இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, January 24, 2024

விசுவாசமூலமாய் உண்டாயிருக்கிற நீதி / RIGHTEOUSNESS BY FAITH

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,084      💚 ஜனவரி 28, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை  💚 

"........நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கு" ( பிலிப்பியர் 3 : 9 )

இன்றைய தியானத்தில் அப்போஸ்தலரான பவுல் இரண்டுவித நீதிகளைக் குறித்துக் கூறுகின்றார். ஒன்று, நியாயப்பிரமாணத்தினால் வருகின்ற நீதி. அதாவது சுய நீதி என்று கூறுகின்றார். மற்றொன்று, கிறிஸ்து இயேசுவைப்  பற்றும் விசுவாசத்தினால் வருகின்ற தேவனால் உண்டாயிருக்கின்ற நீதி. 

நியாயப் பிரமாணத்தினால் நீதிமானாக விரும்புபவர்கள் பொதுவாக வெளிப்பார்வைக்கு நல்ல செயல்கள் செய்வதுபோலத் தெரிந்தாலும் அவர்கள் உண்மையில் நீதிமான்களல்ல. இந்த உலகத்தில் நாம் பார்க்கும் பல கிறிஸ்தவர்களும் மேலோட்டமாகப் பார்த்தால் தேவ கட்டளைகளை நிறைவேற்றும் நீதிமான்கள்போலத் தெரியும். ஆனால் எல்லோரும் தேவனின் முன்னால் நீதிமான்களல்ல. காரணம்,  தேவன் வெறுமனே கட்டளைகளுக்குக் கீழ்படிவதைவிட உள்ளான மனதில் ஏற்படும் மாற்றத்தை விரும்புகின்றார். 

உள்ளான மாற்றம் நாம் கட்டளைகளுக்குக் கீழ்படிவதால் வராது. மாறாக, கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசம்கொள்ளும்போது மட்டுமே ஏற்படும். கட்டளைகள் கூறுவதால் நாம் தவறாமல் ஆலயங்களுக்குச் செல்லலாம், காணிக்கைகள் கொடுக்கலாம், தர்மம் செய்யலாம். ஆனால் இப்படிக் கட்டளைகளை நிறைவேற்றுவதால் நாம் தேவனுக்குமுன் நீதிமானாக முடியாது.  எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது." ( ரோமர் 4 : 3 ) என்று கூறுகின்றார். 

ஆபிரகாம் காலத்தில் கட்டளைகள் கிடையாது. ஆனால் அவர் தேவன்மேல் கொண்ட விசுவாசத்தால் நீதியுள்ள வாழ்க்கை வாழ்ந்தார். 

வெளிபார்வைக்கான மனிதன் வேறு; உள்ளான மனிதன் வேறு. நாம் வெளி மனிதனாக நல்லது செய்யலாம். ஆனால் நமது உள்மனிதனைத் தேவன் அறிவார். கிறிஸ்து நமது உள்ளத்தில் வராமல் நாம் உள்ளன மாற்றம் அடைய  முடியாது. நியாயப்பிரமாணத்தினால்  உள்ளான மனிதனில் மாற்றம் கொண்டு வர முடியாது. அப்படி முடியாததால்தான் கிறிஸ்து உலகினில் வந்து பாடுபடவேண்டியதாயிற்று. 

"அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, தேவ நீதியானது நியாயப்பிரமாணத்தால் வருவதல்ல. மாறாக தேவன் அருளும் கிருபையிலான மீட்பு அனுபவத்தால் ஏற்படுகின்றது. நியாயப்பிரமாணமே போதுமென்றால் கிறிஸ்து மரித்திருக்கவேண்டிய  அவசியமில்லை. "நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 )

கிறிஸ்துவின் சிலுவை மரணத்தால் உண்டான தேவ கிருபையை வீணாக்காமல் அதனைச் சார்ந்துகொள்வோம். கிறிஸ்து நம்மில் வந்து செயல்புரிந்து கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவர்களாய் காணப்படும்படிக்கு நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                         


                RIGHTEOUSNESS BY FAITH

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,084 💚 January 28, 2024 💚 Sunday💚


"…… not having mine own righteousness, which is of the law, but that which is through the faith of Christ, the righteousness which is of God by faith:" (Philippians 3: 9)

In today's meditation, the apostle Paul talks about two types of righteousness. One is the righteousness that comes from the law. It means self-righteousness. The other is the righteousness of God that comes through faith in Christ Jesus.

Those who want to be righteous by the law of righteousness are generally not righteous in reality, even though they appear to be doing good in this world. Many of the Christians we see in this world seem like righteous people who follow God's commandments. But not everyone is righteous before God. The reason is that God desires a change of heart rather than mere obedience to commandments.

Inner change does not come because we obey commands. Rather, it only happens when we believe in Christ Jesus. We can regularly go to temples, give offerings and do charity because of the commandments. But by fulfilling these commandments we cannot become righteous before God. That is why the apostle Paul said, "For what saith the scripture? Abraham believed God, and it was counted unto him for righteousness." (Romans 4: 3)

There were no commandments in Abraham's time. But he lived a righteous life because of his faith in God.

Man of appearance is different; The inner man is different. We can do good as outsiders. But God knows our inner man. Without Christ coming into our hearts, we cannot be changed. The law cannot bring about change in the inner man. That is why Christ came into the world and had to suffer to make was not possible in to possible.

"For what the law could not do, in that it was weak through the flesh, God sending his own Son in the likeness of sinful flesh, and for sin, condemned sin in the flesh:" (Romans 8: 3) we read.

Yes beloved, the righteousness of God does not come by the law. Rather, it is through the experience of God's gracious redemption. Christ need not have died if the law was sufficient. "I do not frustrate the grace of God: for if righteousness come by the law, then Christ is dead in vain." (Galatians 2: 21)

Let's not waste God's grace created by him through Christ's death on the cross and depend on it. Let us commit ourselves to Christ so that he may come and work in us and be seen as having the righteousness of God which comes through faith in Christ.

God’s Message :- Bro. M. Geo Prakash                       

No comments: