ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,087 💚 ஜனவரி 31, 2024 💚 புதன்கிழமை 💚
"கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்." ( எபேசியர் 5 : 10 )
இன்று பெரும்பாலான மக்கள் கர்த்தருக்குப் பிரியமானது என்ன என்று சோதிப்பதைவிடக் கர்த்தரைச் சோதித்துப் பார்ப்பவர்களாகவே இருக்கின்றனர். அதாவது அவர்கள் தங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்று எண்ணிப்பார்த்துத் தங்களைத் திருத்துவதைவிட தேவையில்லாத உலகக் காரியங்களை மனதில் எண்ணி அவற்றை கர்த்தர் நிறைவேற்றவேண்டுமென்று விருப்பம்கொண்டு அதற்காகவே ஜெபிக்கின்றனர்.
ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொண்டாலும் சிலரது ஜெபங்களைப் பார்த்தால் ஆவிக்குரியவர்கள் என்று நாம் கூறமுடியாது. பெரும்பாலும் உலக காரியங்களுக்கே முன்னுரிமை கொடுத்து ஜெபிக்கின்றனர். மட்டுமல்ல சிலர், தங்களுக்குப் பிடிக்காதவர்களைவிட வாழ்க்கையில் தாங்கள் முன்னேறிவிடவேண்டும் என விரும்பி ஜெபிக்கின்றனர்.
தங்களுக்குப் பிடித்த எல்லாம் நடக்கவேண்டும், தங்கள் விரும்பும் அரசியல் கட்சியே ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்றுகூட ஜெபிக்கின்றனர். மட்டுமல்ல, "ஆண்டவரே எனக்கு எதிராகச் செயல்படும் எதிர்வீட்டு மனிதன் வாழ்க்கையை நிர்மூலமாக்கும்" என்று சிலர் ஜெபிக்கின்றனர். பல கிறிஸ்தவ ஊழியர்களே, "ஆண்டவரே அந்த சபையைவிட (குறிப்பிட்ட ஊழியர் ஒருவரது சபைப் பெயரைக் கூறி) அதிக ஆத்துமாக்களை எனது சபைக்குக் கொண்டுவரும் என்று ஜெபிக்கின்றனர்.
ஒருமுறை ஒரு பாட்டி என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, "பிரதர், பக்கத்துவீட்டுக்காரன் சரியில்லை அவனால் ஒரே பிரச்சனை ....எனது ஜெபமே ஆண்டவரே அவனை இங்கிருந்து துரத்திவிடும் என்பதுதான்; ஆண்டவர் கேட்கமாட்டேன் என்கிறார்." என்று வேதனைப்பட்டார். அன்பானவர்களே, பகைவர்களை நேசிக்கச் சொல்லிக் கற்பித்த தேவன் இத்தகைய ஜெபத்தை எப்படிக் கேட்பார் என்று இவர்கள் எண்ணுவதில்லை.
நமது எந்த ஜெபமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜெபித்ததுபோல, "ஆண்டவரே உமது சித்தம் எதுவோ அதுவே நிறைவேறட்டும்" என்று இருக்கவேண்டும். இதுவே வேதம் நமக்குக் கற்பித்துள்ள ஜெபமுறைமை.
இன்று விசுவாசிகள் பலரும் வேதத்துக்கு முரணாக ஜெபிக்க ஒரு காரணம் சில ஊழியர்கள்தான். பழைய ஏற்பாட்டு நூல்களிலிருந்து சில வசனங்களை மேற்கோள்காட்டி இப்படி ஜெபித்தால் எதிரியை வெல்லலாம் என்று போதிக்கின்றனர். எனவேதான் இன்றைய வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்."
நாம் செய்யும் செயல்கள், நாம் பேசும் பேச்சுக்கள், நமது ஜெபங்கள் இவை மனிதர்களுக்கல்ல, தேவனுக்கு ஏற்புடையனவாக இருக்குமா என்று நாம் சிந்திக்கவேண்டும்.
கிறிஸ்தவர்கள் என்று நம்மை நாம் கூறிக்கொண்டு இத்தகைய மனநிலையில் இருப்போமானால் நாம் இன்னும் கனியற்றவர்களாக இருளிலே இருக்கின்றோம் என்று பொருள். எனவேதான் "கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 11 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.
ஆண்டு துவங்கிவிட்டால் பிரபல ஊழியர்கள் நடத்தும் கூட்டங்கள் முதல் சிறு ஊழியர்கள் நடத்தும் கூட்டங்கள் வரை "இந்த ஆண்டு ஆசீர்வாத ஆண்டு" என்றுதான் கூறப்படுகின்றதே தவிர, தேவ ஆசீர்வாதம்பெற உங்கள் வாழ்க்கையைச் சோதித்துப்பாருங்கள். கனியற்ற செயல்பாடுகளை விட்டுவிடுங்கள் என்று பெரும்பாலும் கூறப்படுவதில்லை.
இன்றைய தியான வசனம் நம்மைச் சோதனை செய்து பார்க்கச் சொல்கின்றது. பள்ளிகளில் விஞ்ஞான ஆய்வுகூடங்களில் பரிசோதனைகள் செய்வோம். குறிப்பிட்ட முறையில் நாம் ஆய்வைச் செய்தால்தான் எதிர்பார்க்கும் விளைவுகளைப் பெறமுடியும். ஆம் அன்பானவர்களே, வேத வசனங்களின் அடிப்படையில் நமது வாழ்க்கையினை அமைத்துக்கொள்ளும்போதுதான் தேவன் சரியான விளைவுகளை நமது வாழ்வில் தந்து மகிழப்பண்ணுவார். "கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்."
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்
WHAT IS PLEASING THE LORD
‘AATHAVAN' 📖✝ BIBLE MEDITATION No:-
1,087 💚 January 31, 2024 💚
Wednesday 💚
"Proving what is acceptable
unto the Lord." (Ephesians 5: 10)
Most people today are
testing the Lord rather than testing what pleases the Lord. That is, instead of
thinking about how their life is and correcting themselves, they think of
worldly things that are unnecessary and wish the Lord to fulfill them and pray
for that.
Even though claim to be
spiritual people, if we look at the prayers of some people, we cannot say that
they are spiritual. Mostly they give priority to worldly affairs and pray. Not
only that, some people wish and pray that they will advance in life ahead of
those they do not like.
They even pray that whatever
they like should happen and that the political party of their choice should
come to power. Not only that, but some pray, "Lord, destroy the life of
the adversary who works against me." Even many Christian pastors pray,
"Lord bring more souls to my church
than that church (saying the name of a particular minister's church)."
Once a grandmother was
talking to me and said, "Brother, my neighbour is not well with me. He is
very problematic. My prayer is that the
Lord should drive him out of here. the Lord is not answering my prayer”. Beloved,
they do not consider how God, who taught us to love our enemies, would hear
such a prayer.
Any of our prayers should be
as the Lord Jesus Christ prayed, "Lord, let your will be done." This
is the way the scriptures teach us to pray.
One of the reasons many
believers today pray un-scripturally is because of some ministers. Quoting some
verses from the Old Testament, they teach that if you pray like this, you can
defeat the enemies. That is why in today's verse, the apostle Paul says,
"Test yourselves to see what pleases the Lord."
We should think whether the
actions we do, the words we speak, and our prayers are acceptable to God and
not to humans.
If we call ourselves
Christians and remain in such a state of mind, it means that we are still
barren and in darkness. That is why "And have no fellowship with the unfruitful
works of darkness, but rather reprove them." (Ephesians 5: 11) says
the apostle, Paul.
As the year begins, from
celebrity pastors to small street preachers say, "this year is a blessed
year" and check your life for God's blessings. They do not say to give up
unfruitful activities.
Today's meditation verse
asks us to test ourselves. When we do experiments in science labs in schools, only
if we do the research in a specific way can we get the expected results. Yes,
dear ones, only when we structure our life based on the scriptures, God will give
us the right results and make us happy. Let us "Proving what is acceptable
unto the Lord."
God’s Message :- Bro. M. Geo Prakash