they may be sound in the faith." (Titus 1:13) We, too, must remain unwavering in our faith in God.

The third instruction in today’s verse is to "quit you like men." This means we should exhibit firm courage, like a noble man, especially in our spiritual walk. Such courage is possible when the Holy Spirit works in us. When the passengers aboard a ship were gripped with fear during a storm, wondering if they would survive, Apostle Paul displayed this courage. He comforted them, saying: "Wherefore, sirs, be of good cheer: for I believe God, that it shall be even as it was told me." (Acts 27:25)

Finally, the verse urges us to "be strong." Dear believers, we must live with strength and determination, unmoved by the tribulations and troubles of this world. Our Lord Jesus Christ Himself said: "These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: but be of good cheer; I have overcome the world." (John 16:33)

Let us commit ourselves to adhere to the four principles outlined in today’s meditation. Let us stay watchful for His coming, stand firm in faith, act with courage like a man, and live as overcomers, strengthened by the victory of our Lord Jesus Christ.

Message by : Bro. M. Geo Prakash
                                    

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

Meditation Verse - 1 கொரிந்தியர் 16: 13 / 1 Corinthians 16:13

  வேதாகமத் தியானம் - எண்:- 1,435 'ஆதவன்' 💚ஜனவரி 12 , 2025. 💚ஞாயிற்றுக்கிழமை "விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், ...