Wednesday, October 14, 2026

🦋 Meditation verse - செப்பனியா 3 : 15 / Zephaniah 3:15

ஆதவன் தியானம்

எண் :- 2076 - நாள் :- 15.10.2026


"கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் இராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்." ( செப்பனியா 3 : 15 )

கிறிஸ்துவுக்குத் தங்களை அர்ப்பணித்து அவருக்கேற்ற வாழ்க்கை வாழும் மக்களை அவர் என்றும் கைவிடுவதில்லை. துன்பங்கள் நம்மைத் தாக்குவதுபோலத் தெரிந்தாலும் முற்றிலும் அவை நம்மை ஆட்கொள்வதில்லை. ஆம், "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்" 1 (கொரிந்தியர் 10:13)

இன்றைய தியான வசனத்தில் நாம் தேவ பிள்ளைகளுக்குத்  தேவன் கூறும் மூன்று முக்கியமானக்  காரியங்களைப் பார்க்கின்றோம். அவை:- 

இராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்
உன் ஆக்கினைகளை அகற்றுகிறார் 
இனித்தீங்கைக் காணாதிருப்பாய்

அதாவது, நாம் அவருக்கு ஏற்ற  வாழ்க்கை வாழும்போது கர்த்தர் நம்மோடு இருக்கின்றார். இராஜாவாக அவர் நமக்குள் இருப்பதால் நாம் அதிக நம்பிக்கையுடன் உலகினில் வாழமுடியும். நமது நாட்டின் பிரதமர் அல்லது முதலமைச்சர் நம்மோடு இருக்கின்றாரென்றால் அது நமக்கு எவ்வளவு பெலன்!! அப்படியானால் இந்த உலகத்துக்கே இராஜாவானவர் நம்மோடு இருப்பது நமக்கு எத்தகைய அதிக பாக்கியமாக இருக்கும்!!!

மேலும், நமக்குள் இருக்கும் கிறிஸ்து செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றார். நமது பாவ சாப காரியங்கனை நம்மைவிட்டு அகற்றுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து நமக்குள் இருக்கும்போது நாம் பாவத்துக்கு மரித்தவர்கள் ஆகின்றோம். இதனையே அப்போஸ்தலரான பவுல், "மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 ) என்று கூறுகின்றார். 

இறுதியாக இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "இனித்தீங்கைக் காணாதிருப்பாய்." அதாவது, இத்தனைநாளும் பல்வேறு தீங்குகள் நம்மைத் தொடர்ந்திருக்கலாம் ஆனால் இனி அப்படித் தொடராது. காரணம் இராஜா நம்மோடுகூட இருக்கின்றார்.  "நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 18 : 10 ) என்று அப்போஸ்தலரான பவுலிடம் தேவன் கூறவில்லையா? நமக்கு எதிராக அல்ல, மாறாக நமக்காக ஆதரவாக பல மக்களை தேவன் உருவாக்குவார். 

அப்போஸ்தலரான பேதுருவும், "நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?" ( 1 பேதுரு 3 : 13 ) என்று கேள்வி எழுப்புகின்றார். கிறிஸ்து நம்மோடு இருக்கும்போது நாம் பாவம் செய்யமாட்டோம், துன்மார்க்கச் செயல்களில் ஈடுபடமாட்டோம், நன்மையான வழியிலேயே நடப்போம். எனவே நமக்கு யாரும் தீங்கு செய்வதில்லை என்று பேதுரு கூறுகின்றார். 

கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போது நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் இவைகள். இந்தக் கிறிஸ்துவை நமக்குள் ஏற்றுக்கொண்டு வாழ முயற்சியெடுப்போம்; தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம். 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

Number: 2076 | Date: 15.10.2026


"The Lord has taken away His judgments against you, He has cleared away your enemies. The King of Israel, the Lord, is in your midst; you will no longer fear disaster." (Zephaniah 3:15)

God never forsakes the people who dedicate themselves to Christ and live a life acceptable to Him. Even when troubles seem to attack us, they do not completely overtake us. Indeed, "No temptation has overtaken you except something common to mankind; and God is faithful, so He will not allow you to be tempted beyond what you are able, but with the temptation will provide the way of escape also, so that you will be able to endure it." (1 Corinthians 10:13)

In today's meditation verse, we see three important things that God speaks to the children of God. They are:

The King, the Lord, is in your midst
He takes away your judgments
You will no longer see disaster

That is, when we live a life acceptable to Him, the Lord is with us. Because He is within us as King, we can live in this world with great confidence. If the Prime Minister or Chief Minister of our country were with us, what a source of strength that would be! How much greater a privilege it is, then, to have the King of the entire world with us!

Furthermore, the Christ who is in us is continually at work. He removes our sinful and accursed ways from us. Yes, dear friends, when Christ is in us, we become dead to sin. The Apostle Paul expresses this very point: "If Christ is in you, though the body is dead because of sin, yet the spirit is alive because of righteousness." (Romans 8:10)

Finally, today's meditation verse says, "You will no longer see disaster." That is to say, various harms may have pursued us all these days, but they will no longer do so. The reason is that the King is with us. Did not God say to the Apostle Paul, "for I am with you, and no one will attack you to harm you, for I have many people in this city"? (Acts 18:10). God will raise up many people not against us, but to support us.

The Apostle Peter also raises the question: "Who is there to harm you if you prove zealous for what is good?" (1 Peter 3:13). When Christ is with us, we will not commit sin, we will not engage in wicked deeds, and we will walk in the way of goodness. Therefore, Peter says that no one will harm us.

These are the blessings we receive when we live in a manner acceptable to Christ. Let us make every effort to receive this Christ into our hearts and live in Him; let us receive God's blessings.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

Tuesday, October 13, 2026

From Outward Religious Practice to a Heart Filled with God's Love (Luke 11:42–46)


                      - Sr. Amutha ICM

In today's Gospel, Jesus pronounces three woes against the Pharisees and one against the scholars of the law. These are serious warnings against a religion that looks good outwardly but lacks love, justice, humility, and compassion.Are we also Pharisees in our daily Christian life? We may share their attitudes without realizing it.

First, we practice religion but neglect love and justice. We may pray faithfully yet lack patience, kindness, and understanding towards others. Second, we seek to  honour and recognition. We may serve others but feel hurt when our efforts go unnoticed or others receive appreciation. Third, we become like unseen graves when our words and attitudes secretly wound others. Our criticism, gossip, jealousy, and negativity can discourage people while we continue to appear religious. Fourth, we impose burdens on others without helping them carry those burdens. We may demand perfection, point out mistakes, and expect others to change without understanding their struggles or examining ourselves.

