DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, May 17, 2025

🍒Meditation verse - 1 யோவான் 1 : 3 / 1 John 1:3

 வேதாகமத் தியானம் - எண்:- 1,564

'ஆதவன்' 💚மே 20, 2025. 💚 செவ்வாய்க்கிழமை


"நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." (1 யோவான்  1 : 3)

ஆவிக்குரிய வாழ்வில் ஐக்கியம் (Fellowship) என்பது மிக அவசியம்.  அதாவது ஒரு உறவு. இன்று கிறிஸ்தவர்களில் பலரும் சபை ஆராதனையில் கலந்துகொள்வதும் சபையில் சென்று ஆராதிப்பதும், சக விசுவாசிகளுடன் உறவுடன் வாழ்வதும் மட்டுமே ஐக்கியம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். 

ஆனால் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், நாங்கள் பிதாவோடும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஐக்கியம் கொண்டிருக்கின்றோம்.   நீங்களும்  அதுபோல     பிதாவோடும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம் என்கின்றார். அதாவது சபையில் சக விசுவாசிகளோடு ஐக்கியம் கொள்ளுமுன் முதலில் நாம் தேவனோடு ஐக்கியமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். 

இரண்டு நாட்களுக்குமுன் ஒரு சிறிய டீ கடையில் டீ பருகிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஆவிக்குரிய சபைக்குச் செல்லும் சபை வைராக்கியம் கொண்ட ஒரு விசுவாசி, "சபை ஐக்கியம்தான் பிரதர் முக்கியம், நீங்க எந்த சபைக்கு ஆராதனைக்குப் போகிறீர்கள்?" என்று என்னிடம் கேட்டார்.  நான் அவரது கேள்விக்குப் பதில் சொல்லியபின் சிறிதுநேரம் பல காரியங்களைப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இன்னொரு சபைக்குச் செல்லும் நபர் ஒருவர் அங்கு வரவே அவரிடம், "பவுல் அப்போஸ்தலர் விக்கிரக ஆராதனைக்காரர்களோடு அமர்ந்து உண்ணவும் கூடாது என்று சொல்லியிருக்கிறார் உங்களுக்குத் தெரியுமா?" என்றார் சிறிது குத்தலாக. 

புதிதாய் வந்த நபருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் அந்த ஆவிக்குரிய நபரிடம், "உன் வறட்டு பெந்தேகோஸ்தே போதனையை எத்தனை நாட்களாகச்  சொல்லிக்கொண்டிருப்பாய்? விக்கிரக ஆராதனைக்காரர்களோடு அமர்ந்து உண்ணவும் கூடாது என்று கூறுகின்றாயே, நீ இப்போது நின்று டீ குடிக்கும் கடை யாருடையது என்று தெரியுமா? உனக்கு இந்த டீயைத் தயாரித்து தந்தது யார் என்று தெரியுமா?" என்று பலத்த சத்தமிட்டு கூறவே அந்த பெந்தகொஸ்தே நபர் நில்லாமல் ஓடிவிட்டார்.   ஆம் அது ஒரு இந்து சகோதரருடைய டீ கடை.

ஆம் அன்பானவர்களே, பிதாவோடும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஐக்கியமுள்ளவன் சக மனிதர்களோடும் ஐக்கியமாக வாழ்வான். எந்த மனித  ஐக்கியமுமில்லாமல் வாழ்ந்துகொண்டு வறட்டு வேதாந்தம் பேசுவது அறிவீனமல்லவா? இந்த உலகத்தில் நாம் பழகும் அல்லது நமக்கு உதவும் அனைவரும் மெய் தேவனை அறிந்தவர்களாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர்களைப் பகைத்து நாம் தனியாக வாழமுடியாது. ஒவ்வொரு இடத்திலும் நாம் சந்திக்கும் மனிதர்கள் எந்த மதம் ஜாதி என்று பார்த்துக்கொண்டு நாம் வாழமுடியாது.  பிதாவோடும் குமாரனோடும் மெய்யான ஐக்கியமுள்ளவன் இப்படி வேறுபாடு பார்த்துக் கொண்டிருக்கமாட்டான்.  

"ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே." (1 கொரிந்தியர் 5: 10) என்று எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல்.

ஆம், தேவன் மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டுவதில்லை. அவரை வழிபடும் நாமும் வேற்றுமை பாராட்டாமல் அனைவரையும் அன்புசெய்யவே அழைக்கப்பட்டுள்ளோம். "எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்." ( எபேசியர் 4: 6) ("One God and Father of all, who is above all, and through all, and in you all." (Ephesians 4: 6)

ஆம் அன்பானவர்களே, நமது ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது என்பது உண்மையானால் நாம் மற்றவர்களோடும் ஐக்கியமாக இருப்போம். அந்த ஐக்கியம் இல்லாதவன் பிதாவையும் குமாரனையும் அறியாதவன். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                          

Scripture Meditation – No: 1,564

AATHAVAN 💚 May 20, 2025 💚 Tuesday

"That which we have seen and heard declare we unto you, that ye also may have fellowship with us: and truly our fellowship is with the Father, and with his Son Jesus Christ."— 1 John 1:3 (KJV)

Fellowship in the spiritual life is vitally important. It is, in essence, a relationship. Today, many Christians consider fellowship to mean only participating in church worship services, attending church, or maintaining relationships with fellow believers.

However, in today’s meditation verse, the apostle John says, “Truly our fellowship is with the Father, and with his Son Jesus Christ.” He goes on to say, “That ye also may have fellowship with us,” meaning: before we enjoy fellowship with fellow believers in the church, it is essential that we first have fellowship with God.

A couple of days ago, while sipping tea in a small tea shop, a believer with great zeal for his church approached me and asked, “Brother, church fellowship is most important. Which church do you attend for worship?” After I responded to his question, he continued conversing about various topics.

At that moment, another believer who attends a different church arrived. Immediately, the first believer turned to him and said, rather pointedly, “Do you know that the Apostle Paul said we should not eat with idolaters?” (cf. 1 Corinthians 5:11).

This offended the newly arrived person, and he replied sharply, “How long will you keep preaching your dry Pentecostal doctrines? You say we shouldn't eat with idolaters—do you know who owns this tea shop you're standing in? Do you know who prepared and served you this tea?” He raised his voice, and the Pentecostal brother, unable to respond, quietly left the place. Yes, the tea shop was owned by a Hindu brother.

Beloved, a person who truly has fellowship with the Father and with His Son Jesus Christ will live in fellowship with fellow human beings. Isn’t it foolish to preach doctrine without any human fellowship? In this world, not everyone we interact with or who helps us may know the true God. Yet we cannot live isolated from others by enmity. It is impractical to classify people by religion or caste in every situation we face.

He who has genuine fellowship with the Father and the Son will not make such distinctions.

The Apostle Paul wrote: "Yet not altogether with the fornicators of this world, or with the covetous, or extortioners, or with idolaters; for then must ye needs go out of the world." — 1 Corinthians 5:10 (KJV)

Yes, God does not show partiality among people. We, who worship Him, are also called to love everyone without discrimination. "One God and Father of all, who is above all, and through all, and in you all." — Ephesians 4:6 (KJV)

So, beloved, if our fellowship is truly with the Father and with His Son Jesus Christ, then we will be in fellowship with others as well. Whoever lacks that fellowship with others does not truly know the Father or the Son.

Gospel Message by: Bro. M. Geo Prakash           

No comments: