"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1850
🔆 2026 மார்ச் 02, திங்கள்
"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1: 5)
இன்று இந்த உலகத்தில் பெரிய தலைவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்படுவதை நாம் பார்க்கின்றோம். அப்படிப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள தலைவர்களை நாம் எளிதில் சென்று பார்த்துவிட முடியாது. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு எதிராக நாம் ஏதாவது செய்துவிடமுடியுமா? சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அவர்களைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் அவரது இல்லத்தில் நுழைந்த மனிதனைப் பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர் என்ற செய்தியைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நாம் பார்த்தோம். இதுபோலவே கர்த்தர் தனது பிள்ளைகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்து எதிரிகளை அழிக்கின்றார்.
இதனையே இன்றைய தியான வசனத்தில் அவர் யோசுவாவிடம் கூறுகின்றார், "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்" என்று. தேவன் மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதில்லை. எனவே, யோசுவாவிடம் இப்படிக் கூறினாரென்றால் அது நமக்கும் உரிமையான வாக்குறுதியாகவே இருக்கின்றது. ஆனால், இந்த வாக்குத்தத்தத்துக்கு ஒரு நிபந்தனையையும் தேவன் கொடுத்தார். ஆம், "என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக." ( யோசுவா 1: 7)
அதாவது, மோசே மூலம் கொடுக்கப்பட்டக் கட்டளைகளுக்கு யோசுவா கீழ்ப்படிந்து நடந்தால் மட்டுமே இந்தப் பாதுகாப்பு அவனுக்கு உண்டு. இன்றும், புதிய ஏற்பாட்டு மக்களாகிய நமக்கு கிறிஸ்து பல கட்டளைகளைக் கொடுத்துள்ளார். அவற்றின்படி நாம் நடக்கும்போது, "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் நமக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று யோசுவாவிடம் கூறிய வார்த்தைகள் நமது வாழ்க்கையிலும் நிறைவேறும்படி தேவன் கிருபை செய்வார்.
இந்த வசனம், நமக்கு எதிராகச் செயல்படும் மக்களை மட்டுமல்ல, நமக்கு எதிராக எழும்பும் பிரச்சனைகள், துன்பங்கள், நோய்கள், எதுவும் நம்மை எதிர்த்து நிற்காதபடி தேவன் நம்மைக் காத்துக்கொள்வார்; நம்மை விட்டு விலகவும் மாட்டார், நம்மைக் கைவிடவும் மாட்டார் என்பதனை விளக்குகின்றது.
மேலும், அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அவர்கள் பதவியில் இருக்கும் வரையில்தான் உண்டு. ஆனால், இன்றைய தியான வசனத்தில் தேவன் கூறுகின்றார், "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை" என்று. மட்டுமல்ல அன்பானவர்களே, அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு உறுதியற்றது. காரணம், அது பெலவீன மனிதர்களை, உண்மையற்ற மனிதர்களை அடிப்டையாகக் கொண்டு செயல்படுவது. நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை அவரது சொந்த மெய்க்காப்பாளனே சுட்டுகொன்றதை நாம் அறிவோம்.
ஆம், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது யோசுவாவுக்கு கூறிய வார்த்தைகள் நமது வாழ்க்கையில் நமக்கும் நிரைவேறும். எனவே, தேவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ உறுதிகொள்வோம். அப்போது நமக்குத் தேவ பாதுகாப்பு நிச்சயம் உண்டு. நாம் உயிரோடு இந்த உலகத்தில் வாழும் நாள்வரை அவர் நம்மைக் கைவிடாமலும் நம்மை விட்டு விலகாமலும் இருப்பார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Within the Seeds” 🌳
📖 Aathavan
Bible Meditation – No. 1850
🔆
March 02, 2026 – Monday
“No one will be able to
stand against you all the days of your life. Just as I have been with Moses, I
will be with you; I will not desert you nor abandon you.” — Book of Joshua 1:5
Today, we see that great
leaders of this world are provided with extraordinary security. It is not easy
for anyone to approach them freely. When such tight protection is in place, can
anyone easily act against them? Recently, news reports showed that security
personnel shot and killed a man who had entered with the intention of
assassinating the American President, Donald Trump.
In a similar way, the Lord
grants protection to His children and destroys their enemies.
In today’s meditation verse,
God says to Joshua:
“No one will be able to
stand against you all the days of your life; just as I have been with Moses, I
will be with you.” — Book of Joshua 1:5
God shows no partiality
among people. Therefore, if He spoke this promise to Joshua, it also rightfully
belongs to us. However, this promise came with a condition. Yes, the Lord said:
“Only be strong and very
courageous; be careful to do according to all the Law which Moses My servant
commanded you; do not turn from it to the right or to the left, so that you may
achieve success wherever you go.” — Book of Joshua 1:7
This means Joshua would
enjoy this protection only if he obeyed the commandments given through Moses.
Even today, as New Testament
believers, Christ has given us many commands. When we walk according to them,
the words spoken to Joshua - “I will be with you; I will not desert you nor
abandon you.” — will also be fulfilled in our lives by God’s grace.
This verse does not refer
only to people who oppose us. It also assures us that problems, sufferings,
sicknesses, and any challenges that rise against us will not prevail over us.
God Himself will guard us. He will neither leave us nor forsake us.
Furthermore, the protection
given to political leaders lasts only as long as they remain in office. But in
today’s meditation verse, God says:
“No one will be able to
stand against you all the days of your life.”
Beloved, the security given
to political leaders is uncertain because it depends on weak and imperfect
human beings. We know that our former Prime Minister Indira Gandhi was
assassinated by her own bodyguard.
Yes, when we live a life
pleasing to God, the words spoken to Joshua will surely be fulfilled in our
lives as well. Therefore, let us commit ourselves to obey God’s commandments
and live in a manner worthy of Him.
Then divine protection will
certainly be ours. As long as we live in this world, He will not abandon us,
nor will He forsake us.
Divine Message: Bro. M. Geo Prakash