 A Call to Conversion

Dear friends, it is easy to recognise the faults of others but difficult to acknowledge our own. We may condemn pride while remaining proud, criticise others' lack of love while being insensitive to their struggles, and demand change without changing ourselves.

Jesus invites us to move beyond outward religious practices towards a faith that transforms our hearts and relationships.

Let us ask ourselves: Do our prayers make us more loving? Do we serve for God's glory or our own recognition? Does our presence bring life or pain to others? Do we help carry their burdens or add to them? Conversion begins when we stop concentrating on others' faults and allow God to transform us. God is not looking merely for people who appear religious, but for hearts that reflect His love through their daily lives.

Lord Jesus, help us recognise the Pharisee within ourselves. Forgive us for neglecting love, seeking recognition, hurting others, and adding to their burdens. Give us humble hearts willing to change. May our prayers lead us to love, our words bring encouragement, and our actions offer compassion. Amen.

வெளிப்புற சமயப் பழக்கங்களிலிருந்து இறையன்பு நிறைந்த இதயத்திற்கு (லூக்கா 11:42–46)

இன்றைய நற்செய்தியில், இயேசு பரிசேயர்களுக்கு மூன்று முறையும், திருச்சட்ட அறிஞர்களுக்கு ஒரு முறையும் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறார். அன்பு, நீதி, தாழ்மை, இரக்கம் இல்லாமல் வெளிப்புறத்தில் மட்டும் பக்தியைக் காட்டும் வாழ்க்கையை அவர் கண்டிக்கிறார். நம்முடைய அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கையிலும் நாம் பரிசேயர்களைப் போல இருக்கிறோமா? நம்மையும் அறியாமல் அவர்களுடைய மனநிலையை நாமும் கொண்டிருக்கலாம்.

முதலாவது, நாம் இறைவனை வழிபடுகிறோம்; ஆனால் அன்பையும் நீதியையும் மறந்துவிடுகிறோம். தவறாமல் ஜெபித்தாலும், பிறரிடம் பொறுமையும் கனிவும் புரிந்துகொள்ளும் மனமும் இல்லாமல் இருக்கலாம். இரண்டாவது, பாராட்டையும் மதிப்பையும் எதிர்பார்க்கிறோம். பிறருக்காக உழைத்தாலும், நம்முடைய முயற்சிகளை யாரும் பாராட்டவில்லை என்றால் மனம் வருத்தப்படலாம்.

மூன்றாவது, நம்முடைய வார்த்தைகளாலும் நடத்தையாலும் பிறருடைய மனதைப் புண்படுத்தலாம். குறை கூறுதல், புறம் பேசுதல், பொறாமை, எதிர்மறையான பேச்சு ஆகியவற்றால் பிறரைச் சோர்வடையச் செய்தாலும், வெளிப்புறத்தில் பக்தியுள்ளவர்களாகத் தோன்றலாம்.

நான்காவது, பிறருடைய சுமைகளைக் குறைப்பதற்குப் பதிலாக, அவர்கள்மீது மேலும் சுமைகளைச் சுமத்தலாம். அவர்களுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல், குறைகளைச் சுட்டிக்காட்டி, எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்க்கலாம்.

மனமாற்றத்திற்கு ஓர் அழைப்பு

அன்பானவர்களே, பிறருடைய குறைகளைக் கண்டுபிடிப்பது எளிது; நம்முடைய குறைகளை ஏற்றுக் கொள்வது கடினம். பெருமையைக் கண்டிக்கும்போதே நாமும் பெருமையுள்ளவர்களாக இருக்கலாம். பிறருடைய அன்பின்மையைச் சுட்டிக்காட்டும்போதே அவர்களுடைய வேதனைகளைப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். வெளிப்புற பக்தியைக் கடந்து, நம்முடைய இதயத்தையும் உறவுகளையும் மாற்றுகின்ற நம்பிக்கை வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கிறார். நம்முடைய ஜெபம் நம்மை அன்புள்ளவர்களாக மாற்றுகிறதா? இறைவனுக்காகப் பணியாற்றுகிறோமா, அல்லது பாராட்டுக்காகப் பணியாற்றுகிறோமா? நம்முடைய உடனிருப்பு பிறருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதா, வேதனையைக் கொடுக்கிறதா? அவர்களுடைய சுமைகளைச் சுமக்க உதவுகிறோமா, அல்லது மேலும் சுமைகளைச் சேர்க்கிறோமா?

பிறருடைய குறைகளைப் பார்ப்பதை நிறுத்தி, நம்மையே மாற்ற இறைவனுக்கு இடம் கொடுக்கும் போதுதான் உண்மையான மனமாற்றம் தொடங்குகிறது. வெளிப்புறத்தில் பக்தியுள்ளவர்களாகத் தோன்றுவதைவிட, நம்முடைய அன்றாட வாழ்வில் இறையன்பை வெளிப்படுத்தும் இதயத்தையே இறைவன் விரும்புகிறார்.

ஆண்டவராகிய இயேசுவே, எங்களுக்குள் இருக்கும் பரிசேய மனநிலையை உணர எங்களுக்கு உதவியருளும். அன்பை மறந்ததற்கும், பாராட்டைத் தேடியதற்கும், பிறருடைய மனதைப் புண்படுத்தியதற்கும், அவர்களுடைய சுமைகளை அதிகரித்ததற்கும் எங்களை மன்னித்தருளும். மனமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் தாழ்மையான இதயத்தை எங்களுக்குத் தாரும். எங்கள் ஜெபம் அன்பாகவும், எங்கள் வார்த்தைகள் ஆறுதலாகவும், எங்கள் செயல்கள் இரக்கத்தின் வெளிப்பாடாகவும் அமைய அருள்புரியும். ஆமென்.

Sr. அமுதா ICM

🦋 Meditation verse - സങ്കീർത്തനം 122:6, 7

 ആധവൻ ധ്യാനം

നമ്പർ: 2075 | തീയതി: 14.10.2026

"യെരൂശലേമിന്റെ സമാധാനത്തിനായി പ്രാർത്ഥിക്കുവിൻ; നിന്നെ സ്നേഹിക്കുന്നവർ സ്വസ്ഥമായിരിക്കും. നിന്റെ കോട്ടയ്ക്കുള്ളിൽ സമാധാനവും നിന്റെ അരമനകളിൽ ക്ഷേമവും ഉണ്ടാകട്ടെ." — സങ്കീർത്തനം 122:6, 7 (NIBV)

ഇന്നത്തെ ധ്യാനവാക്യം നാം ആത്മീയമായ അർത്ഥത്തോടെ കാണേണ്ട ഒന്നാണ്. ഇവിടെ യെരൂശലേം എന്ന് പറയുന്നത് ഈ ലോകത്തിലുള്ള യെരൂശലേം നഗരത്തെയല്ല, മറിച്ച് ഈ ലോകത്തിലെ ക്രിസ്തുവിന്റെ സഭയെയാണ് സൂചിപ്പിക്കുന്നത്. സഭ എന്നത് ഏതെങ്കിലും ഒരു പ്രത്യേക സഭാവിഭാഗത്തെയല്ല, മറിച്ച് വിശ്വാസികളുടെ കൂട്ടായ്മയെയാണ് അർത്ഥമാക്കുന്നത്.

അതായത്, ക്രിസ്തുവിൽ വിശ്വസിക്കുകയും അവനെ സ്വീകരിക്കുകയും ചെയ്ത ജനങ്ങളുടെ സമാധാനത്തിനായി നാം പ്രാർത്ഥിക്കണം എന്നാണ് ഇത് പറയുന്നത്. ഈ ലോകത്തിൽ ആത്മീയ ജീവിതം നയിക്കാൻ ശ്രമിക്കുന്ന ഓരോ ക്രിസ്ത്യാനിക്കും കഷ്ടതകൾ സഹിക്കേണ്ടതായി വരുന്നു. അതുകൊണ്ട് ഈ കഷ്ടതകളെ ജയിച്ചു ജീവിക്കുവാൻ തക്കവണ്ണം നാം അവർക്കായി പ്രാർത്ഥിക്കണം. ഇപ്രകാരം യെരൂശലേമാകുന്ന സഭയുടെ സമാധാനത്തിനായി നാം പ്രാർത്ഥിക്കുമ്പോൾ, നാം സഭയെ സ്നേഹിക്കുന്നു എന്നാണ് അതിനർത്ഥം. "നിന്നെ സ്നേഹിക്കുന്നവർ സ്വസ്ഥമായിരിക്കും" എന്ന് ഇന്നത്തെ ധ്യാനവാക്യത്തിന്റെ ആദ്യഭാഗം പ്രസ്താവിക്കുന്നു.

തുടർന്ന്, ഇപ്രകാരം യെരൂശലേമിന്റെ സമാധാനത്തിനായി പ്രാർത്ഥിക്കുന്നവരോട്, "നിന്റെ കോട്ടയ്ക്കുള്ളിൽ സമാധാനവും നിന്റെ അരമനകളിൽ ക്ഷേമവും ഉണ്ടാകട്ടെ" എന്ന് പറഞ്ഞിരിക്കുന്നു. കോട്ട എന്നാൽ രാജാക്കന്മാർ വസിക്കുന്ന അരമനയ്ക്ക് ചുറ്റും കെട്ടിയിരിക്കുന്ന സംരക്ഷണ മതിലാണ്. അതെ, യെരൂശലേമാകുന്ന സഭയ്ക്കായി പ്രാർത്ഥിക്കുമ്പോൾ നമ്മുടെ സംരക്ഷണ കോട്ട ശക്തമാകുകയും നമുക്ക് സമാധാനം ഉണ്ടാകുകയും ചെയ്യുന്നു. വീണ്ടെടുക്കപ്പെട്ട നാം തന്നെയാണ് ക്രിസ്തുവിന്റെ മുൻപിൽ രാജാക്കന്മാരായിരിക്കുന്നത്.

അതെ, ക്രിസ്തുവിൽ വിശ്വസിക്കുകയും അവനെ കൈക്കൊള്ളുകയും ചെയ്ത നമ്മെ അവൻ രാജാക്കന്മാരും പുരോഹിതന്മാരുമാക്കി മാറ്റിയിരിക്കുന്നു.

"എന്നാൽ നിങ്ങളോ, അന്ധകാരത്തിൽനിന്ന് തന്റെ അത്ഭുത പ്രകാശത്തിലേക്ക് നിങ്ങളെ വിളിച്ചവന്റെ സദ്ഗുണങ്ങളെ ഘോഷിക്കേണ്ടതിന് തിരഞ്ഞെടുക്കപ്പെട്ട ഒരു വംശവും രാജകീയ പുരോഹിതവർഗ്ഗവും വിശുദ്ധ ജനതയും ദൈവത്തിന് സ്വന്തമായ ജനവും ആകുന്നു." — 1 പത്രോസ് 2:9 (NIBV)

ചുരുക്കത്തിൽ, ക്രിസ്തുവിനാൽ തിരഞ്ഞെടുക്കപ്പെടുകയും അവന് സ്വന്തമാകുകയും ചെയ്ത നാം നമുക്കായി മാത്രം പ്രാർത്ഥിക്കാതെ, സഭയുടെ സമാധാനത്തിനായും പ്രാർത്ഥിക്കണം; അത് നമ്മുടെ കടമയാണ്. നാം അങ്ങനെ പ്രാർത്ഥിക്കുമ്പോൾ നമ്മുടെ വ്യക്തിപരമായ ആത്മീയ ജീവിതത്തിലും കുടുംബ ജീവിതത്തിലും സംരക്ഷണവും നന്മയും ഉണ്ടാകും.

നമ്മുടെ ദൈനംദിന പ്രാർത്ഥനയിൽ നമുക്കായി മാത്രം പ്രാർത്ഥിക്കാതെ, സഭയ്ക്കായും അതിന്റെ സമാധാനത്തിനായും പ്രാർത്ഥിക്കാൻ നാം മറക്കാതിരിക്കാം.

✒ സഹോദരൻ എം. ജിയോ പ്രകാശ് ✒️


🦋 Meditation verse - சங்கீதம் 122 : 6, 7 / Psalm 122:6–7

ஆதவன் தியானம்

எண் :- 2075 - நாள் :- 14.10.2026


"எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரண்மனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக." ( சங்கீதம் 122 : 6, 7 )

இன்றைய தியான வசனம் ஆவிக்குரிய பொருளோடு நாம் பார்க்கவேண்டிய ஒன்று. எருசலேம் என்று கூறப்படுவது உலகிலுள்ள எருசலேம் நகரத்தைக் குறிக்காமல் இந்த உலகிலுள்ள கிறிஸ்துவின் சபையினைக் குறிக்கின்றது. சபை என்பது குறிப்பிட்ட எந்த ஒரு திருச்சபைப்  பிரிவையும் குறிக்காமல் விசுவாசிகளின் கூட்டத்தைக் குறிக்கின்றது.  

அதாவது, நாம் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டுள்ள மக்களது சமாதானத்துக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என்று கூறுகின்றது. இந்த உலகினில் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு முயலுகின்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும் துன்பத்தைச் சகிக்கவேண்டியதிருக்கின்றது. எனவே அவர்கள் இந்தத் துன்பங்களை மேற்கொண்டு வாழ்வதற்கு நாம் ஜெபிக்கவேண்டும். இப்படி எருசலேமாகிய சபையின்  சமாதானத்துக்காக நாம் ஜெபிக்கின்றபோது நாம் சபையினை நேசிக்கின்றோம் என்று பொருள். இப்படி உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக என்று இன்றைய தியான வசனத்தின் முற்பகுதி கூறுகின்றது. 

தொடர்ந்து, இப்படி எருசலேமின் சமாதானத்துக்காக ஜெபிக்கும் "உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரண்மனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக" என்று கூறப்பட்டுள்ளது. அலங்கம் என்பது இராஜாக்கள் வாழும் அரண்மனையினைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் கோட்டைச்சுவர். ஆம், எருசலேமாகிய சபைக்காக ஜெபிக்கும்போது நமது பாதுகாப்பு அரண் பலப்பட்டு நமக்கு சமாதானம் உண்டாகின்றது. மீட்கப்பட்ட நாமே கிறிஸ்துவின்முன் இராஜாக்களாக இருக்கின்றோம். 

ஆம், கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டுள்ள நம்மை அவர் இராஜாக்களும் ஆசாரியர்களுமாக மாற்றியுள்ளார். "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 ) என்று வாசிக்கின்றோம். 

சுருக்கமாக, கிறிஸ்துவுக்கு உரிமையாளர்களாக அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் நமக்காக மட்டுமல்லாமல் சபையின் சமாதானத்துக்காக ஜெபிக்கவேண்டும்; அது நமது கடமை. அப்படி நாம் ஜெபிக்கும்போது நமக்குத் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்விலும் குடும்ப வாழ்விலும் பாதுகாப்பும் சுகமும் உண்டாயிருக்கும். 

நமது அன்றாட ஜெபத்தில் நமக்காக மட்டும் ஜெபிக்காமல் சபைக்காகவும் அதன் சமாதானதுக்காகவும்  ஜெபிக்க மறக்காமல் இருப்போம்.  

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

Number: 2075 | Date: 14.10.2026

"Pray for the peace of Jerusalem: 'May they prosper who love you. May peace be within your walls, and prosperity within your palaces.'" — Psalm 122:6–7 (NASB)

Today’s meditation verse is one that we need to view with a spiritual meaning. What is referred to as "Jerusalem" here does not denote the earthly city of Jerusalem, but rather the Church of Christ in this world. "The Church" does not refer to any specific denomination, but to the assembly of believers.

That is, scripture instructs us to pray for the peace of the people who have believed in and accepted Christ. Every Christian who strives to live a spiritual life in this world must endure tribulation. Therefore, we ought to pray that they overcome these tribulations and live. When we pray for the peace of the Church—which is Jerusalem—it means that we love the Church. The former part of today's meditation verse states, "May they prosper who love you."

Continuing, to those who pray for the peace of Jerusalem, it is said: "May peace be within your walls, and prosperity within your palaces." The "wall" (rampart/fortress) refers to the fortified wall built around the palace where kings reside. Yes, when we pray for the Church—Jerusalem—our wall of protection is strengthened, and peace comes upon us. We who are redeemed stand as kings before Christ.

Indeed, having believed in and accepted Christ, He has made us kings and priests. We read:

"But you are a chosen people, a royal priesthood, a holy nation, a people for God’s own possession, so that you may proclaim the excellencies of Him who has called you out of darkness into His marvellous light."— 1 Peter 2:9 (NASB)

In summary, as those chosen and owned by Christ, we must pray not only for ourselves but also for the peace of the Church; it is our duty. When we pray in this manner, we will experience protection and well-being in our personal spiritual life as well as in our family life.

In our daily prayers, let us not forget to pray for the Church and its peace, rather than praying solely for ourselves.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

Monday, October 12, 2026

🦋 Meditation verse - യിരെമ്യാവ് 2:13

 ആഥവൻ ധ്യാനം

നമ്പർ: 2074 | തീയതി: 13.10.2026

"എന്റെ ജനം രണ്ടു ദോഷം ചെയ്തിരിക്കുന്നു; ജീവജലത്തിന്റെ ഉറവയായ എന്നെ ഉപേക്ഷിച്ചു; വെള്ളം നിൽക്കാത്ത പൊട്ടക്കിണറുകളെ അവർ തുരന്നുവെച്ചിരിക്കുന്നു." — യിരെമ്യാവ് 2:13 (NIBV)

ഇന്നത്തെ ധ്യാന വാക്യം അന്യജനങ്ങളോടല്ല, മറിച്ച് ദൈവത്താൽ തിരഞ്ഞെടുക്കപ്പെട്ട ഇസ്രായേൽ ജനത്തോടാണ് അരുളിച്ചെയ്തിരിക്കുന്നത്. ഇസ്രായേൽ ജനം ദൈവത്താൽ തിരഞ്ഞെടുക്കപ്പെട്ടവരായിരുന്നു. അതുകൊണ്ടാണ് ദൈവം അവരെ "എന്റെ ജനം" എന്ന് വിളിക്കുന്നത്.

തിരഞ്ഞെടുക്കപ്പെട്ട ഈ ഇസ്രായേൽ ജനം ആദ്യമായി ചെയ്ത തെറ്റ്, കർത്താവിനെ ഉപേക്ഷിച്ചു എന്നതാണ്. അതായത്, അവിടുത്തെ കല്പനകളെയും അവിടുത്തെ മേലുള്ള സ്നേഹത്തെയും അവർ ഉപേക്ഷിച്ചു. രണ്ടാമതായി, അവർ തങ്ങൾക്കായി അന്യദൈവങ്ങളെ ഉണ്ടാക്കി. ഇതിനെക്കുറിച്ചാണ്, "ജീവജലത്തിന്റെ ഉറവയായ എന്നെ ഉപേക്ഷിച്ചു; വെള്ളം നിൽക്കാത്ത പൊട്ടക്കിണറുകളെ അവർ തുരന്നുവെച്ചിരിക്കുന്നു" എന്ന് ദൈവം ദുഃഖത്തോടെ പറയുന്നത്.

ഇന്നത്തെ ധ്യാന വാക്യത്തിന് രണ്ട് വാക്യങ്ങൾക്ക് മുമ്പ് നാം ഇപ്രകാരം വായിക്കുന്നു:

"ഏതെങ്കിലും ഒരു ജാതി ദൈവങ്ങളല്ലാത്ത തങ്ങളുടെ ദൈവങ്ങളെ മാറ്റീട്ടുണ്ടോ? എന്റെ ജനമോ, ഒന്നിനും കൊള്ളാത്തതിനായി തങ്ങളുടെ മഹത്വത്തെ മാറ്റിക്കളഞ്ഞിരിക്കുന്നു." — യിരെമ്യാവ് 2:11 (NIBV)

അതെ, വ്യർത്ഥമായ കാര്യങ്ങൾക്കായി അവർ കർത്താവിന്റെ മഹത്വത്തെ മാറ്റിക്കളഞ്ഞു.

നമ്മുടെ കർത്താവായ യേശുക്രിസ്തു തന്നെയാണ് നമുക്ക് സത്യമായ ജീവജലം നൽകുന്ന ഉറവയായിരിക്കുന്നത്. അവിടുന്ന് തന്നെ ഇപ്രകാരം പറഞ്ഞിട്ടില്ലേ?

"എന്നിൽ വിശ്വസിക്കുന്നവന്റെ ഉള്ളിൽനിന്ന് തിരുവെഴുത്തു പറയുന്നതുപോലെ ജീവജലത്തിന്റെ നദികൾ ഒഴുകും." — യോഹന്നാൻ 7:38 (NIBV)

അതെ പ്രിയമുള്ളവരേ, ഇന്ന് നാമാണ് ആത്മീയ ഇസ്രായേൽ. ഇന്ന് തങ്ങൾ ക്രിസ്ത്യാനികളാണെന്ന് അവകാശപ്പെടുന്ന പലരും പഴയ ഇസ്രായേൽ ജനം ചെയ്ത അതേ തെറ്റാണ് ചെയ്തുകൊണ്ടിരിക്കുന്നത്. ഇന്ന് ഒരുപക്ഷേ നാം മറ്റ് ദൈവങ്ങളെ വന്ദിക്കുന്നുണ്ടാവില്ല, എന്നാൽ ദൈവത്തിന് നൽകേണ്ട പ്രാധാന്യം നാം പണം, സ്വത്ത്, പദവി, അധികാരം, അഹങ്കാരം എന്നിവയ്ക്ക് നൽകുകയാണെങ്കിൽ, നാമും അന്യദൈവങ്ങളെ വന്ദിക്കുകയും പൊട്ടക്കിണറുകൾ പണിയുകയും ചെയ്യുന്നു എന്നാണ് ഇതിനർത്ഥം. അതെ, ക്രിസ്തുവിന് നൽകേണ്ട ബഹുമാനം നൽകതെ പല ക്രിസ്ത്യാനികളും പൊട്ടക്കിണറുകൾ പണിതുകൊണ്ടിരിക്കുകയാണ്.

പൊട്ടക്കിണറ്റിൽ വെള്ളം ശേഖരിച്ച് ഉപയോഗിക്കാൻ കഴിയാത്തതുപോലെ, ഇത്തരം ദൈവങ്ങളെക്കൊണ്ട് യാതൊരു പ്രയോജനവുമില്ല. പ്രിയമുള്ളവരേ, വ്യർത്ഥമായ ദൈവങ്ങളെ ആരാധിച്ച ഇസ്രായേല്യരെപ്പോലെ നാം ആയിരിക്കുന്നത് ശരിയല്ല. ലൗകിക ആവശ്യങ്ങളെയും അഹങ്കാരത്തെയും ദൈവങ്ങളായി കരുതി അവയുടെ പിന്നാലെ ഓടുന്നതിനിടയിൽ ക്രിസ്തുവിനെയും അവിടുന്ന് കാണിച്ചുതന്ന വഴികളെയും ഉപേക്ഷിക്കുന്നത് പൊട്ടക്കിണറുകൾ തുരക്കുന്ന ഭോഷത്തത്തിന് തുല്യമാണ്.

ഇസ്രായേല്യർ പലതവണ അടിമത്തത്തിലാകാൻ കാരണം അവർ ദൈവത്തെ ഉപേക്ഷിച്ച് ഇത്തരം പൊട്ടക്കിണറുകൾ തുരന്നതുകൊണ്ടാണ്. ഇന്ന് അല്പനേരത്തെ സുഖസന്തോഷങ്ങൾക്കായി ദൈവത്തെ ഉപേക്ഷിക്കുന്നത് നമ്മുടെ ജീവിതത്തിൽ നമ്മെ പലവിധ അടിമത്തങ്ങളിലേക്കായിരിക്കും എത്തിക്കുന്നത്.

ഭൗതിക ഇസ്രായേല്യർ ചെയ്ത തെറ്റ് നാം ചെയ്യാതിരിക്കാൻ നമ്മെത്തന്നെ കാത്തുസൂക്ഷിക്കാം. ജീവജലത്തിന്റെ ഉറവയായ ക്രിസ്തുവിനെ ഉപേക്ഷിക്കാതിരിക്കാം; വെള്ളം നിൽക്കാത്ത പൊട്ടക്കിണറുകൾ നമുക്കായി തുരക്കാതിരിക്കാം.

✒ സഹോദരൻ എം. ജിയോ പ്രകാശ് ✒️

🦋 Meditation verse - எரேமியா 2 : 13 / Jeremiah 2:13

 ஆதவன் தியானம்

எண் :- 2074 - நாள் :- 13.10.2026


"என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 ) 

இன்றைய தியான வசனம் பிற இன மக்களுக்குக் கூறப்பட்ட வசனமல்ல, மாறாக இது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்குக் கூறப்பட்டுள்ள தேவ வார்த்தைகளாகும். இஸ்ரவேல் மக்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருந்தனர். எனவேதான் அவர்களை "என் ஜனங்கள்" என்று தேவன் கூறுகின்றார். 

இந்தத் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்கள் முதலில் செய்த தவறு, கர்த்தரை விட்டுவிட்டது. அதாவது, அவரது கற்பனைகளையும் அவர்மேலுள்ள அன்பையும் விட்டுவிட்டார்கள் அவர்கள். இரண்டாவது, பிற தெய்வங்களை தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்டனர். இதனையே, "ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்" என்று தேவன் வருத்தத்துடன் கூறுகின்றார். 

இன்றைய தியான வசனத்தின் இரண்டு வசனத்துக்குமுன் நாம் வாசிக்கின்றோம்,. "எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்."( எரேமியா 2 : 11 ) ஆம், வீணான தெய்வங்களுக்காக கர்த்தரது மகிமையை மாற்றினார்கள். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான ஜீவத்தண்ணீரை நமக்குக் கொடுக்கும் ஊற்றாக இருக்கின்றார். இதனை அவரே,  "வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" ( யோவான் 7 : 38 ) என்று கூறவில்லையா? 

