ஆதவன் 🔥 995🌻 அக்டோபர் 19, 2023 வியாழக்கிழமை
"அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்." ( ஏசாயா 53 : 12 )
பிதாவாகிய தேவன் ஏசாயா தீர்க்கதரிசிக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து வெளிப்படுத்திய வார்த்தைகளே இன்றைய தியான வசனம். "அவர் அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம்" என்று இன்றைய வசனத்தில் வாசிக்கின்றோம். அந்த அநேகரின் நாமும் ஒருவராக இருக்கின்றோம். நமக்காகவும் அவர் வேண்டிக்கொண்டுள்ளார். எனவேதான் நாம் இன்று மீட்பு அனுபவம் பெற்றுள்ளோம்.
ஆனால் இயேசு கிறிஸ்து பாடுபட்டதைக்கண்டு அவரது காலத்து மக்கள் பலரும் தவறாக எண்ணினர். ஆம், அவர் கடவுளால் தண்டிக்கப்பட்டுளார் என எண்ணினர். அதனை ஏசாயா, "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்." ( ஏசாயா 53 : 4 ) என்று கூறுகின்றார்.
நாம் கண்ணால் காண்பவைகளும் காதால் கேட்பவைகளும் எப்போதும் முற்றிலும் உண்மையாக இருப்பதில்லை. பல காரியங்களின் உண்மைப் பின்னணி நமக்குத் தெரியாது. இன்று பத்திரிகைகளில் வெளிவரும் பல செய்திகளும் இப்படித்தான். தினசரி பத்திரிகைச் செய்திகளுக்கும் உண்மை நிலவரத்துக்கும் வேறுபாடு உண்டு. புலனாய்வு இதழ்கள் ( Investigative Journals ) இப்படி மறைக்கப்பட்டச் செய்திகளை வெளிக்கொண்டு வருவதுண்டு.
இப்படியே இயேசு கிறிஸ்து பாடுபட்டதைக் கண்ணால் கண்டு அன்று மக்கள் தவறாக எண்ணியதை ஏசாயா தனது புலனாய்வு தரிசனத்தால் விளக்குகின்றார். இதனையே, "அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்." என்று கூறுகின்றார். அதாவது, அப்படி நாம் எண்ணினோம் ஆனால் அது மெய்யல்ல, மாறாக, "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்" என்கின்றார்.
மேலும், "நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்." ( ஏசாயா 53 : 6 ) என்று வாசிக்கின்றோம்.
"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ( ஏசாயா 53 : 5 )
இப்படி அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன் என்கிறார் பிதாவாகிய தேவன். அன்பானவர்களே, இதனை வாசிக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என எண்ணிப் பார்ப்போம்.
"அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 4 ) நம்மை முற்றிலும் அவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
HOW SHALL WE ESCAPE ?
AATHAVAN 🔥 995🌻
October 19, 2023 Thursday
"Therefore, will I divide him a portion with the great, and
he shall divide the spoil with the strong; because he hath poured out his soul
unto death: and he was numbered with the transgressors; and he bare the sin of
many, and made intercession for the transgressors." (Isaiah 53: 12)
Today's meditation verse is
the words that God the Father revealed to Prophet Isaiah about the Lord Jesus
Christ. We read in today's verse, “because he hath poured out his soul unto death: and he was
numbered with the transgressors; and he bare the sin of many, and made
intercession for the transgressors." We are one of those transgressors. He prayed
for us too. That is why we have the redemption experience today.
But seeing that Jesus Christ
suffered, many people of his time thought wrongly. Yes, they thought he was
being punished by God. That is why Isaiah said, "Surely he hath borne our griefs, and carried our
sorrows: yet we did esteem him stricken, smitten of God, and afflicted." (Isaiah 53: 4)
What we see with our eyes
and hear with our ears is not always completely true. We do not know the true
background of many things. This is the case with many of the news that appear
in the newspapers today. There is a difference between daily press reports and
actual situation. Investigative Journals bring out such hidden messages.
Isaiah explains with his
investigative vision that the people of that day thought wrongly seeing the
suffering of Jesus Christ in this way. This is, “yet we did esteem him stricken, smitten of God, and
afflicted." That is, we thought so but it is not true,
rather, He says, "Surely
he hath borne our griefs, and carried our sorrows"
And, "All
we like sheep have gone astray; we have turned every one to his own way; and
the LORD hath laid on him the iniquity of us all." (Isaiah
53: 6) we
read.
"But he was wounded for our transgressions, he was bruised
for our iniquities: the chastisement of our peace was upon him; and with his
stripes we are healed.' (Isaiah 53: 5)
Thus, he put his soul to
death, and being numbered among the unrighteous, and bearing the sin of many,
and praying for the unrighteous, saith God the Father. Beloved, as we read
this, let us consider how grateful we should be to the Lord Jesus Christ.
"How
shall we escape, if we neglect so great salvation; which at the first began to
be spoken by the Lord, and was confirmed unto us by them that heard him; God
also bearing them witness, both with signs and wonders, and with divers’
miracles, and gifts of the Holy Ghost, according to his own will?" (Hebrews
2: 3,4)
Let us
pray by giving ourselves completely to Him. May the Lord bless us.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment