Thursday, January 25, 2024

தன்னைத்தான் சோதித்தறிந்து.. / EXAMINE HIMSELF

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,085    💚 ஜனவரி 29, 2024 💚 திங்கள்கிழமை  💚 


"எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்".    ( 1 கொரிந்தியர் 11 : 28 )

இயேசு கிறிஸ்து தனது உடலையும் இரத்தத்தையும் நமது மீட்புக்காகச் சிந்தினார். அதனால்தான் நாம் இன்றும் பாவங்கள் நீங்கி இரட்சிப்பு அனுபவத்தைப் பெறுகின்றோம். இதனையே, "என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது." ( யோவான் 6 : 55 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இந்த ஆவிக்குரிய சத்தியம் பெரியது. இயேசு கூறிய வார்த்தைகளுக்கு உலக அர்த்தம்கொள்வோமானால் அவரைவிட்டுப் பின்வாங்கிய பலச்  சீடர்களைப்போல பின்மாறியவர்களாகவே இருப்போம். அன்று இயேசு கூறியதன் ஆவிக்குரிய பொருள் புரியாததால் "அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்." ( யோவான் 6 : 66 ) 

இந்த உலகத்து  உணவுகளை உண்பது நமது உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. இயேசுதரும் இந்த கிறிஸ்துவின் உடலை உண்பதே மெய்யான உணவு.  அது நமது ஆத்துமாவுக்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. ஆனால் இதனைப் புரிந்து கொள்ளாததால்தான்   பலச்  சீடர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கிப்போனார்கள். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காகத் தனது உடலையும் இரத்தத்தையும் பலியாக்கினர் எனும் சத்தியத்தை நாம் நற்கருணை உட்கொள்ளும்போது ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுகின்றோம். ஆனால் இது வெறும் வெளி அடையாளமாக  இது இருந்தால் அர்த்தமற்றது. மட்டுமல்ல, அப்படி உட்கொள்வது நமக்குச் சாபமாகவும் மாறிவிடுகின்றது என்று வேதாகமம் நம்மை எச்சரிக்கின்றது.

"ஏனெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்." ( 1 கொரிந்தியர் 11 : 29 ) என்று கூறப்பட்டுள்ளது. மட்டுமல்ல, "இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.' ( 1 கொரிந்தியர் 11 : 30 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

ஆராதனைகளில் கலந்துகொள்ளும்போதெல்லாம் நற்கருணை உட்கொள்ளவேண்டுமென எண்ணாமல் நாம் அதற்கேற்ற தகுதியுள்ளவர்களாக இருக்கின்றோமா என நம்மை நிதானித்து அறிந்து உட்கொள்வதே தேவன் விரும்புவது. இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்" என்று கூறுகின்றார். 

இப்படி நம்மை நாம் நிதானித்து அறிந்து அவரது மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவர்களாக இருந்தால் மட்டுமே நமக்கு நித்தியஜீவன் உண்டு; அவர் நம்மைக் கடைசிநாளில் எழுப்புவார். பிறர் நம்மைப்பற்றி என்ன எண்ணுவார்கள் என்று நிதானிப்பதைவிட நமது தகுதியை நாம் நிதானித்து அறியவேண்டும்.  நமது தகுதியை உணர்ந்து கிறிஸ்துவின் உடலை உட்கொள்ளும்போது அவருக்கு ஏற்புடையவர்கள் ஆகின்றோம். அப்போதுதான்  இயேசு கிறிஸ்து கூறியபடி அவரது மாம்சம் மெய்யான போஜனமாகவும் அவரது  இரத்தம் மெய்யான பானமுமாக நமக்கு மாறும்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                    

                 EXAMINE HIMSELF

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,085 💚 January 29, 2024 💚 Monday💚

"Let every man examine himself, and eat of this bread, and drink of this cup." (1 Corinthians 11:28)

Jesus Christ shed His body and blood for our redemption. That is why even today we experience salvation by getting rid of our sins. This is what Jesus Christ said, "My flesh is true food, and my blood is true drink." (John 6:55)

This spiritual truth is great. If we take the worldly meaning of the words of Jesus, we will be backsliders like many disciples who turned away from him. Because they did not understand the spiritual meaning of what Jesus said that day, "many of his disciples went back and did not walk even with him." (John 6:66)

Eating the foods of this world helps our body to grow. Eating the body of Jesus Christ which is true food and it is food for our soul. But not understanding this caused many disciples to withdraw from him.

When we partake of the Eucharist, we confess and accept the truth that the Lord Jesus Christ sacrificed His body and blood for us. But it is meaningless if it is merely an external sign. Not only that, but the Bible warns us that such consumption becomes a curse for us.

“But let a man examine himself, and so let him eat of that bread, and drink of that cup. For he that eateth and drinketh unworthily, eateth and drinketh damnation to himself, not discerning the Lord's body. For this cause many are weak and sickly among you, and many sleep. (1 Corinthians 11: 28 - 30) Paul the apostle said.

Whenever we participate in the services, God wants us to take a moment to analyse whether we are worthy of partake of the Eucharist. This is what the apostle Paul says in today's meditation verse, "Let every man examine himself, eat of this bread, and drink of this cup."

Thus we shall have eternal life if we know ourselves and eat his flesh and drink his blood; He will raise us up on the last day. Rather than judging what others will think of us, we should judge and know our worth. When we realize our worth and partake of Christ's body, we become acceptable to Him. Only then will His flesh become our true food and His blood our true drink as Jesus Christ said.

God’s Message :- Bro. M. Geo Prakash                            

No comments: