DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, May 04, 2025

🍒Meditation verse - யோவான் 15: 4 / John 15:4

 வேதாகமத் தியானம் - எண்:- 1,551

'ஆதவன்' 💚மே 06, 2025. 💚செவ்வாய்க்கிழமை


"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15: 4)

ஆவிக்குரிய வாழ்வில் கிறிஸ்துவுடனான ஐக்கியத்தில் நாம் வளரவேண்டியது அவசியம். நமது பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டும் போதாது நாம் இறுதிவரை அவரோடு நிலைத்திருக்கவேண்டியது அவசியம். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த ஐக்கியத்தைத் திராட்சைச் செடியுடன் இணைந்திருக்கும் கொடிக்கு ஒப்பிடுகின்றார். நிலத்திலிருந்து வேர்களினால் உறிஞ்சப்படும்  தாவரங்களுக்குத் தேவையான தண்ணீரும் சத்துக்களும் செடியின் தண்டுப்பகுதி வழியாகவே அதன் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கின்றன. எனவே கொடிகள் தண்டுப்பகுதியுடன் இணைந்திருக்காவிட்டால் உலர்ந்துபோயிடும். இதுபோலவே, கிறிஸ்து எனும் தண்டுடன் நாம் இணைந்திருக்காவிட்டால் உலர்ந்துபோய்விடுவோம். 

மட்டுமல்ல, தாவரங்கள் கனிகொடுக்கவேண்டுமானால் நல்ல சத்துக்கள் தேவை. அந்தச் சத்துக்களும் தண்டுவழியாகவே அனைத்துப்பாகங்களுக்கும் செல்கின்றன. இன்று கிறிஸ்துவோடு எந்தத் தனிப்பட்டத் தொடர்பும் ஐக்கியமும் இல்லாத பலரும் கிறிஸ்தவர்கள் என்று பெயரளவில் கூறிக்கொள்கின்றனர். கிறிஸ்தவ  ஊழியர்களில் பலருக்கும்கூட இந்த தேவ ஐக்கியம் இல்லை. இதனால் இவர்கள் கனிகொடுக்கமுடியவில்லை. இவர்களது  சாட்சிக்கேடான வாழ்க்கை கிறிஸ்தவத்துக்கு அவப்பெயரைக் கொடுப்பதாகவும்  உள்ளது. 

நாம் சிறிதளவு கனிகொடுப்பவர்களாய் மட்டுமல்ல, அதிக கனி கொடுக்கின்றவர்களாய் மாறவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். எனவே அவர் தன்னோடு ஐக்கியமுள்ளவர்களாய் வாழும் விசுவாசிகளுக்குத் துன்பங்களைக் கொடுக்கின்றார். ஏனெனில் அவர் அவர்களை மேலும் சுத்தம்பண்ண விரும்புவதால்தான். "என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." ( யோவான் 15: 2) என்றார் இயேசு கிறிஸ்து. 

கனிகொடுக்காமல் தோட்டத்தில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் மரங்களை வெட்டி அகற்றும் விவசாயிகள் தங்களது பழ மரங்கள் அதிகமான கனிகளைக் கொடுக்கவேண்டுமென்பதற்காக தேவையற்ற கிளைகளை கழித்தும்  போடுவார்கள். இதனை கவ்வாத்து (pruning) என்பார்கள். இப்படி மரங்களின் சில கிளைகளை வெட்டி அகற்றும்போது மரங்களுக்கு வலியுண்டாகவே செய்யும். ஆனால் அந்த வலி பிற்பாடு அதிகக் கனிகளை அவை கொடுப்பதற்கு உதவியாக இருக்கும்.  நமது தேவனும் கனிகொடுக்காதவர்களை அகற்றி கனிகொடுக்கும் விசுவாசிகளைச்   சிறு வலிகளைக்கொடுத்து சுத்தம்பண்ணுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திருப்பதுபோல நாம் கிறிஸ்துவில் நிலைத்திருந்தால் மட்டுமே கனிகொடுக்க முடியும். மட்டுமல்ல, கனிகொடுக்கும் நாம் அதிகமான கனிகளையும் கொடுக்கவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். எனவே, தேவனில் நிலைத்திருப்பது மட்டுமல்ல, அவர் கொடுக்கும் சிறுசிறு துன்பங்களையும் சகித்து நாம் வாழவேண்டியது அவசியம். இத்தகையத் துன்பங்களைக் கண்டு நாம் கிறிஸ்துவைவிட்டு விலகிச் சென்றிடாமல் இருக்கவேண்டுமென்று அவர் விரும்புகின்றார்.   

எனவேதான் இன்றைய தியான வசனத்தில் "நீங்கள் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்" என்று தன்னில் நிலைத்திருக்குமாறு கிறிஸ்து நம்மை எச்சரித்து அறிவுறுத்துகின்றார்.  துன்பங்களைச் சகித்து, வழிகளைத் தாங்கி  அவரில் நிலைத்து வாழ்வோம். இதனையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                         

Scripture Meditation – No: 1,551
AATHAVAN
💚
May 06, 2025 – Tuesday

“Abide in me, and I in you. As the branch cannot bear fruit of itself, except it abide in the vine; no more can ye, except ye abide in me.” (John 15:4, KJV) 

In our spiritual life, it is essential that we grow in union with Christ. It is not enough that our sins are forgiven; we must remain steadfast in Him until the end.

Our Lord Jesus Christ compares this union to a branch that is connected to the vine. Just as water and nutrients absorbed from the soil reach all parts of the plant through the stem, so also, if the branches are not connected to the stem, they will wither away. Likewise, if we are not connected to Christ—the true Vine—we too will wither spiritually.

Furthermore, in order for a plant to bear fruit, it needs proper nourishment. This nourishment is distributed to all parts of the plant through the stem. Today, many who claim to be Christians in name have no personal connection or union with Christ. Sadly, this is true even among some Christian ministers. As a result, they are unable to bear fruit. Their unfruitful and unworthy lives bring reproach to the name of Christ.

God desires not merely that we bear some fruit, but that we bear much fruit. Therefore, He allows suffering in the lives of believers who remain united with Him—because He wants to purge and purify them further.

“Every branch in me that beareth not fruit he taketh away: and every branch that beareth fruit, he purgeth it, that it may bring forth more fruit.” (John 15:2, KJV)

Just as farmers cut down trees that only occupy space without yielding fruit, they also prune their fruit trees by cutting off unnecessary branches to make them more fruitful. This process is called pruning. Though pruning causes pain to the tree, it eventually leads to greater fruitfulness. Similarly, God removes unfruitful people and allows minor afflictions to purify fruitful believers.

Yes, beloved, just as a branch must remain in the vine to bear fruit, we must remain in Christ to be fruitful. Not only that, God desires that we bear more fruit. Therefore, it is essential that we remain in Him and endure the small sufferings He allows in our lives. We must not let these sufferings cause us to depart from Christ. That is not His will.

Hence, in today’s meditation verse, Christ warns and instructs us saying,

“Ye cannot bear fruit, except ye abide in me.” (John 15:4, KJV)

Let us endure hardships, stay on the narrow path, and abide in Him. This is what He expects from us.

God’s Message: Bro. M. Geo Prakash         

No comments: