Sunday, May 06, 2018

வெளிச்சத்துக்கு வருவோம் ......!


வெளிச்சத்துக்கு வருவோம் ......!

- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


(ஒளியின் தூதனுடைய  (ஒளியான மெய்  தேவனுடைய தூதர்களின்)   வேடத்தைத் தரித்துக்கொண்ட பொய்யனின் (சாத்தானின்) ஊழியர்கள் பெருகி மக்களை சத்தியத்தை அறியவிடாமல் தடை செய்து வரும் காலகட்டத்தில் நாம் வாசிக்கின்றோம். பிரபல ஊழியர்கள் என்று அறியப்படும் பலரும் இன்று இப்படி வஞ்சிக்கிற ஆவியைக் கொண்டு மக்கள் சத்தியத்தினை அறியத்  தடையாக உள்ளனர். இவர்களிடமிருந்து ஆவிக்குரிய வாழ்வை மக்கள் காத்துக்கொள்ள வழிகாட்டும் கட்டுரை இது )  

கிறிஸ்தவத்தைப்பற்றி கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோருக்கும்,  கிறிஸ்துவை அறியாத மக்களுக்கும்  சரியான முறையில் எடுத்துச் சொல்ல இன்று ஆட்கள் மிக மிகக் குறைவு.  "அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்" (மத்தேயு - 9:37)    என இயேசு கிறிஸ்து கூறியது இன்றும் மிகச் சரியாக இருக்கிறது. 

வெளிப் பார்வைக்கு இன்று கிறிஸ்தவ ஊழியர்களும் ஊழியங்களும்  சபைகளும் பெருகியது போலத் தெரிந்தாலும் உண்மை அதுவல்ல. பெரும்பாலான இன்றைய கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் போதனையைப்  பின்பற்றவில்லை, ஊழியர்களும் போதகர்களும் கிறிஸ்துவின் போதனையைப் போதிக்கவில்லை. கிறிஸ்தவ ஆன்மிகம் என்றால் என்ன  என்பது பெரும்பாலான ஊழியர்களுக்கும்  கிறிஸ்தவர்கள் எனத் தங்களைக்  கூறிக் கொள்ளும்  மக்களுக்கும் தெரியவில்லை. தங்களது கையில் சுமந்து செல்லும் வேதம் கூறும் உண்மை கிறிஸ்தவர்களுக்குத் தெரியவில்லை. அப்படி தெரிந்திருக்குமேயானால் இன்று தமிழகத்தில் பிரபலமாக விளங்கும் பல ஊழியர்களும் காணாமல் போயிருப்பார்கள். சமுதாயத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருப்பார்கள். ஆம், நாங்கள் பரம்பரைக் கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் பலரும் கூட ஊழியர் கூறுவதை நம்பும் அளவுக்கு வேதம் கூறுவதை நம்பாததே இந்த இழி நிலைமைக்குக் காரணம்.

அன்பானவர்களே, கிறிஸ்துவை அறியாத ஊழியர்கள் கிறிஸ்துவை அறிவிக்கத் துவங்கியதே கிறிஸ்தவத்தின் மிகப் பெரிய சாபக் கேடாக இருக்கிறது. வெறும் பண ஆசையையே நோக்கமாகக் கொண்டு ஊழியம் செய்பவர்களும் வேறு வேலை கிடைக்காததால் ஊழியம் செய்ய வந்தவர்களும், உலக வேலையில் இருந்து சம்பாதித்துவிட்டு ரிட்டயர்டு ஆனபின் பொழுது போக்க ஊழியத்துக்கு வந்தவர்களும்,  பெருமைக்காக ஊழியம் செய்ய வந்தவர்களும் தான் பெரும்பாலான கிறிஸ்தவ  ஊழியர்கள்.  கிறிஸ்துவால் குறிப்பிட்டு ஊழியத்துக்கு அழைக்கப்பட்டு ஊழியம் செய்வோர்  வெகு சிலரே.  அப்படி கிறிஸ்துவால் ஊழியத்துக்கு அழைக்கப்பட்டு ஊழியத்துக்கு வந்தவர்களும் கிறிஸ்துவின்மேல் உள்ள பார்வையைத் திருப்பி ஏற்கெனவே உலகப்பிரகாரமாக ஊழியம் செய்து பிரபலமாக விளங்கும் ஊழியர்களைப் பார்த்து அதுபோன்று மாய்மால ஊழியம் செய்யத் துவங்கிவிடுகின்றனர். ஆம் அவர்களது ஆரம்பம் சரியாக இருந்தாலும் கிறிஸ்துவை விட்டுத் தங்களது பார்வையைத் திரும்பியதால் தவறான வழிக்குச் சென்றுவிடுவதுடன் பல ஆயிரக்கணக்கான மக்களையும் தவறான வழிக்கு நடத்துகின்றனர். இத்தகைய பின்மாற்ற    ஊழியர்களை  இன்றயக் கிறிஸ்தவத் தலைவர்களும் தங்களுக்கு மீட்பின் அனுபவம் இல்லாத காரணத்தால் கண்டுபிடிக்க முடியாமல் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர்.

ஒருவன் போதிப்பதைக் கேட்க அதிகம் கூட்டம் சேர்வதால் அவன் கூறுவது அனைத்தும் சரி என்று ஆகிவிடாது, மாறாக, அவன் பெரும்பாலான மக்களுக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதனை போதிக்கிறான் என்பதே உண்மை.  எனவே அது மக்களைத் திருப்பதிப்படுத்தும் போதனையே தவிர தேவனைத் திருப்பதி படுத்தும் போதனையாக இருக்க முடியாது.