ஆம் அன்பானவர்களே, இன்று நாமே ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாக இருக்கின்றோம். இன்றும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் பழைய இஸ்ரவேல் மக்கள் செய்தத் தவறையே செய்துகொண்டிருக்கின்றனர். இன்று ஒருவேளை நாம் வேறு தெய்வங்களை வணங்காமலிருக்கலாம் ஆனால் தேவனுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை நாம் பணம், சொத்துக்கள், பதவி, அதிகாரம், பெருமை இவற்றுக்குக் கொடுப்போமானால் நாமும் அந்நிய தெய்வங்களை வணங்கி, வெடிப்புள்ள தண்ணீர் தொட்டிகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றோம் என்றுதான் பொருள். ஆம் கிறிஸ்தவர்கள் பலரும் கிறிஸ்துவுக்குச் செலுத்தவேண்டிய கனத்தைச் செலுத்தாமல் வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். 

வெடிப்புள்ள தொட்டியில் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியாததுபோல இத்தகைய அந்தத் தெய்வங்களால் வேறு எந்த பயனும் இல்லை. அன்பானவர்களே, வீணான தெய்வங்களை வழிபட்ட இஸ்ரவேலரைப்போல நாம் இருப்பது முறையல்ல. உலகத் தேவைகளையும் பெருமைகளையும்  தெய்வங்களாக எண்ணி அவற்றைத் தேடி ஓடுவதில் கிறிஸ்துவையும்  அவர் காட்டிய நெறிகளை விட்டுவிடுவது வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டும் மூடத்தனம் போன்றதாகும்.

இஸ்ரவேலர் பலமுறை அடிமைப்பட்டுபோகக் காரணம் அவர்கள் தேவனை விட்டு இப்படி வெடிப்புள்ள தொட்டிகளைக் கட்டிக்கொண்டதால்தான். இன்று அற்பகால இன்பத்துக்காக தேவனை விட்டுவிடுவது நமது வாழ்வில் நம்மை பல்வேறு அடிமைத்தனத்துக்குள்தான் கொண்டுபோய்ச்  சேர்க்கும். 

உலக இஸ்ரவேலர் செய்தத்  தவறுபோல நாமும் செய்யாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய கிறிஸ்துவை விட்டுவிடாதிருப்போம்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை நமக்காகக் கட்டிக்கொள்ளாமல் இருப்போம்.  

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN Meditation

Number: 2074 | Date: 13.10.2026

"For My people have committed two evils: They have abandoned Me, the fountain of living waters, to carve out for themselves cisterns, broken cisterns that can hold no water." — Jeremiah 2:13 (NASB)

Today’s meditation verse was not spoken to other nations, but rather, these are the words of God spoken to His chosen people, Israel. The people of Israel were chosen by God, which is why God calls them "My people."

The first mistake these chosen people of Israel made was abandoning the Lord. That is, they left His commandments and their love for Him. Secondly, they created other gods for themselves. It is regarding this that God says with sorrow: "They have abandoned Me, the fountain of living waters, to carve out for themselves cisterns, broken cisterns that can hold no water."

Two verses prior to today’s meditation passage, we read:

"Has a nation changed gods when they were not gods? But My people have exchanged their glory for that which does not profit." — Jeremiah 2:11 (NASB)

Yes, they exchanged the glory of the Lord for worthless gods.

Our Lord Jesus Christ Himself is the fountain who gives us true living water. Did He not say this Himself?

"The one who believes in Me, as the Scripture said, 'From his innermost being will flow rivers of living water.'" — John 7:38 (NASB)

Yes, beloved, today we are spiritual Israel. Even today, many who call themselves Christians are committing the very same mistake that ancient Israel committed. Today, we may not worship other physical deities, but if we give the priority that belongs to God to money, possessions, status, authority, or pride, it means that we too are worshipping foreign gods and building broken cisterns. Indeed, many Christians build broken cisterns without giving Christ the honour due to Him.

Just as water stored in a broken cistern cannot be used, such gods are of no benefit whatsoever. Beloved, it is not right for us to be like the Israelites who worshipped worthless gods. Chasing after worldly needs and pride as if they were gods, and abandoning Christ and the principles He showed, is like the foolishness of building broken cisterns.

The reason why the Israelites were led into captivity multiple times was because they left God and built such broken cisterns. Today, abandoning God for fleeting pleasures will only lead our lives into various forms of bondage.

Let us protect ourselves so that we do not make the same mistake earthly Israel made. Let us not abandon Christ, the fountain of living water; let us not build for ourselves broken cisterns that hold no water.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦



From Slavery to Freedom: Children of God's Promise - (Galatians 4:22–26)

 

                            - Sr. Amutha ICM

Paul speaks about Abraham's two sons: Ishmael, born to Hagar, the slave woman, and Isaac, born to Sarah, the freeborn woman, according to God's promise. Through this story, Paul explains two ways of relating to God: slavery and freedom. The Jerusalem above represents the freedom we receive through Christ.

1. From Human Effort to Trust in God's Promise

Abraham and Sarah became impatient while waiting for God's promise and tried to fulfil it through their own plans. How often do we do the same? When God seems silent or our prayers remain unanswered, we try to control situations. Faith does not mean doing nothing; it means doing our part while trusting God's timing and wisdom.

2. From Slavery to Freedom

Paul reminds us that we are called to live as God's children, not as slaves driven by fear. We can become prisoners of our past, our failures, others' opinions, and our need for recognition and control. True freedom is not doing whatever we want, but becoming free to do what is right and loving. We obey God as a response to His love.

3. Living as Children of the Promise

Paul declares, “But the Jerusalem above is freeborn, and she is our mother” (Galatians 4:26). Our identity does not depend on our achievements, positions, or others' approval. Through Christ, we are God's children. In our daily lives, we may measure our worth by our achievements, responsibilities, or the appreciation we receive from others. But our worth does not depend on what we achieve or how others see us; it rests in God's unconditional love. When we live in this freedom, we become less controlling, more forgiving, and more accepting of others.

Let us ask ourselves: What is enslaving me today? Am I living from the freedom of being God's beloved child, or am I still imprisoned by my own desires, unable to surrender myself fully to God's will?

Loving Father, help us to trust Your promises and live as Your beloved children. May our lives reveal Christ's freedom through love, forgiveness, compassion, and genuine concern for others. Amen.

Sunday, October 11, 2026

🦋 Meditation verse - எரேமியா 12 : 5 / Jeremiah 12:5

ஆதவன் தியானம்                                                                      எண் :- 2073 - நாள் :- 12.10.2026


"நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்?" ( எரேமியா 12 : 5 )

இந்த உலகத்தில் பலரும் தங்களது உடல் பலத்தையும், பொருளாதாரம், அதிகாரம் இவற்றின் பலத்தையும் நம்பியே வாழ்கின்றனர். பெரும்பாலும் பலரும் தேவனை மறந்த வாழ்க்கையே  நடத்துகின்றனர். இன்றைய தியான வசனம்,  மனிதர்களின் இந்தத் தவறான எண்ணத்தை மாற்றவும், மனித பலவீனத்தை அவர்களுக்கு உணர்த்தி அவர்கள் தேவனைச் சார்ந்துகொள்ளவும்   அழைப்புவிடுக்கின்றது. 

வேதாகமக்  காலங்களில் நடைபெற்றப்  போர்களில் காலாட்படைகளும் குதிரைப்படைகளும்தான் முக்கியமாக இருந்தன. காலாட்படைவீரர்கள் நல்ல உடல்வலிமையும் ஓட்டத்திறமையும் உள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அதாவது குதிரைகளைப்போல அவர்கள் ஓடவேண்டும். அப்போதுதான் எதிரிகளைத் துரத்தவும் அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும். 

இவற்றை உவமையாகக் கொண்டே இன்றைய தியான வசனம் விளக்கப்பட்டுள்ளது. அதாவது, மனதில் பெருமைகொண்டு, உன்னிடம் ஓட்டத்திறமை இருப்பதாக எண்ணிக்கொள்ளும் நீ,  உன்னைப்போன்ற பிற காலாட்படை வீரர்களுடன் ஓடும்போதே இளைப்படைந்துவிட்டாயானால் உன்னால் எப்படிக்  குதிரைகளுடன் ஓடமுடியும்? என்று கேள்வி எழுப்புகின்றது.  குதிரைப்படையுடன் ஓடக்கூடிய திறமை உண்மையாகவே உனக்கு இருக்கின்றதா? 

மட்டுமல்ல, உலக மக்கள் பலரும் சமாதானத்துடன் வாழும்போதே உனக்கு சமாதானம் இல்லாமல் அலைந்து திரிவாயானால், யோர்தானில்   வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துன்பப்படுவதுபோல  கொடிய துன்பம் நாட்டிலும் உனக்கும் ஏற்படும்போது  நீ என்னசெய்வாய்? என்று கேள்வி எழுப்புகின்றது. 

ஆம் அன்பானவர்களே, நமக்கு நல்ல பலமிருக்கின்றது, பணமிருக்கின்றது, அதிகாரம் இருக்கின்றது  என  எண்ணிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த வசனம் ஒரு எச்சரிக்கையாக இருக்கின்றது. சுயபலம் இக்கட்டுகளுக்கு நம்மைத் தப்புவிக்காது; நாம் தேவனைச் சார்ந்துகொண்டு வாழ்ந்தால் மட்டுமே நம்மால் குதிரைகளோடு ஓடமுடியும், யோர்தானின் பெரிய வெள்ளப்பெருக்குக்குத் தப்ப முடியும் என்று அறிவுறுத்துகின்றது. 

எனவே அன்பானவர்களே, நமது மனித பலத்தை நம்பாமல், நமது பலவீனத்தை தேவனிடம் அறிக்கையிட்டு அவரது கிருபைக்கு வேண்டுவோம். நமது பலமல்ல, தேவ கிருபையே நம்மை பிரச்சனைகள், பாவங்கள், துன்பங்களை மேற்கொண்டு வெற்றி வாழ்க்கை வாழ உதவிடமுடியும்.  "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2  கொரிந்தியர் 12 : 9 ) என்கிறார்  தேவனாகிய கர்த்தர். நமது பலவீனங்களை தேவனிடம் ஒத்துக்கொள்ளும்போது மட்டுமே தேவ கிருபையினை நாம் வாழ்வில் பெற்றுக்கொள்ளமுடியும். 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️


AATHAVAN MEDITATION

Number: 2073 | Date: 12.10.2026


"If you have run with footmen and they have tired you out, then how can you compete with horses? If you fall down in a land of peace, how will you do in the thicket of the Jordan?" — Jeremiah 12:5 (NASB)

In this world, many people live relying solely on their physical strength, financial resources, and personal authority. For the most part, many lead a life that completely forgets God. Today’s meditation verse comes as a call to change this mistaken mindset, to make human beings realize their inherent weakness, and to urge them to lean entirely upon God.

In biblical times, foot soldiers (infantry) and cavalry (horsemen) played key roles in warfare. Infantry soldiers needed to possess immense physical endurance and running capability—they essentially had to run like horses to pursue enemies or escape danger.

Today's verse uses this context as a vivid metaphor. It poses a piercing question: If you, proud in heart and boasting of your running ability, grow weary while running merely against fellow foot soldiers, how will you ever compete with horses? Do you truly possess the strength to run alongside a cavalry?

Furthermore, it asks: If you wander around restless even when the world around you is at peace, what will you do when severe adversity strikes both your nation and your life—just as when the Jordan River overflows its banks and brings distress upon the people?

Yes, dear friends! This Scripture stands as a solemn warning to those who think, "I have great strength, ample money, and position." Our self-reliance and personal strength cannot rescue us in times of crisis. It reminds us that only when we depend on God can we run with horses and endure the great floods of the Jordan.

Therefore, beloved, let us not place our confidence in human strength. Instead, let us acknowledge our weakness before God and plead for His grace. It is not our power, but God’s grace alone that enables us to overcome trials, sins, and suffering to live a victorious life.

"My grace is sufficient for you, for power is perfected in weakness." — 2 Corinthians 12:9 (NASB)

Only when we humbly acknowledge our weaknesses before God can we truly experience His grace operating in our lives.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

🦋 Meditation verse - യിരെമ്യാവ് 12:5

 ആഥവൻ ധ്യാനം

ലക്കം: 2073 | തീയതി: 12.10.2026

"നീ കാലാൾപ്പടയോടു കൂടെ ഓടിയിട്ട് അവർ നിന്നെ തളർത്തിയെങ്കിൽ, കുതിരകളോട് ഏങ്ങനെ മത്സരിക്കും? സമാധാനമുള്ള ദേശത്ത് നീ സുരക്ഷിതനായിരിക്കുന്നു എങ്കിൽ, യോർദ്ദാന്റെ പെരുവെള്ളപ്പാച്ചിലിൽ നീ എന്തു ചെയ്യും?" — യിരെമ്യാവ് 12:5 (NIBV)

ഈ ലോകത്തിൽ പലരും തങ്ങളുടെ ശാരീരിക ബലത്തിലും സാമ്പത്തിക ശേഷിയിലും അധികാരത്തിലും മാത്രം ആശ്രയിച്ചാണ് ജീവിക്കുന്നത്. ഭൂരിഭാഗം ആളുകളും ദൈവത്തെ മറന്നുള്ള ഒരു ജീവിതമാണ് നയിക്കുന്നത്. മനുഷ്യരുടെ ഈ തെറ്റായ ചിന്താഗതിയെ തിരുത്താനും, അവരുടെ ബലഹീനതകളെ ബോധ്യപ്പെടുത്തി ദൈവത്തിൽ ആശ്രയിക്കാൻ അവരെ ക്ഷണിക്കാനുമാണ് ഇന്നത്തെ ധ്യാനവചനം നമ്മെ ആഹ്വാനം ചെയ്യുന്നത്.

വേദപുസ്തക കാലഘട്ടങ്ങളിൽ നടന്നിരുന്ന യുദ്ധങ്ങളിൽ കാലാൾപ്പടയും കുതിരപ്പടയുമായിരുന്നു പ്രധാന പങ്കുവഹിച്ചിരുന്നത്. കാലാൾപ്പടയാളികൾക്ക് നല്ല ശാരീരിക ക്ഷമതയും വേഗത്തിൽ ഓടാനുള്ള പ്രാപ്തിയും അത്യന്താപേക്ഷിതമായിരുന്നു. ശത്രുക്കളെ പിന്തുടരാനും അവരിൽ നിന്ന് രക്ഷപ്പെടാനും അവർക്ക് കുതിരകളെപ്പോലെ ഓടേണ്ടിയിരുന്നു.

ഇതിനെ ഒരു ഉപമയാക്കിയാണ് ഇന്നത്തെ ധ്യാനവചനം വിശദീകരിക്കുന്നത്. അതായത്, മനസ്സിൽ അഹങ്കരിച്ച് തനിക്ക് ഓടാൻ കഴിവുണ്ടെന്ന് കരുതുന്ന നീ, നിന്നെപ്പോലെയുള്ള മറ്റ് കാലാൾപ്പടയാളികളോട് കൂടെ ഓടുമ്പോൾ തന്നെ തളർന്നുപോയെങ്കിൽ, കുതിരകളോട് കൂടെ ഓടാൻ നിനക്ക് എങ്ങനെ സാധിക്കും? കുതിരപ്പടയോടൊപ്പം ഓടാനുള്ള പ്രാപ്തി സത്യത്തിൽ നിനക്കുണ്ടോ? എന്ന് വചനം ചോദിക്കുന്നു.

മാത്രമല്ല, ലോകത്തിലെ മറ്റു മനുഷ്യർ സമാധാനത്തോടെ ജീവിക്കുമ്പോൾ തന്നെ നീ സമാധാനമില്ലാതെ അലഞ്ഞുതിരിയുകയാണെങ്കിൽ, യോർദ്ദാനിൽ പെരുവെള്ളപ്പൊക്കമുണ്ടാകുമ്പോൾ ജനങ്ങൾ കഷ്ടപ്പെടുന്നതുപോലെ കഠിനമായ ദുരിതങ്ങൾ നിന്റെ ജീവിതത്തിലും നാടുകളിലും ഉണ്ടാകുമ്പോൾ നീ എന്ത് ചെയ്യും? എന്നും വചനം ചോദിക്കുന്നു.

അതെ പ്രിയമുള്ളവരേ, എനിക്ക് നല്ല ബലമുണ്ട്, പണമുണ്ട്, അധികാരമുണ്ട് എന്നൊക്കെ വിചാരിച്ചിരിക്കുന്ന മനുഷ്യർക്കുള്ള ഒരു മുന്നറിയിപ്പാണ് ഈ വചനം. സ്വന്തം ബലത്തിന് നമ്മെ പ്രതിസന്ധികളിൽ നിന്ന് വിടുവിക്കാൻ കഴിയില്ല; നാം ദൈവത്തിൽ ആശ്രയിച്ചു ജീവിച്ചാൽ മാത്രമേ കുതിരകളോട് കൂടെ ഓടാനും യോർദ്ദാന്റെ പെരുവെള്ളപ്പാച്ചിലിനെ അതിജീവിക്കാനും സാധിക്കൂ എന്ന് ഇത് നമ്മെ ഓർമ്മിപ്പിക്കുന്നു.

അതുകൊണ്ട് പ്രിയമുള്ളവരേ, നമ്മുടെ മാനുഷിക ബലത്തിൽ ആശ്രയിക്കാതെ, നമ്മുടെ ബലഹീനതകളെ ദൈവത്തോട് ഏറ്റുപറഞ്ഞ് അവിടുത്തെ കൃപയ്ക്കായി പ്രാർത്ഥിക്കാം. നമ്മുടെ ബലമല്ല, ദൈവത്തിന്റെ കൃപ മാത്രമാണ് പ്രശ്നങ്ങളെയും പാപങ്ങളെയും കഷ്ടതകളെയും ജയിച്ച് ഒരു വിജയകരമായ ജീവിതം നയിക്കാൻ നമ്മെ സഹായിക്കുന്നത്.

"എന്റെ കൃപ നിനക്കു മതി; ബലഹീനതയിൽ എന്റെ ശക്തി പൂർണ്ണമാകുന്നു." — 2 കൊരിന്ത്യർ 12:9 (NIBV)

നമ്മുടെ ബലഹീനതകളെ ദൈവമുമ്പാകെ സമ്മതിക്കുമ്പോൾ മാത്രമേ ദൈവകൃപ നമ്മുടെ ജീവിതത്തിൽ പ്രാപിക്കാൻ സാധിക്കൂ.

✒ സഹോദരൻ എം. ജിയോ പ്രകാശ് ✒️

Saturday, October 10, 2026

🍒 Invited by Grace, Called to Transformation (Matthew 22:1–14)

 






Sr. Amutha ICM


The king invited everyone he could find, “bad and good alike,” and the wedding hall was filled with guests. This reveals God's unconditional generosity. He welcomes us as we are, but He does not want us to remain as we are. His invitation is freely given, but it calls us to a transformed life.

Why, then, did the king punish the man without a wedding garment? The garment symbolizes the inner transformation that should follow our acceptance of God's invitation. It represents a life clothed with Christ—with love, mercy, humility, and justice. The man accepted the invitation outwardly, but his presence did not reflect the meaning of the feast.

The king's question, “My friend, how is it that you came in here without a wedding garment?” invites us to examine ourselves. We may attend Mass, receive the sacraments, and practise our religious duties, yet remain clothed in pride, jealousy, gossiping, resentment, or indifference to others' suffering.

God's grace welcomes us, but it also calls us to conversion. We cannot earn His invitation through our goodness, but we must allow His grace to change our hearts and lives. Let us ask ourselves: Am I merely present at God's feast, or am I living the life to which He has called me? Am I wearing only the outward garments of faith, or am I truly clothed with Christ in my attitudes, relationships, and actions? Amen.  

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

May the Eyes of Our Hearts Be Enlightened (Ephesians 1:17–18)

                                                       - Sr. Amutha, ICM I n today’s passage, St. Paul prays that God may give us a spirit o...