வேதாகமத் தியானம் - எண்:- 1,553
உண்மையினை நேருக்குநேர் சந்திக்க பலரும் விரும்புவதில்லை. பேலிக்ஸ் ராஜாவும் அப்படியே இருந்தான். பவுல், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்தான் என்று வாசிக்கின்றோம். இந்த பயத்துக்குக் காரணம் என்ன? அவனிடம் நீதி, இட்சையடக்கம் போன்ற குணங்கள் இல்லை என்று பொருள்.
பொதுவாக மனிதர்களுக்குத் தங்களது குற்றங்கள் குறைகளையும் பாவங்களையும் பிறர் எடுத்துக்கூறுவது பிடிக்காது. அதிலும் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு தங்களைப் பிறர் குறைகூறுவது ஏற்கவே முடியாதது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்பவர்கள் தங்களது வாழ்க்கையினை மாற்றிக்கொள்ள வழியுண்டு. விசாரணைக் கைதியான பவுல் பேசிய பேச்சுக்கள் பேலிக்சை உள்ளத்தில் குத்தியதால் அவன் பயமடைந்தான். ஆனாலும் அவன் மனம் திரும்பவில்லை.
அப்போஸ்தலரான பவுல் அடிகள் மேல் யூதர்கள் குற்றம் சுமத்தி அந்தக் குற்றங்களை விசாரிப்பதற்காக அவர் உரோமையில் கைதியாக இருந்தபோது அவரிடம் பேலிக்ஸ் ராஜா விசாரணை செய்தான். அவனுக்கு பவுல் அப்போஸ்தலரது பதில்களும் மறுமொழிகளும் சுவிசேஷ அறிவிப்புகளாகவே வெளிவந்தன. பவுல் பேசிய பேச்சுக்களைக் கேட்டு பேலிக்ஸ் பயமடைந்தான் என்று இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது.
ஆதவன் வேதாகம தியானங்களைச் சில கிறிஸ்தவ ஊழியர்கள் விரும்புவதில்லை. சிலர் ஏதாவது தேவையற்ற விமரிசனங்களைச் சொல்வார்கள். ஆனால் நான் கவனித்த ஒரு விசயம், குறைகூறும் இந்த ஒருசில ஊழியர்கள் வாழ்க்கையில் நற்சாட்சி இல்லாதவர்கள். தனது மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொரு பெண்ணை மனைவிபோல சேர்த்துவைத்துக்கொண்டு வாழ்பவர், நிதி மோசடி வழக்குகளில் சிக்கி நீதிமற்றத்துக்கும் வீட்டுக்குமாக அலைபவர், ரியல் எஸ்டேட் நடத்துவதாகக் விளம்பரம் செய்து பொய்களைக்கூறி ஒன்றுக்கும் உதவாத நிலத்தை அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்.... இவர்களே.
இதுபோன்ற செயல்பாடுகளைக் கொண்டவர்களுக்கு வேத வசனங்கள் கசக்கவேச் செய்யும். எப்போதும் ஆசீவாத வசனங்களையே கூறிக்கொண்டிருந்தால் பாராட்டுவார்கள். அப்போஸ்தலரான பவுல் பேசிய வார்த்தைகள் இதுபோலவே பேலிக்ஸ் ராஜாவை அச்சுறுத்தின. எனவே அவன், "நீ போகலாம், எனக்குச் சமயம் கிடைக்கும்போது உன்னை அழைப்பேன்" என்று கூறி அனுப்பிவிட்டான்.
அன்பானவர்களே, தேவன் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புவதால் பொறுமையோடு காத்திருந்து பல்வேறு விதமாகத் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அந்தச் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்தாமல் பேலிக்ஸ் ராஜாவைப்போல, "எனக்குச் சமயம் கிடைக்கும்போது பேசலாம், நீ போ " என உதறிவிட்டோமானால் இரட்சிப்பு அனுபவத்தை நாம் பெறமுடியாது. "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." (2 கொரிந்தியர் 6: 2)
குறிப்பிட்ட சில வேத வசனங்களைக் கேட்கும்போது நமக்கு எரிச்சலோ, கோபமோ பயமோ வருகின்றது என்றால் நம்மிடம் ஏதோ குறை இருக்கின்றது என்று பொருள். வசனத்தின்மேலோ, அதனைக் கூறுபவர் மேலோ கோபம் கொள்ளாமல் நம்மை ஆராய்ந்துபார்த்து தேவனிடம் மன்னிப்புக் கேட்டு மனம் திரும்புவோம்.
Scripture Meditation – No. 1,553
AATHAVAN 💚 May
08, 2025. 💚
Thursday
"And as he reasoned of
righteousness, temperance, and judgment to come, Felix trembled, and answered,
Go thy way for this time; when I have a convenient season, I will call for
thee." (Acts 24:25, KJV)
Many people do not like to
confront the truth directly. Governor Felix was one such person. When Paul
spoke to him about righteousness, temperance, and the judgment to come, the
Scripture says that Felix trembled. What was the reason for his fear? It suggests
that he lacked the qualities of righteousness and temperance.
In general, people do not
like their faults, shortcomings, or sins to be pointed out—especially those in
authority, who cannot tolerate correction from others. However, those who
accept such correction have a path to transform their lives. Paul's words, though
he was a prisoner under investigation, pierced Felix's heart and caused him to
fear—but still, he did not repent.
The apostle Paul was falsely
accused by the Jews and held as a prisoner in Rome for investigation. During
this time, Felix the governor questioned him. Paul's responses were not mere
legal defences; they were filled with gospel truth. Today’s verse clearly
states that Felix trembled when he heard Paul's words.
Some Christian ministers
dislike ‘AATHAVAN’ Scripture meditations. Some even offer unwarranted
criticism. But one thing I’ve observed is that those who often criticize these
meditations usually lack a good testimony in their personal lives. Some live
with another woman after abandoning their wife, some are entangled in financial
fraud cases and are constantly running between the courts and their homes, and
some deceive people by claiming to sell real estate and vanish after collecting
money without delivering any property. These are the ones who criticize.
People engaged in such
sinful behaviours naturally feel disturbed when they hear certain Scripture
verses. They would happily applaud only if blessings were preached all the
time. Likewise, Paul’s words troubled Governor Felix. That’s why he said, “Go
thy way for this time; when I have a convenient season, I will call for thee.”
Dear beloved, God desires
that everyone should repent. That’s why He patiently reveals Himself to people
in various ways. If, like Felix, we push these divine opportunities away by
saying, “We can talk later when I have time,” we will miss the
experience of salvation.
"(For he saith, I have heard thee in a time accepted, and in the day of
salvation have I succoured thee: behold, now is the accepted time; behold, now
is the day of salvation.)" (2 Corinthians 6:2, KJV)
If certain Bible verses make
us feel irritated, angry, or fearful, it means there is something wrong in us.
Instead of being angry at the verse or the person delivering it, let us examine
ourselves, seek God's forgiveness, and turn our hearts toward Him.

No comments:
Post a Comment