இன்றய பிரபல போதகர்களது போதனைகளைக் கவனித்துப் பாருங்கள். அவை பெரும்பாலும் ஆசீர்வாதத்தைப் பிரசித்திப்படுத்தும் போதனைகளாகவே இருக்கும். "அதிசயம், அற்புதம், வல்லமை" இவையே இந்தப் போதகர்களது போதனையின் கருப்பொருள். இவைகளை ஒருவன் பெறவேண்டுமானால் அந்த ஊழியரது திட்டங்களுக்குப் பொருள் உதவி செய்யவேண்டும். இந்த ஊழியர்களது கூட்டங்களுக்குச் செல்லும் மக்களும் என்ன வேண்டுகிறார்கள்? தங்களது நோய்  நீங்க வேண்டும், பேய் நீங்கவேண்டும், கடன் தொல்லை நீங்கவேண்டும், தங்களது மக்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும், நல்ல வேலை கிடைக்கவேண்டும், தங்கள் செய்யும் தொழில் செழிக்கவேண்டும்.....இப்படியே தான் இந்தப் பட்டியல் தொடரும்.  அதாவது துன்பமில்லாத ஒரு நல்ல செழிப்பான வாழ்க்கை வேண்டும் என்பதே மக்களது வேண்டுதல்; உலகத்தில் ஒரு மேலான வாழ்க்கை வாழ்ந்து முடிக்கவேண்டும் என்பதே மக்களது வேண்டுதல். மேற்படி விசயங்களில் ஆன்மிகம் எங்கே இருக்கிறது என்று யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை.

மக்களது இந்த ஆசையைத்தான் இன்றய ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஜெபம், உபவாசம், காணிக்கை, ஆராதனை என அனைத்திலும் மக்களது இந்த உலக ஆசையைப் புகுத்தி இணைத்து மனக்   குருடர்களாக மக்களை இருளிலேயே வைத்துள்ளனர். காரணம் இந்த ஊழியர்களும் இப்படி மனக் குருடர்களாகவும் இருளின் பிடியில் இருப்பவர்களாகவும் இருபதே.  ஜெபம், உபவாசம், காணிக்கை, ஆராதனை இவை முக்கியமே எனினும் அவை வெறும் உலக ஆசீர்வாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது.  " உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று அறியீர்களா?" (யாக்கோபு - 4:4) மேலும் ஒருவன் ஜெபம் செய்து தேவனிடம் ஒன்றை வேண்டும் முன் அவன் கிறிஸ்துவின் இரத்தத்தால்  கழுவப்பட்ட அனுபவத்தைப் பெற்றவனாக இருக்க வேண்டியது அவசியமாகும். 

தேவச்  சாயலாகப் படைக்கப்பட்ட நாம் தேவனோடு இணையவேண்டும். இதுவே தேவனுடைய திட்டம். பரிசுத்த தேவனோடு இணையவேண்டுமானால் நாமும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். அது மனித முயற்சியால் ஆகாது. நாம்  கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாக்கப்பட்ட  இரட்சிப்பினைப் பெற்று தேவனுடைய பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படும் ஒரு வாழ்க்கை அனுபவத்துக்குள் வந்தால் மட்டுமே அது முடியும்.  சுவிசேஷம் எழுதப்பட்டதன் நோக்கமே அதுதான். இதனை இயேசு கிறிஸ்துவின் அன்புச்  சீடனான யோவான், " இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினால் நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன" (யோவான் - 20;31)  எனத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

மேலும் மத்தேயு நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி கூறும்போது, "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக: ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (மத்தேயு - 1:21) என வானதூதன் இயேசுவின் உலகத்  தகப்பனாகிய யோசேப்பிடம்  கூறுவதைக் காணலாம்.

ஆனால் இன்றய ஊழியர்களும் கிறிஸ்தவத் தலைவர்களும் இவற்றைப் போதிப்பது கிடையாது. இந்த மீட்பின் அனுபவத்தைப் பெற மக்களை வழி நடத்துவதும் கிடையாது. ஆனால் இந்த ஊழியர்கள் மக்களது  தற்கால மன அமைதிக்காக மேற்பூச்சாக ஒத்தடம் கொடுத்து விடுகின்றனர். ஆம், "அவர்கள் தேவ நீதியை அறியாமல், தங்களது சுய நீதியை நிலை நிறுத்த" விரும்புகிறார்கள். (ரோமர் -  10:3)

ஆவிக்குரிய வாழ்வு என்பது ஒரு மேலான அனுபவமாகும். அது கிறிஸ்து வாழ்ந்து காட்டிய அனுபவம். அவரது சீடர்களும் பல்வேறு பரிசுத்தவான்களும் வாழ்ந்து காட்டிய அனுபவம்.  " மாம்சத்தின்படி நடக்கிறவர்கள்  மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்".  (ரோமர் -  8:5) என வேதம் கூறுகிறது.  கிறிஸ்துவுக்குரிய ஆவிக்குரிய வாழ்க்கை நாம் வாழும்போது நமது உலகத் தேவைகளை அவர் சாந்திப்பார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்போது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக்  கொடுக்கப்படும்"  (மத்தேயு - 6:33) இந்த விசுவாசத்தோடு கிறிஸ்துவைப் பற்றி வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்வு.

ஒருவன் கிறிஸ்தவனாகி விட்டதால் அவனது துன்பங்கள் மாறிவிடும் என்று வேதம் கூறவில்லை.  எனவே அப்படி ஒருவன் போதித்தால்  அவன் பொய்யன். "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" (யோவான் - 16:33) என இயேசு கிறிஸ்துவே கூறியுள்ளார்.   ஆனால் கிறிஸ்தவனுக்குள்ள மேன்மை அனுபவம் என்ன? அது சோதனை ஏற்படும்போது அதனைத் தாங்கும் வலிமையையும் அதிலிருந்து விடுபடும் வழியை தேவன் தருவார். அவன் நிர்கதியற்று தற்கொலை போன்ற தவறான முடிவுக்குச் செல்ல மாட்டான்.  எனவேதான்  வேதம் பின்வருமாறு கூறுகிறது, " மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறு சோதனை உங்களுக்கு நேரிடவில்லை, தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்  தக்கதாக, சோதனையோடு கூட  அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." (1 கொரிந்தியர் - 10:13) 

தேவன் எனக்கு எல்லாம் தந்துகொண்டே இருப்பதால் நான் அவரை நேசிக்கிறேன் என்பதல்ல, எந்த சூழலிலும் அவரிடம் அன்புடையவராக இருப்பதையே தேவன் விரும்புகிறார். யோபு கூறியதைப்போல, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் " (யோபு - 13:15) என்பதே தேவ அன்பு. இதனை யோபு தன்  அனுபவத்தால் உணர்ந்து கூறினார். தேவன் அவரை அதிகமாக ஆசீர்வதித்திருந்தார். ஆனால் அதே ஆசீர்வாதம் தன்னைவிட்டு எடுபட்ட போதும் யோபு தனது தேவ அன்பில் மாறவில்லை. இது யோபு தேவன்மேல் கொண்டிருந்த அன்பை  விசுவாசத்தையும் காட்டுகிறது. தனக்குத் துன்பம் ஏற்பட்டபோது யோபு கூறிய விசுவாச வார்த்தைகளைப்  பாருங்கள்:- " தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ ?" (யோபு - 2:10)

அப்போஸ்தலரான பவுல் அடிகள் இந்த அனுபவத்தில் இருந்ததால்தான், " கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ,  துன்பமோ , பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டையமோ இவையெல்லாவற்றிலேயும்  நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே.  மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமை களானாலும்,  நிகழ்காரியங் களானாலும் வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும் வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து   இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நாம்மைப்  பிரிக்க மாட்டாதென்று    நிச்சயத்திருக்கின்றேன்." (ரோமர் - 8:36-39) என்று கூறுகின்றார்.

ஆனால் இன்றய ஊழியர்கள் இதற்கு மாறாக மக்களை வழிநடத்துகின்றனர். தவறான முன் உதாரணங்களையும் தவறான நம்பிக்கையையும் மக்களிடம் புகுத்துகின்றனர். இதுவே இன்றய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது. உதாரணமாக ஊழிக்காரன்  ஜெபித்தால் மாணவனுக்கு முதல் மதிப்பெண் கிடைக்கும் என்றும் தோல்வியே ஏற்படாது என்றும் ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால் கிறிஸ்தவ மாணவர்களைவிட மற்ற மத மாணவர்களே பல்வேறு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறுகின்றனர்.  முதல் மதிப்பெண் பெறுவது மட்டுமே வாழ்வின்  வெற்றி அல்ல என்பதை உளவியல் ஆற்றுப்படுத்துனர்கள் தெரிந்துள்ள அளவுக்கு கிறிஸ்தவ ஊழியர்கள் தெரிந்துகொள்ளாதது இன்றய கிறிஸ்தவத்தின் சாபக்கேடாக உள்ளது.  அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கக்கூடியவர்களாய்  இருப்போம்"  (1 கொரிந்தியர் - 15:19) என்று எழுதுகின்றார்.


அன்பானவர்களே ! பின்மாற்ற ஊழியர்களை நம்பி ஏமாற வேண்டாம். முதலில் நீங்களே வேதாகமத்தை பரிசுத்த ஆவியின் துணையுடன் நன்கு வாசியுங்கள். உண்மையை அறியும் ஆர்வத்துடன் நீங்கள் வேதத்தை வாசிப்பீர்கள் என்றால் தேவன் உங்களை சாத்திய வெளிச்சத்துக்குள்  வழி நடத்துவார்.  ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாய் வாழ உறுதி  கொள்ளுங்கள். அதற்குத் தடையாக உள்ள பொருளாசைக்கு  நேராக வழிநடத்தும்  ஊழியர்களையும் , ஊழியர்களது பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளையும்  புறக்கணியுங்கள். கர்த்தர்தாமே உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார்.

"ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து  மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை" (ரோமர் - 8:1)

Friday, February 23, 2018

40 நாட்கள் மட்டுமா......?

40 நாட்கள் மட்டுமா......?

- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

சத்தியத்தைவிட  மக்கள் சம்பிரதாயத்தையே அதிகம் பார்க்கிறார்கள்.  தேவன் கூறுவதைவிட பெரும்பாலான மக்கள் கூறுவதையே அனைவரும் நம்புகின்றனர்.   இன்று நோன்பு காலம் அல்லது லெந்து காலம் என கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பதும் அப்படியே. 

வேதத்தில் இல்லாத ஒன்றுக்கு   அல்லது வேதபூர்வமற்ற ஒன்றுக்கு  கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும் இன்று முக்கியத்துவம் கொடுத்து 40 நாட்கள் ஒரு நாடகமாக நடித்துவிட்டால் கிறிஸ்தவ கடமையை நிறைவேற்றி தேவனது பார்வையில் நல்லவன் எனப் பெயர் வாங்கிவிடலாம் என எண்ணுகின்றனர். 

முதலில் நோன்பு காலம் அல்லது லெந்து காலம் என்பது தேவையா எனப் பாப்போம். இதனை ஒரு சிறு உதாரணம் மூலம் தெளிவு படுத்தலாம் என எண்ணுகிறேன். ஒரு சிறுவன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகின்றான்  என வைத்துக்கொள்வோம்.  அந்தச் சிறுவனின் தந்தை வெளி நாட்டில் இருப்பதால் அவர் வரும்வரை அவனது உடலைப்  பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் மூன்று நாட்கள் கழித்து அவனது தந்தை வந்தபோது அந்த மகன் உயிர் பெற்று எழுந்து விடுகின்றான். அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். 

இப்போது நான் கேட்பது அந்த மகன்தான் உயிரோடு எழுந்துவிட்டானே பின் ஒவ்வொரு ஆண்டும் அவன் இறந்த  நாளில் அவனது பெற்றோரும் உறவினர்களும்  அழுது புலம்புவார்களா?  இல்லை. காரணம் அந்த மகன் உயிரோடு வாழ்கின்றான். 

இயேசு கிறிஸ்துவும் இதுபோலத்தான். அவர் மரித்தது   உண்மைதான். ஆனால் அவர் மரித்தே போய்விடவில்லை.  உயிருடன் எழுந்து ஜெய கிறிஸ்துவாக ஜீவித்துக்கொண்டிருக்கிறார்.  இதுதான் கிறிஸ்தவத்தின் அடிப்படை.    அவர் செத்தவராக இருந்தால் நாம் அவரை விசுவாசிக்கவேண்டிய அவசியமே இல்லை.

"கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் எங்கள் பிரசாங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா" (1 கொரிந்தியர் - 15:14)

"கிறிஸ்து எழுந்திராவிட்டால் உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும், நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள் " (1 கொரிந்தியர் - 15:17)

கிறிஸ்து பாடுபட்டு மரித்து தனது இரத்தத்தினால் மீட்பை உண்டுபண்ணினார் என்பதுதான் நமது நம்பிக்கை. இதனை விட்டு அவர் செத்து விட்டார் என அழுது கூப்பாடு போடுவது  வேதத்துக்கு முரணானது.

" மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் " (வெளிப்படுத்தின விசேஷம் - 1;18)

மேலும் கிறிஸ்து சிலுவையைச் சுமந்து கொண்டு செல்லும்போது  அவரைப் பார்த்துப் பல பெண்கள் அழுது புலம்பினார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து அதனை விரும்பவில்லை.  அழுத  அந்தப் பெண்களைப் பார்த்து இயேசு கிறிஸ்துக் கூறினார், " எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" (லூக்கா - 23:28)   

மேலும் வேதம் ஆண்டுக்கு நாற்பது நாட்கள் மட்டும் வித்தியாசமான  வாழ்க்கை வாழ வேண்டுமென்று கூறவில்லை.  இவைகள் பிற மதத்தவரைப்  பார்த்து உருவாக்கிக்கொண்ட கோட்பாடு. இயேசு கிறிஸ்து எப்போதுமே நாம் ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டுமென்றுதான் கூறுகிறார். அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்வதுதான் அவரை அன்பு செய்வதே தவிர அழுது கூப்பாடு போடுவதும் சாப்பிடாமல் நோன்பிருப்பதுமல்ல.

" என் கற்பனைகளைப்  பெற்றுக்கொண்டு  அவற்றைக் கைக்கொள்பவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என்  பிதாவுக்கு அன்பாயிருப்பான் "  (யோவான் -14:21)


மேலும்  வேதத்தில் இப்படி குறிப்பிட்டக்  காலம் என்று ஒரு காலமோ அல்லது அப்படி குறிப்பிட்ட காலத்தில் மட்டும் சில செயல்களை செய்வது நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஏற்றது என்றோ கூறப்படவில்லை. கிறிஸ்து நம்மை ஒரு சீடத்துவ வாழ்க்கை வாழவே அழைத்துள்ளார்"நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருப்பதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். என்கிற புதிதானாக்  கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருந்தால் அதனால் நீங்கள் என்னுடையச் சீடர்களென்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்."  (யோவான் - 13:34)

கிறிஸ்து கூறிய சீடத்துவ வழக்கை பற்றி பலரும் நினைப்பதில்லை . ஆனால் இன்று உலகதோடு ஒத்து வாழ்ந்துகொண்டு உலக மக்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் செய்துகொண்டு தபசு காலத்தில் மட்டும் சில பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு தங்களைத் தாங்களே உத்தம வாழ்க்கை வாழ்பவர்களாக எண்ணி பல கிறிஸ்தவர்கள் நிறைவடைத்து கொள்கின்றனர்

குறிப்பிட்ட இந்த நாட்களில் மட்டும் சில உணவுக் கட்டுப்பாடுகளை சிலர் கைக்கொண்டு தாங்கள் தேவனுக்கு ஏற்புடையவர்களாக மாறிவிடத்  துடிக்கின்றனர். இதுவும் பிற மத சகோதர்களை பார்த்து வந்தப்பழக்கம்தான். உண்ணும் உணவு ஒருவரைத் தீட்டுப் படுத்தாது. அசைவ உணவு உண்பதோ காய்கறி உணவுகளை உண்பதோ முக்கியமல்ல. நமது உள்ளமும் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் தூய்மையானவையாக, பிறரைக் காய படுத்தாதனவாக இருக்க வேண்டியதே முக்கியம். எனவே தான் இயேசு கிறிஸ்துக்கு கூறினார்"வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப் படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப் படுத்தும்" (மத்தேயு - 15:11)

மேலும் இயேசு கிறிஸ்து கூறினார், "வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும். அவைகளே மனுஷனைத் தீட்டுப் படுத்தும். எப்படியெனில் இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும்பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப் படுத்தும் ...." (மத்தேயு - 15: 18-20)

அப்போஸ்தலரான பவுல் அடிகள் இதனைத் தெளிவாக   இப்படிக்  கூறுகிறார்" போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்க மாட்டாது. புசிப்பதனால் நமக்கு ஒரு மேன்மையுமல்ல, புசியாதிருப்பதனால் நமக்கு ஒரு குறையுமல்ல" 1கொரி - 8:8)

 ஆம், பவுல் அடிகள் கூறுவதுபோல, "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் வரும் சந்தோஷமுமாயிருக்கிறது" (ரோமர் - 14:17)

மேலும் சுற்றுலா  போல கோவில்களை சந்திப்பது பலரது வாடிக்கையாக இருக்கிறது.  சந்திக்கும் கோவில்களை பொறுத்து தேவ பெலன் ஒருவருக்கு அதிகம் வந்துவிடுவதில்லை. சுற்றிச் சுற்றி கோவில்களுக்கு அலைவதைவிட ஒரு இடத்திலிருந்து தேவனை வழிபட முடியாதா? பிதாவை எங்கும் தொழுது கொள்ளலாம் என்று இயேசு கிறிஸ்துவே கூறுகின்றார். "நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளும் காலம் வருகிறது" (யோவான்  4:21) 

தேவனை உண்மையான ஆத்துமாவோடு அன்போடு தொழுதுகொள்ளவேண்டுமே தவிர அலைந்து திரிந்து தொழுதுகொள்ள வேண்டாம். "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும்" (யோவான்  4:24) 

மேலும் நமது உடலே தேவன் வாழும் ஆலயமாயிருக்கிறது. நமது உடலை பாவக கறைகள் இல்லாமல் பரிசுத்தமாக வைத்துக் கொள்வதே மெய்யான ஆராதனை

"நீங்கள் உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்கவேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்கிறேன். இதுவே நீங்கள் செய்யத் தக்க புத்தியுள்ள ஆராதனை"  (ரோமர் - 12:1) 

"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியுமிருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும் நீங்கள் உங்களுடையவர்களல்ல என்றும் அறியீர்களா?" (1 கொரி  - 6:19) 

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மரணம் இவற்றைக் குறித்து நமக்கு ஒரு தெளிவு வேண்டும்.  கிறிஸ்து நமக்காக ஏற்படுத்தின மீட்புக்கான வழிதான் அவரது மரணம். அது நமக்குத் புதிய நம்பிக்கையையும் பிதாவிடம் சேரும் வாய்ப்பையும் அளித்துள்ளது.

இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் முக்கியமான பகுதி அவரது பாடுகளுடன் ஆரம்பிக்கின்றது. இதுவே அறிவிக்கப்படவேண்டிய நற்செய்தி. அப்போஸ்தலரான பவுல் அடிகள் இதனைத் தான் பிரதான அறிவிப்பாக அறிவித்துவந்தார்

ஆதியில் ஏதேனில் தேவன் அளித்த வாக்குறுதி இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நிறைவேறியது

"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்  பகை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையை நசுக்கும். நீ அதன் குதிகாலை காயப்படுத்துவாய்" (ஆதியாகமம் - 3:15) என தேவன் பாம்பிற்கு (சாத்தானுக்குஇட்ட சாபம் பெண்ணின் வித்தாகிய கிறிஸ்துவால்  நிறைவேறியது. தனது சிலுவை மரணத்தின் மூலம் சாத்தானின் தலையை நசுக்கினார்எனவேதான் இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தானுக்கு தன்மீது அதிகாரமில்லை என இயேசு கிறிஸ்து கூறினார். (யோவான் - 14:30)

மேலும் இயேசு கிறிஸ்துவின் மரணம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கான வாயிலைத் திறந்துவிட்டது. பழைய ஏற்பாட்டுக்கால முறைமைகள் மாற்றப்பட்டு கிருபையினால் தேவனைச்  சேரும் மிகப் பெரிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க இயேசு கிறிஸ்துவின் மரணம் வழிவகுத்தது. காரணம், "இயேசு கிறிஸ்துவின் சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதனாலே அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்" (எபிரேயர்  - 10:10)

ஆனால் மிருகங்களின் இரத்தம் பூரண சுத்திகரிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பலி செலுத்திய மனிதன் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று பூரணம் அடையாததால் இரட்சிப்பின் சந்தோஷத்தை அனுபவிக்காததால் மீண்டும் மீண்டும் இரத்த பலி செலுத்தவேண்டியிருந்தது.  (எபிரேயர்  - 10:1-4)

இது இயேசு கிறிஸ்துவின் மரணத்தால் நிவிர்த்தி செய்யப்பட்டது"இயேசு கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு தமக்காக காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரெண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்"   (எபிரேயர்  - 9:28) 

பழைய ஏற்பாட்டின் காலத்தில் பாவ நிவாரணத்திற்காக மிருகங்கள் பலியிடப்பட்டன. காரணம், பாவத்தினால் மரணமடைந்த ஆத்துமாவை மீட்க  இரத்தம் சிந்தப்பட்ட வேண்டியிருந்தது.  ஏனெனில் இரத்தமே உயிர். "மாம்சத்தின்  உயிர் இரத்ததில் இருக்கிறது"  (லேவியராகமம்  - 17:11) மேலும், " சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது, இரத்தம் ஜீவனுக்கு சமானம்" (லேவியராகமம்  - 17:14) என்று வேதம் கூறுகிறது. எனவேதான் "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது"   (எபிரேயர்  - 9:22) என்கிறது வேதம்

ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழையுமுன் ஆசாரியன் இரத்ததால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டியிருந்தது. இயேசு கிறிஸ்து  தனது சொந்த இரத்தத்தால்  சுத்திகரிப்பை உண்டுபண்ணி பிரதான ஆசாரியனாக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்தது மட்டுமல்ல அவர் மூலம் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட  அனைவரும் அதில் நுழையும் வாய்ப்பையும் ஏற்படுத்திவிட்டார்.

" மாம்சத்தில் பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு தம்முடைய குமாரனை பாவ  மாம்சத்தின் சாயலாகவும் பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்" (ரோமர் - 8:3)

" ஆகையால் சகோதரரே நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமான திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால் அந்த மார்க்கத்தின் வழியாக பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தால் நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும் .."  (எபிரேயர்  - 10:19,20) என்கிறது வேதம்.

இன்று இயேசு கிறிஸ்துவை மெய்யான தேவனாக ஏற்றுக்கொண்டு அவர் நமது பாவங்களுக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டால் நாம் இரட்சிக்கப்படுவோம். ஏனெனில் வேதம் கூறுகிறது, " கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு  தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (ரோமர் - 10:9)

அன்பானவர்களே! கடமைக்காக மட்டுமல்ல, 40 நாட்கள் மட்டுமல்ல கிறிஸ்துவிடம் அன்புகூர்ந்து நமது வாழ்க்கையை அவரிடம் ஒப்படைக்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது. நமது வாழ்நாள் முழுவதுக்கும் போதுமானவையாக அவர் இருக்கிறார். உலக ஆசை இச்சைகளுக்காக இயேசுவைத் தேடுவதைவிட்டு  நித்திய ஜீவனுக்காக தேடுவோம். உலக ஆசைகளை நிறைவேற்றிட தேவனைத் தேடுபவன் ஆண்டுக்கு நாற்பது நாட்கள் மட்டுமே தேடுவான். 

"இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் எல்லா  மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்க்களாயிருப்போம்" (1 கொரிந்தியர்  - 15:19)  


Saturday, February 17, 2018

Who is the God spoke to people in the Old Testament ?

God who spoke to people in the Old Testament is Jesus Christ 



- By Erik Jones


Many consider the God they read about in the Old Testament to be harsh and vindictive.

This view may be based on simply reading some of the well-known stories of the Old Testament. God expelled Adam and Eve from the Garden of Eden and destroyed the earth with a flood. He sent plagues on ancient Egypt and directed Israel to conquer Canaan through war. And He punished Israel and Judah through captivity by foreign nations. Many interpret these as the actions of a stern God of retribution and justice.

On the other hand, many see the New Testament as quite different. It tells about Jesus Christ, the Son of God, who taught love toward others, showed mercy, healed multitudes of people, held children in His arms and gave His life as a sacrifice without resistance.

Comparing these examples, many have concluded that the Father was the God of the Old Testament—the God of justice and punishment. Jesus, the Son, was the God revealed in the New Testament—the God of love and mercy. Some even believe Jesus came to stand in the gap between us and the Father—essentially delivering us from His Father’s restrictive law!

But the truth of the Bible is much different.

It couldn’t have been the Father!

John revealed a surprising truth in John 1:18: “No one has seen God at any time. The only begotten Son, who is in the bosom of the Father, He has declared Him” (emphasis added throughout). Jesus also said, “And the Father Himself, who sent Me, has testified of Me. You have neither heard His voice at any time, nor seen His form” (John 5:37).

These two scriptures teach us an important fact: The Father has not directly spoken to or been seen by any human being at any time.

But if we look through the Old Testament, we see many occasions when God worked directly with human beings. (Consider, for example, Genesis 2:16-17; 6:13-14; 12:1; 17:1; Exodus 3:4-6; 33:11, 22-23; Numbers 12:6-8; Deuteronomy 4:33; Jeremiah 1:4-10).

We see that a divine being in the Old Testament dealt directly with people; but according to Jesus, this divine being could not have been God the Father.

Jesus said that He came to “reveal” the Father (Matthew 11:27). By claiming to be the Son of God (John 10:36), Jesus contradicted one of the Jew’s most treasured doctrines—that God is composed of strictly one divine being. They did not understand that God is actually a family—composed of the Father and the Son (John 1:18; Romans 1:4; Philippians 2:6-11).
If the One who revealed Himself to the patriarchs and Israel in the Old Testament was not the Father—then who was He?

Jesus Christ’s preexistence

A careful study of the Bible shows clearly that the God who interacted with humans in the Old Testament was the One who became Jesus Christ.

The Bible reveals that before Jesus was born to Mary, He was the One John called “the Word” (John 1:1, 14). This title perfectly describes His function before being born as a human being. “Word” in John 1:1 is a translation of the Greek word Logos, meaning “a word” or “something said” (Strong’s Greek Dictionary). The definition includes both the thought and the spoken word.

The use of Logos to describe Jesus before His human birth gives us insight into His Old Testament identity. The Word was, essentially, the being in the God family who served as the spokesman. He has always been responsible for communicating the will of the Father to human beings—during Old Testament and New Testament times. When God’s voice or revelation was given, it was through the Word—who became Jesus Christ—or an angel. The Father has never spoken directly with human beings.

Jesus Christ made His identity very clear—sometimes even to His physical detriment! In John 8 Jesus said He knew Abraham (verse 56). Since Abraham had lived and died nearly 2,000 years before, this statement offended the Jews Jesus was talking to. They considered it blasphemy that a mere man (as they viewed Him) “not yet fifty years old” had the audacity to claim He had known their patriarch Abraham (verse 57).

But Jesus’ response was even more shocking to them: “Most assuredly, I say to you, before Abraham was, I AM” (verse 58).

Yes, Jesus Christ claimed that He predated Abraham. But, in saying this, Jesus also gave a not-so-subtle clue about His identity that wasn’t lost on the angry Jews who surrounded Him. He referred to Himself as “I AM.” This was actually a divine title of God! When God had appeared to Moses from the burning bush, God had identified Himself as “I AM WHO I AM” and “I AM” (Exodus 3:14).

By identifying Himself as “I AM,” Jesus claimed that He had eternally existed. Christ identified Himself as the God of Abraham and Moses, and the One who led Israel out of Egypt (which is also affirmed by the apostle Paul in 1 Corinthians 10:1-4).

Christ was Creator
Before His birth, Jesus Christ was the God who created all things. The apostle Paul made this fact very clear in his writings.
We read that “God [the Father] … created all things through Jesus Christ” (Ephesians 3:9). Jesus Christ, the Word, created “all things”—the angelic realm, the physical universe and all physical life—for the Father and under His direction.
Colossians 1:16-18 reveals more functions of the Word. He not only created “all things … in heaven and that are on earth,” but He also rules over all authorities and powers that exist under the Father. This means that Christ has authority over the entire angelic and human dominions. He existed “before all things” (He is eternal) and “in Him all things consist” (verse 17).The truth of Jesus being the Creator of all things is also reinforced in 1 Corinthians 8:6 and Hebrews 1:2.

The implications

We have just skimmed the surface of this incredibly important topic. There is much more to understand about the identity of God the Father and Jesus Christ. But the key truth to understand is that God the Father and Jesus Christ the Son exist in total harmony (John 10:30). They share the same perfect character of love, truth, mercy and grace.
Though the Father did not speak directly to people, He is mentioned throughout the Old Testament (for example, both Father and Son are evident in verses like Genesis 1:26; 11:7; and Psalm 110:1). The Father has chosen to accomplish His plan for mankind through Jesus, from beginning to end.
Not only is the character of God (both Father and Son) consistent at all times, God’s expectations for human beings also remain the same. It is vital for us to study and understand both the Old and New Testaments (1 Corinthians 10:11; 2 Timothy 3:16). God’s spiritual law—summarized for us in the 10 Commandments—has remained consistent and binding.
God the Father and Jesus Christ are truly “the same yesterday, today, and forever” (Hebrews 13:8; Malachi 3:6)!

Wednesday, November 29, 2017

சாகப் பிறந்தவர்

கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை 

சாகப் பிறந்தவர் 

- சகோ. எம்.ஜியோ பிரகாஷ்  

ந்த உலகத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுமே  வாழ்வதற்காகவே பிறக்கின்றன. அதாவது அந்தக் குழந்தை வளர்ந்து அதற்காகக் குறிக்கப்பட்டப் பணியைச் செய்து முடிக்கவே பிறக்கின்றன. இந்த உலகத்தில் சாதித்து சிறப்பாக வாழ்பவர்களை உலகமானது பொதுவாக , "அவன் வாழப் பிறந்தவண்டா.. " எனப் பெருமையாகக் கூறுவதுண்டு. ஒவொருவருக்கும் வாழ்வில் ஒரு நோக்கம் உண்டு. மருத்துவராகவேண்டும், பொறியியல் வல்லுநராகவேண்டும், பெரியத் தொழிலதிபராகவேண்டும் ...இப்படிப்  பல நோக்கங்கள்..   ஆனால் சாவதற்காகவே பிறந்த ஒரு குழந்தை உண்டு. அதன் நோக்கமே சாவுதான்.

ஆம் கிறிஸ்து இயேசு உலகினில் வந்த நோக்கமே சாவதற்குத்தான். ஆனால் இன்று  இந்தச் சத்தியம் பெரும்பாலும் மறக்கடிக்கப்பட்டுள்ளது.  பிரபல ஊழியர்கள் இன்று "இயேசு கிறிஸ்து அதிசயம் அற்புதம் செய்ய" வந்ததாக பொய்த் தோற்றத்தை மக்களிடம் பரப்பி வருகின்றனர். பல வருடங்கள் இறையியல் கல்லூரியில் படித்து குருக்களாகவும் ஆயர்களாகவும் இருக்கும் மேதைகளுக்குக்  கூட இந்தச் சத்தியத்தை மக்களுக்கு அறிவிக்கவேண்டுமென்ற ஆர்வம் இல்லை இந்தச் சத்தியம் தெரியவும் இல்லை. "எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியனின் மடியினிலே புதல்வனாயினார்" என வேத அடிப்படையற்ற ஒரு பாடலைக் கூட இவர்களால் தவறு எங்க கண்டுபிடித்து புறந்தள்ள முடியவில்லை !

அதிசயம் அற்புதம் செய்து மக்களை மயக்க மந்திரவாதி போதும் மேஜிக் நிபுணர் போதும். கிறிஸ்து உலகில் வரவேண்டிய அவசியமில்லை.

இயேசு கிறிஸ்து உலகினில் வாழ்ந்தபோதே தான் வந்த நோக்கத்தைத்  தெளிவாகக்   குறிப்பிட்டார்:- "அப்படியே மனுஷ குமாரனும் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும் அநேகரை மீட்கும்படியாக தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்" (மத்தேயு - 20:28). 

தேவ ஆட்டுக்குட்டி என்றே இயேசு குறிப்பிடப்படுகிறார். அதாவது தேவனுக்குப் பலியிடப்படவேண்டிய ஆடு அவர். அவரது இரத்தம் சிந்தப்படவேண்டும். அந்த இரத்தத்தால்   மனு குலத்துக்கு இரட்சிப்பு கிடைக்கவேண்டுமென்பதே தேவ திட்டம்.  கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் எழுநூற்று ஐம்பது வருடங்களுக்குமுன் ஏசாயா தீர்க்கதரிசி இதனைப் பின்வருமாறு தீர்க்கதரிசனமாக குறிப்பிடுகிறார் :-

"மெய்யாகவே அவர் நமது பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களை சுமந்தார், நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு,  நம்முடைய  அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழி தப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய  அக்கிரமத்தையும் அவர்மேல் விழப் பண்ணினார்." (ஏசாயா - 53:4-6)     

இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தபோது பல வேளைகளில் இதனைத் தனது  சீடர்களுக்கு விலக்கிக் கூறினார். "அதுமுதல் இயேசு தான் எருசலேமுக்குப் போய் மூப்பராலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபாரகர்களாலும் பல பாடுகள் பட்டு கொலையுண்டு மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்  தொடங்கினார்" (மத்தேயு - 16:21)

" நான் என்  ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியால் பிதா என்னில்  அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன். அதைக்  கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு" (யோவான் - 10:17,18)

தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே தொடர்பு இல்லாமல் போகக் காரணம் மனிதனது பாவமே.  இந்தப் பாவங்கள் கழுவப்பட்டு தேவனோடு ஒப்புரவாகவேண்டும். அப்போதுதான் தடை நீங்கி தேவத்  தொடர்பு ஏற்படும். பாவங்கள் இரத்தத்தினால் மட்டுமே சுத்திகரிக்கப் பட முடியும். காரணம் " இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது" (எபிரேயர் - 9:22)  ஏனெனில் மனிதனது உயிர் இரத்தத்தில் இருக்கிறது என வேதம் தெளிவாகக்  கூறுகின்றது.

"மாம்சத்தின்  உயிர் இரத்தத்தில் இருக்கிறது." (லேவியராகமம் -17:11)

"சகல மாம்சத்திற்கும் இரத்தம் உயிராயிருக்கிறது. இரத்தம் ஜீவனுக்குச் சமானம். ஆகையால் எந்த   மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதன் இரத்தமே"  (லேவியராகமம் -17:14)

மனிதன் பாவம் செய்யும்போது ஆத்தும மரணம் ஏற்படுகின்றது. எனவேதான் வேதம், " பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் - 6:23) எனக் கூறுகிறது. மனிதனது உயிர் இரத்தத்தில் இருப்பதால் பாவத்தால் மரணமடைந்த ஆத்துமாவை மீட்க இரத்தம் கொடுக்கப்படவேண்டும். இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை.  

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவ நிவாரணத்துக்காக மனிதர்கள் ஆடு; மாடு; காளை இவற்றைப் பலியிட்டு வந்தனர். லேவியராகமத்தில் இதுகுறித்த தெளிவான விளக்கத்தை நாம் காணலாம். ஆனால் மிருகங்களின் இரத்தம் மனிதனை முற்றும் முழுவதுமாக பாவத்திலிருந்து விடுவிக்கவில்லை. எனவே ஒருதரம் பலியிட்ட மனிதன் தன்னில் பாவம் உண்டு எனும் உணர்வு தொடர்ந்து இருப்பதால் வருடம்தோறும் மீண்டும் மீண்டும் பலி செலுத்தி வந்தான். இதுகுறித்து எபிரேயர் நிருபத்தில் பின்வருமாறு வாசிக்கிறோம்;

"..........வருஷம்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. பூரணப் படுத்துமானால் ஆராதனைச் செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப் பட்டபின்பு  இன்னும் பாவங்கள் உண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி   அவர்களுக்கு இல்லாதிருப்பதினால் அந்தப் பலிகளைச் செலுத்தப்படுவது நிறுத்தப்படுமல்லவா?  அப்படி நிறுத்தப் படாதபடியால் பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவு கூருதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும் காளை வெள்ளாட்டுக் கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமாட்டாதே" (எபிரேயர் - 10:1-4)

இப்படி காளை வெள்ளாட்டுக் கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமாட்டாதே போனதால் பாவமில்லாத கிறிஸ்து தனது சொந்த இரத்தினால் பாவ நிவாரணத்தை ஏற்படுத்தினார். இதனை எபிரேயர் நிருபம், " கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படி ஒரேதரம் பலியிடப்பட்டு.." (எபிரேயர் -  9:28) எனக் கூறுகிறது

மேலும் , "இயேசு கிறிஸ்துவின் சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதனால் அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் (எபிரேயர் -  10:10)

இயேசு கிறிஸ்து உலகினில் வந்த நோக்கமே இதுதான். தனது சொந்த இரத்தத்தைச் சிந்தி  மானுக் குலத்துக்கு இரட்சிப்பை அளிக்கவே கிறிஸ்து உலகினில் வந்தார்.  அன்பானவர்களே, நமது பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட வேண்டும். அதற்கு நமது பாவங்களை அவரிடம் முழு மனதுடன் அறிக்கையிடவேண்டும்.  அப்படி அறிக்கையிடும் போது கிறிஸ்து நமக்குள் வருவதையும் நமது வாழ்வு மாறுவதையும் நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்துகொள்ள முடியும்.  இதுவே இரட்சிப்பின் அனுபவம் - மறுபடியும் பிறக்கும் அனுபவம். இந்த அனுபவத்தைப் பெறாமல் ஒருவன் தேவனுக்காக எதனையும் செய்யமுடியாது, தேவன் அதனை அங்கீகரிக்கவும் மாட்டார்.

யோவான் மூன்றாவது அதிகாரத்தில் நிக்கோதேமு எனும் யூத குருவைப் பற்றி பார்க்கிறோம். அவர் கிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்பதை அறிந்திருந்தார். அவர் இயேசுவிடம், "ரபீ , நீர்  தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கின்றோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மாட்டான் என்றான் " (யோவான் - 3:2)  அவனுக்கு இயேசு கிறிஸ்து கூறிய பதிலைப் பாருங்கள் :-

" ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் " என்றார்.  (யோவான் - 3:3) அன்பானவர்களே தேவனுடைய வேத ஆகமங்களை படித்து ,  தேவனை போதித்து வாழ்ந்த ஒரு குருவுக்கு மறுபடி பிறக்க வேண்டியது அவசியமானதாக இருக்குமேயானால், நமக்கு அது எவ்வளவு அவசியம் என்று எண்ணிப்பாருங்கள்! இயேசு தேவனுடைய குமாரன் என்று வாயினால் சொன்னால் மட்டும் போதாது, மறுபடி பிறக்கவேண்டும்.  இன்று நாமும் ஆலயங்களுக்குச் செல்லலாம், தேவனுக்கென்று அரிய பல செயல்களை செய்யலாம்,  ஆனால் மறுபடி பிறந்த அனுபவம் இல்லாவிட்டால் அனைத்துமே வீண்தான்.

கிறிஸ்து உலகினில் வந்தபோது உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை. "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர்மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை" (யோவான் - 1:10) எனக் கூறுகிறது வேதம். அன்பானவர்களே இன்றும் உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை.  அப்படி அறியாததனால்தான் இன்று அவரை அதிசயம் செய்ய வந்தார், அற்புதம் செய்ய வந்தார் என மந்திரவாதியாக அல்லது ஒரு மேஜிக் நிபுணனாக பார்க்கின்றனர். இப்படி கிறிஸ்தவ தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் , ஜெபக் கூட்டங்களிலும் கிறிஸ்துவை காண்பிப்பதால் மற்ற மக்கள் கிறிஸ்தவத்தின் உண்மைத் தன்மையை அறிய முடியவில்லை.

இந்தக் கிறிஸ்துமஸ் நாளில் நாம் செய்யவேண்டியது இதுதான் .. கிறிஸ்து நமது உள்ளத்தில் பிறக்க இடம் கொடுக்கவேண்டும் வெறும் வெளி ஆடம்பரங்களல்ல ..நமது உள்ளம் புதிதாக்கப்பட்டு நாம் புதுப் பிறப்படையவேண்டும். அதற்கு நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரது பரிசுத்த இரத்ததால் கழுவப்பட வேண்டுவோம். அப்போது அந்த மேலான அனுபவம் நமக்கு கிடைக்கும்.

கிறிஸ்து என்ற பெயருக்கு அர்த்தமே இரட்சகர் என்பதே. "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை  நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (மத்தேயு - 1:21)  

"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது ..." (1 தீமோத்தேயு - 1:15)   

" நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் " (யோவான் - 14:6) என்றார் கிறிஸ்து. ஆமென்