Friday, January 19, 2024

மகிமையை அடையும்பொருட்டாக / OBTAINING THE GLORY

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,083       💚 ஜனவரி 26, 2024 💚 வெள்ளிக்கிழமை  💚 


"நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்." ( 2 தெசலோனிக்கேயர் 2 : 14 )

இந்த உலகத்தில் நாம் வாழ்ந்தாலும் இது நமது இறுதி இலக்கல்ல; மாறாக,  நாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்குச் செவிகொடுத்து அதன்படி வாழ்ந்து நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப்போல மகிமைக்குள் பிரவேசிக்கவேண்டும். அவரது மகிமையை நாம் பெறவேண்டும். அதற்கேற்றாற்போல இந்த உலகத்தில் வாழவேண்டும்.

சொத்து, புகழ், இந்த உலகத்து மகிமை இவைகளுக்காக நாம் உழைத்துக்கொண்டிருந்தால் அல்லது இவைகளையே நமது அன்றாட ஜெபங்களில் நாம் தேவனிடம் கேட்டுக்கொண்டிருந்தால்  ஒருவேளை அவைகளைப் பெற்றுக்கொண்டாலும் நமது மறுவுலக வாழ்வு அழிவுக்குரியதாகவே இருக்கும்.  சுவிசேஷம் எழுதப்பட்டதன் நோக்கமே நாம் இரட்சிப்பு அனுபவம் பெற்று மகிமை வாழ்வை அடையவேண்டும் என்பதே. "அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்." என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? "ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்." ( 2 தெசலோனிக்கேயர் 2 : 15 ) என்கின்றார் பவுல். 

இன்றைய வசனம் கூறுவது, நாம் நமது அழைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே. பிற மதங்களுக்கும் கிறிஸ்தவ மார்க்கத்துக்குமுள்ள வேறுபாடு இதுதான். பிற மதங்கள், வழிபாடுகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் இந்த உலக ஆசீர்வாதத்துக்கான வழியைக் காட்டுகின்றன.  ஆனால் கிறிஸ்தவ மார்க்கம் (மதமல்ல) நித்திய ஜீவனுக்கான வழியினைக் காட்டுகின்றது. 

தேவனது வார்த்தைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம்தான் மேலானதே தவிர  உலக ஆசீர்வாதங்களுக்கான வேண்டுதல்களல்ல. அன்று ஏதேனில்  ஆதாம் செய்த தவறையே இன்றுவரை மக்கள் செய்துகொண்டிருக்கின்றனர். தேவனது வார்த்தைகளைப்  புறக்கணித்த ஆதாமும் ஏவாளும் கண்களின் இச்சையில் விழுந்து  உலகப் பொருளுக்காக ஆர்வம்கொண்டனர்.  இன்றும் அதுபோலவே தேவனது வார்த்தைகள் புறக்கணிக்கப்படுகின்றன. 

தேவனது வார்த்தைகள் ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றன. எனவே அவையே உயிரளிப்பவை. "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது." ( யோவான் 6 : 63 ) என்றார் இயேசு கிறிஸ்து. அந்த ஜீஎவனுள்ள வார்த்தைகளே சுவிசேஷ வார்த்தைகள். இந்த வார்த்தைகள் மூலம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் நம்மை அழைத்துள்ளார். 

எனவே கிறிஸ்துவின் மகிமையினை நாம் அடையவேண்டுமானால் அவரது வார்த்தைகள் நம்மில் செயல்புரிய அனுமதிக்கவேண்டும். அந்த சுவிசேஷ வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும். "சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்." என்கின்றார் பவுல். 

தேவ வார்த்தைகளை உறுதியாக நம்புவோம், ஏற்றுக்கொள்வோம். அவற்றை வாழ்வாக்குவோம். அப்போதுதான்  நாம் அவரது மகிமையில் பங்குபெறுபவர்களாக மாறமுடியும்.  

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்               

               OBTAINING THE GLORY 

'AATHAVAN'📖 BIBLE MEDITATION No:- 1,083 💚 January 26, 2024 💚 Friday 💚

"Whereunto he called you by our gospel, to the obtaining of the glory of our Lord Jesus Christ." ( 2 Thessalonians‍ 2 : 14 )

Although we live in this world this is not our ultimate goal; Instead, we should listen to the gospel of Christ and live according to it and enter into glory like our Savior Jesus Christ. We must receive His glory. We should live in this world accordingly.

If we are working for wealth, fame and glory of this world or if we are asking God for these things in our daily prayers, even if we get them, our life in the hereafter will be disastrous. The purpose of the writing of the gospel is so that we may experience salvation and attain a life of glory. "He has called you to that salvation." Paul the apostle said.

What should we do about it? "Therefore, brethren, stand fast, and hold the traditions which ye have been taught, whether by word, or our epistle." (2 Thessalonians‍ 2: 15) says Paul.

Today's verse tells us that we must understand the purpose of our calling. This is the difference between Christianity and other religions. All other religions, cults and rituals point the way to this worldly blessing. But Christianity (not religion) shows the way to eternal life.

Our emphasis is on God's Word and not on prayers for worldly blessings. People are still doing the same mistake that Adam did in Eden. Ignoring the words of God, Adam and Eve fell into the lust of the eyes and were interested in worldly things. Even today God's words are ignored.

God's words are spirit and life. So, they are life-giving. "It is the spirit that quickeneth; the flesh profiteth nothing: the words that I speak unto you, they are spirit, and they are life.' (John 6: 63) said Jesus Christ. Those words are the living gospel words. Through these words he has called us to that salvation through the gospel to attain the glory of our Lord Jesus Christ.

Therefore, if we want to attain the glory of Christ, we must allow His words to work in us. Heed those gospel words. "Stand ye, brethren, and observe the manners which we have preached unto you, whether by word or epistle." Paul said.

Let's firmly believe and accept God's words. Let's make them alive. Only then can we become partakers of His glory.

God’s  Message :- Bro. M. Geo Prakash          

No comments: