Monday, January 22, 2024

என்னை முத்தமிடுவாராக / LET HIM KISS ME

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,083    💚 ஜனவரி 27, 2024 💚 சனிக்கிழமை  💚 

"அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது." ( உன்னதப்பாட்டு 1 : 2 )

நாம் ஏற்கெனவே பல தியானங்களில் பார்த்துள்ளபடி தேவனுக்கும் நமக்குமுள்ள உறவு மெய்யான காதல் உணர்வு போன்றதாக இருக்கவேண்டும். அந்த அன்புறவுக்குமுன் வேறு எதுவும் - எந்த உலக ஆசை எண்ணங்களும் - குறுக்கே நிற்க முடியாது. அப்படி இருக்குமானால் நாம் தேவனை மனதார நேசிக்கவில்லை என்று பொருள். உன்னதப்பாட்டு இந்த அனுபவத்தோடு எழுதப்பட்டதுதான்.

அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது என்பது தேவ அன்பை ருசித்த மனிதன் அந்த ஆர்வத்தில் கூறும் வார்த்தைகள்தான்.   உன்னதப்பாட்டு ஆசிரியரின் அனுபவத்தை தாவீது ராஜாவும் அறிந்திருந்தார். எனவே, இப்படி தேவ அன்பை ருசித்து அனுபவித்த தாவீது நம்மையும் இந்த அனுபவத்தை ருசிக்க கூறுகின்றார். "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 34 : 8 ) ஆம், அவரை ருசித்துப் பார்ப்போமானால் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களாக இருப்போம். 

மட்டுமல்ல, கர்த்தரை உண்மையாய் அறிந்து ருசித்து அவருக்கேற்ப வாழும்போது நம்மில் கனியுள்ள வாழ்க்கை ஏற்படும். ஆவியின் கனிகள் நம்மில் செயல்பட நாம் கர்த்தர்மேல் மெய் அன்புள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். இப்படி தேவ அன்பை ருசித்து கனியுள்ள வாழ்க்கை வாழ்ந்த உன்னதப்பாடலாசிரியர் கர்த்தரை தன்னிடம் வந்து தன்னிடமுள்ள கனிகளை உண்ணுமாறு பின்வருமாறு அழைக்கின்றார்;-

"வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக." ( உன்னதப்பாட்டு 4 : 16 )

"என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக" என்று மேற்படி வசனம் கூறுகின்றது. வேதாகம அடிப்படையில், ஆவிக்குரிய மக்களாகிய நாம்தான் இஸ்ரவேலர்; நாம்தான் அவரது திராட்சைத் தோட்டம். இதனை நாம் ஏசாயா நூலில் வாசிக்கலாம்.   "சேனைகளின் கர்த்தருடைய திராட்சைத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே" ( ஏசாயா 5 : 7 )

நாம் வெறும் வழிபாட்டுக் கிறிஸ்தவர்களாக இருப்போமானால் அவரது அன்பையோ அவரது உறவையே நாம் வாழ்வில் உணரமுடியாது. அவரை வாழ்வில் அனுபவிக்கும்போது தாவீது கூறுவதுபோல நமது வாழ்வில் அவரை ருசிக்கமுடியும். அந்த அனுபவம்தான் கிறிஸ்துவை மட்டுமே நாம் நேசிக்கத் தூண்டும். அப்போதுதான் நாம் கனியுள்ள வாழ்க்கை வாழ முடியும். மனத் தைரியத்தோடு "என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக" என்று அவரை அழைக்க முடியும். 

அன்பானவர்களே, அவரது வாயின் முத்தங்களே நம்மை மேலான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ உதவுவதுடன் நாம் கனியுள்ள வாழ்க்கை வாழவும் உதவும் என்பது  தெளிவாகின்றது. கர்த்தரை உண்மையான அன்புடன் பற்றிக்கொள்வோம்; அவருக்கேற்ப வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்போது உன்னதப்பாடல் ஆசிரியரின் அனுபவம் நமக்கும் கிடைக்கும். "உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது." என்று நாமும் வாழ்க்கையில் அனுபவித்துக் கூற முடியும்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                           

                     LET HIM KISS ME 

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,083   💚 January 27, 2024 💚 Saturday💚

"Let him kiss me with the kisses of his mouth: for thy love is better than wine." (Song of Songs 1: 2)

As we have already seen in many meditations, our relationship with God should be like a true love feeling. Nothing else – no worldly desire thoughts – can stand in the way of that love. If that is not the case, it means that we are not loving God wholeheartedly. Song of Songs was written with this experience.

Let him kiss me with the kisses of his mouth: Thy love is sweeter than wine are the words of the man who has tasted the love of God in that passion. King David also knew the experience of the author of Song of Songs. Therefore, David, who tasted God's love like this, tells us to taste this experience too. "O taste and see that the LORD is good: blessed is the man that trusteth in him." (Psalms 34: 8) Yes, if we taste Him, we will be faithful to Him.

Not only that, when we truly know the Lord and live according to Him, we will have a fruitful life. For the fruits of the Spirit to work in us, we need to be true lovers of the Lord. Thus, the author of Song of songs, who lived a fruitful life tasting God's love, invites the Lord to come to him and eat the fruits he has as follows; -

"Awake, O north wind; and come, thou south; blow upon my garden, that the spices thereof may flow out. Let my beloved come into his garden, and eat his pleasant fruits." (Song of Songs 4: 16)

The above verse says, "Let my beloved come into his garden and eat his good fruits." Biblically, we, a spiritual people, are Israelites; We are his vineyard. We can read this in Isaiah. "For the vineyard of the LORD of hosts is the house of Israel, and the men of Judah his pleasant plant:" (Isaiah 5: 7)

If we are just worshiping Christians, we will never feel His love or His relationship in our lives. When we experience Him in life, we can taste Him in our lives as David says. It is that experience that makes us love Christ alone. Only then can we live a fruitful life. With courage we can call upon him, "Let my beloved come into his garden, and eat of his good fruit."

Beloved, the kisses of His mouth help us live a higher spiritual life and help us live a fruitful life. Let us cling to the Lord with true love; Let us commit ourselves to live according to Him. Then we will also get the experience of the author of Song of Songs, "Your love is sweeter than wine." We can also experience that in life.

God’s Message :- Bro. M. Geo Prakash                     

No comments: