ஆதவன் 🔥 997🌻 அக்டோபர் 21, 2023 சனிக்கிழமை
"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 3 : 5 )
இந்த உலகத்தில் நாம் பல காரியங்களை நமது திறமையால் சிறப்பாகச் செய்யலாம். இப்படிப் பல உலக காரியங்களை மனிதர்களாகிய நாம் சிறப்பாகக் செய்தாலும் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது தேவனே நம்மை நடத்துவதால் நம்மால் பல காரியங்களை முன்போலச் செய்ய முடிவதில்லை. மட்டுமல்ல, தேவனால் நாம் நடத்தப்படும்போது உலக காரியங்களில்கூட அவரது துணை நமக்குத் தேவைப்படுகின்றது. காரணம் நாம் நமது திறமையல்ல அவரது உடனிருப்பே நமது பலம் எனும் உண்மையினை அப்போது அறிந்துகொள்கின்றோம்.
ஒரு நிறுவனம் தனக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது நல்லத் திறமையுள்ளவர்களையேத் தேர்ந்தெடுத்துப் பணியில் அமர்த்தும். ஆனால் நமது கர்த்தரோ திறமையைப் பார்ப்பதில்லை. திறமையில்லாதவர்களையும் அற்பமானவர்களையும் தேர்ந்தெடுத்து தனக்காகப் பயன்படுத்துகின்றார். கல்வியறிவு அதிகமில்லாத கிறிஸ்துவின் சீடர்கள்தான் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துவின் போதனைகள் பரவி விரிந்திட காரணமாயிருந்தனர்.
படித்தவர்களும் படிக்காதவர்களும் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தனர்; செய்கின்றனர். காரணம் அவர்களுக்குள் இருந்து செயல்படும் ஆவியானவர். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." என்று கூறுகின்றார்.
ஆம், பல கிறிஸ்தவ ஊழியர்கள் தாங்கள் வாழும் பகுதி மக்களால் அற்பமாய் எண்ணப்பட்டவர்கள்தான். ஆனால் தேவன் அவர்களை பயன்படுத்துவதால் "உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 28 ) என்பதை உண்மையென்பதை அவர்கள் இன்றும் மெய்ப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அன்பானவர்களே, இன்று ஒருவேளை நாம் பிற மனிதர்களாலும், உறவினர்களாலும், நண்பர்களாலும் அற்பமாய் எண்ணப்பட்டவர்களாக இருக்கலாம். பணியிடங்களில் நமது தகுதியை குறைவாய் மதிப்பிடலாம். இத்தகைய சூழ்நிலையில் நம்மை தேவனுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்து அவரது உதவியை நாம் நாடும்போது தேவன் நமக்கு உதவிசெய்யவும் நம்மை எல்லா விதத்திலும் தகுதிப்படுத்தவும் வல்லவராய் இருக்கின்றார். ஆம், "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 )
எனவே நாம் நமது உலக மற்றும் ஆவிக்குரிய காரியங்களில் சிறந்து விளங்க அவரது ஞானத்துக்காக ஜெபிக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. "உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்." (யாக்கோபு 1;5).
ஆம் அன்பானவர்களே, நம்மால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல; நமது தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. இந்த எண்ணம் வரும்போது நமக்குள் தாழ்மை குணம் ஏற்படும்; பெருமை, அகம்பாவம் போன்ற குணங்கள் மறையும்.
சுய தகுதியை மறப்போம்; நமது பலத்துக்கும் தகுதிக்கும் தேவ ஞானத்துக்கும் தேவ தயவை வேண்டுவோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
OUR SUFFICIENCY
AATHAVAN
🔥 997🌻 Saturday, October 21, 2023
"Not
that we are sufficient of ourselves to think anything as of ourselves; but our
sufficiency is of God;" (2 Corinthians 3: 5)
We can do many things in
this world better with our skills. Although we humans do many worldly things
well, when we live a spiritual life, we cannot do many things as before because
God started guiding us after we knew Him. Moreover, when we are guided by God,
we need His help even in worldly affairs. Because then we come to know the fact
that our strength is not our ability but His presence.
When a company chooses its
employees, it selects and hires the best talent. But our Lord does not look at
talent. He chooses the incompetent and the insignificant and uses them for
himself. Disciples of Christ who did not have much education were responsible
for the spread of Christ's teachings throughout the world today.
Educated and uneducated
ministered to Christ; are doing. The reason is the Spirit working within them.
That is why the apostle Paul said, “we are sufficient of
ourselves to think anything as of ourselves; but our sufficiency is of God;"
Yes,
many Christian workers are looked down upon by the people in the area they live
in. But because God uses them "And base things of the world, and things which
are despised, hath God chosen, yea, and things which are not, to bring to
nought things that are:" (1 Corinthians 1: 28) is true even today
they are proving it.
Beloved,
today we may be slighted by other people, relatives and friends. Our competence
may be underestimated in the workplace. In such a situation, when we surrender
ourselves completely to God and seek His help, God is able to help us and
qualify us in every way.
Yea, "Not by might, nor by power, but by my
spirit, saith the LORD of hosts."(Zechariah 4: 6)
So
it is imperative that we pray for His wisdom to excel in our worldly and
spiritual affairs. “If any of you lack wisdom, let him ask of God, that giveth
to all men liberally, and upbraideth not; and it shall be given him.” ( James 1
: 5 )
Yes, beloved, we are not
worthy to think of anything as if we could; our worthiness is from God. When
this thought comes to us, we become humble; Qualities like pride and arrogance
will disappear.
Let's forget self-worth; Let
us pray for God's grace for our strength, merit and God's wisdom.
Gods’ Message:- ✍️
Bro. M. Geo Prakash