இதுவும் ஆவிக்குரிய அனுபவமே / IT IS ALSO A SPIRITUAL EXPERIENCE

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,086     💚 ஜனவரி 30, 2024 💚 செவ்வாய்க்கிழமை  💚 

"இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்." ( யோபு 23 : 8, 9 )

ஆவிக்குரிய வாழ்வில் இன்று நாம் சிலவேளைகளில் அனுபவிக்கும் அனுபவத்தைப் பக்தனாகிய யோபுவும் அனுபவித்துள்ளார். சில வேளைகளில் நாம் தேவனுக்கு நெருக்கமாக இருப்பதுபோன்ற அனுபவங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது திடீரென தேவனற்ற வெறுமையான ஒரு நிலைமை நமக்கு ஏற்படலாம். துன்பங்களும் நேரிட்டு நாம் ஆவிக்குரிய வாழ்வில் சாதாரண உலக மனிதர்களைவிட ஒன்றுமில்லாதவர்கள்போல ஆகிவிடுகின்றோம். இது ஆவிக்குரிய வாழ்வில் தேவன் நம்மை நடத்தும் ஒரு விதமாகும்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தப் பரிசுத்தவானாகிய சாது சுந்தர்சிங் அவர்களும் இந்த அனுபவத்தை அடைந்துள்ளார். அவர் தேவனிடம் இதுபற்றி கேட்கின்றார், "ஆண்டவரே, நான் பாவம் செய்யாமல் இருந்தாலும் சில வேளைகளில் திடீரென்று நீர் என்னைவிட்டு அகன்றதுபோல உணர்கின்றேன். என்  மகிழ்ச்சி எல்லாம் அற்றுப்போய் சாதாரண மனிதர்களைவிடக் கீழானவன்போல  ஆகிவிடுகின்றேனே இது ஏன்?"

அவருக்கு தேவன் பதில் கூறினார், "மகனே, நீ எப்போதுமே மேலான ஆவிக்குரிய அனுபவங்களோடு இருந்தால் நீ அறியாமலேயே உன்னுள் பெருமை வந்துவிடும். மட்டுமல்ல நீ உன்னை மற்றவர்களைவிட மேலானவனாகக் கருதி வாழ்வாய். என்னாலேயல்லாமல் நீ இல்லை; உன் ஆவிக்குரிய வாழ்வும் இல்லை. இதனை உனக்கு உணர்த்தவும் ஆவிக்குரிய வாழ்வில் பெருமைகொண்டு நீ விழுந்துபோகாமல் இருக்கவுமே இப்படி நான் உன்னைக் கைவிட்டுவிடுவதுபோல இருக்கின்றேன். ஆனால் நான் உன்னைக் கைவிடவில்லை; ஒரு தாய் நடக்கப் பழகும் தனது குழந்தை நடப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பது போல உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.  உன்னால் முடியாது எனும் நிலை வரும்போது நான் உன்னைத் தூக்கி விட்டுவிடுவேன்" 

யோபுவும் இந்த அனுபவத்தை அனுபவித்ததால்தான் "நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்." என்று கூறுகின்றார். 

ஆனால் அதற்காக தேவனைவிட்டும் அவரது கட்டளைகளைவிட்டும் நான் பின்வாங்கவில்லை என்கின்றார் யோபு. "அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்." ( யோபு 23 : 12 )

அன்பானவர்களே, நீங்களும் உங்கள்  ஆவிக்குரிய வாழ்வில் இப்படித் தேவனால்  கைவிடப்பட்டதுபோன்ற நிலைமையை அனுபவித்திருக்கலாம். அதற்காக மனம் தளரவேண்டாம்.  தேவனுக்கு எதிராக முறுமுறுக்கவேண்டாம், அவரது கட்டளைகளைக் கைவிடவேண்டாம். தேவன் உங்களது நிலைமையைத் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கின்றார். ஏற்றவேளையில் உதவிக்கரம் நீட்டுவார். ஆம், அவர் உங்கள் ஆவிக்குரிய வாழ்வையும் விசுவாசத்தையும் புடமிட்டுக்கொண்டிருக்கின்றார். 

இதனையே யோபு, "ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." ( யோபு 23 : 10 ) என்று உறுதியாக நம்பிக்கையுடன் கூறுகின்றார். நாமும் அவரைப்போலக்  கூறி கர்த்தர்மேல் விசுவாசமாக இருப்போம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்           

    IT IS ALSO A SPIRITUAL EXPERIENCE 

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,086 💚 January 30, 2024 💚 Tuesday 💚

"Behold, I go forward, but he is not there; and backward, but I cannot perceive him: On the left hand, where he doth work, but I cannot behold him: he hideth himself on the right hand, that I cannot see him:" (Job 23: 8, 9)

The pious Job also experienced what we sometimes experience today in the spiritual life. Sometimes when we are living with the experiences of being close to God, we can suddenly experience a state of emptiness without God. Sufferings also occur and we become nothing more than ordinary worldly people in spiritual life. This is one way God treat us in the spiritual life.

Sadhu Sundersingh, a saint who lived in the last century, also had this experience. He asks God about this, "Lord, even though I have not sinned, sometimes I feel as if you are suddenly far away from me. Why is it that all my joy has disappeared and I have become inferior to ordinary people?"

God answered him, "Son, if you always have higher spiritual experiences, pride will come into you without realizing it. Not only that, you will live as if you are superior to others. Apart from me, you do not exist, and you do not have spiritual life. To make you realize this, I am leaving you like this so that you do not fall into pride in spiritual life. I am there. But I am not abandoning you; I am watching you like a mother watching her toddler walk. When you can't, I will lift you up and leave you."

It is because Job experienced this experience he says I go forward, but he is not there; and backward, but I cannot perceive him: On the left hand, where he doth work, but I cannot behold him: he hideth himself on the right hand, that I cannot see him.

But for that I did not turn back from God and His commandments, says Job. "Neither have I gone back from the commandment of his lips; I have esteemed the words of his mouth more than my necessary food." (Job 23: 12)

Beloved, you too may have experienced such abandonment by God in your spiritual life. Don't be discouraged by that. Do not grumble against God, do not forsake His commandments. God is watching over your situation from a distance. He lends a helping hand in times of need. Yes, He is testing your spiritual life and faith.

This is what Job said with confidence, "But he knoweth the way that I take: when he hath tried me, I shall come forth as gold." (Job 23: 10) Let us say like him and be faithful to the Lord. May the Lord himself bless us.

God’s Message :- Bro. M. Geo Prakash                              

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்