வேதாகமத் தியானம் - எண்:- 1,547
'ஆதவன்' 💚மே 02, 2025. 💚வெள்ளிக்கிழமை
"மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது." ( ஏசாயா 1: 3)
ஆதிகாலமுதல் தேவன் தன்னை இஸ்ரவேல் மக்களுக்குப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தினார். எத்தனையோ தீர்க்கத்தரசிகள், பரிசுத்தவான்கள் மூலம் தன்னைப்பற்றி அறிவித்து பல வல்ல செயல்களால் அவர்கள் கூறியவற்றை உறுதிப்படுத்தியும் வந்தார். மக்கள் தொடர்ந்து பாவம் செய்தபோது அவர்களுக்குத் தண்டனையாக அவர்களை பல்வேறு இராஜாக்களுக்கு அடிமைப்படுத்தினார். பின்னர் அந்த மக்கள் தங்கள் பாவங்களுக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கேட்டபோதெல்லாம் அவர்களை விடுவித்தார்.
ஆனாலும் தொடர்ந்து அவர்கள் தேவனை மறுதலித்துத் தங்கள் பொல்லாத வழிகளிலேயே நடந்தார்கள். இதனை ஏசாயா இன்றைய தியான வசனத்துக்கு அடுத்த வசனமாகக் கூறுகின்றார், "ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்."( ஏசாயா 1: 4) என்று.
ஒரு மாடுகூடத் தன்னை வளர்க்கும் எஜமானன் என்ன விரும்புகின்றான் என்பதனை அறிந்திருக்கின்றது. அதுபோல கழுதை தனது எஜமானின் விருப்பத்தையும் தனக்காக எஜமான் ஏற்பாடு செய்துள்ள இடத்தையும் தனக்குமுன் தீவனத் தொட்டியில் வைக்கப்படும் உணவையும் அறிந்து குறிப்பிட்ட சமயத்தில் அங்குவந்து சேர்கின்றது. ஆனால் இந்த மக்களுக்கு நான் எத்தனையோ நன்மைகளைச் செய்திருந்தும் இவர்கள் என்னை அறியாமல் இருக்கின்றார்களே என்று மனம் வருந்திக் கூறுகின்றார் தேவனாகிய கர்த்தர்.
தேவனை அறிவது என்பது வெறுமனே ஆராதனை செய்வதல்ல, அவரோடு ஐக்கியத்தில் வாழ்வது; அதன்மூலம் அவரது சித்தத்தை அறிந்து நிறைவேற்றுவது. தனிப்பட்ட விதத்தில் நாம் அவரோடு ஒரு உறவில் வாழும்போதுதான் நாம் தேவனுக்கேற்ற செயல்களைச் செய்து வாழமுடியும். தேவனை நாம் அறியவில்லையானால் வெறுமனே ஆலயங்களுக்கு வந்து கூடி கூப்பாடு போட்டுவிட்டுக் கலைந்துசெல்கின்றவர்களாகவே இருப்போம். அப்படி தேவனை அறியாமல் வாழ்வோமானால் கேடான சிந்தையும் செயலும் நம்மைவிட்டு மாறாது.
இதனையே அப்போஸ்தலரான பவுல், "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1: 28) என்று கூறுகின்றார். தொடர்ந்து கேடான சிந்தை நம்மை எத்தகைய பாவ வாழ்க்கைக்குள் கொண்டுசெல்லும் என்பதனையும் பட்டியலிட்டுக் கூறுகின்றார்.
ஐந்தறிவுள்ள மாடும், கழுதையும் தங்களது எஜமானனையும் அவனது சித்தத்தையும் அறிந்து செயல்படும்போது ஆறறிவுள்ள மனிதர்களாகிய நாம் தேவ சித்தத்தை அறிந்து அவருக்கேற்ற வாழ்வு வாழவேண்டாமா?
ஆம் அன்பானவர்களே, "இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது." என்று மனம் வருந்திக் கூறும் தேவனது வார்த்தைகளை மனதில் கொள்ளுவோம். அறிவில்லாமலும் உணர்வில்லாமலும் வாழாமல் நம்மை அவருக்கு முற்றிலும் ஒப்புக்கொடுப்போம். அவரது பரிசுத்த இரத்தம் நம்மைக் கழுவித் தூய்மைப்படுத்திட பாவங்களை அவரிடம் அறிக்கையிடுவோம். பாவங்கள் கழுவப்படும்போது மட்டுமே அவரோடு நமக்கு ஐக்கியம் உருவாகும். அப்போதுதான் நாம் அவரது சித்தம் செய்பவர்களாக இந்த உலகினில் வாழமுடியும். ஆம், "ஆண்டவரே நான் மாடோ கழுதையோ அல்ல, உமது பிள்ளை" என்று அவரிடம் உறுதியுடன் கூறுவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture
Meditation – No. 1,547
‘AATHAVAN’ 💚 May 02, 2025 – Friday
“The
ox knoweth his owner, and the ass his master’s crib: but Israel doth not know,
my people doth not consider.” — Isaiah 1:3 (KJV)
From
ancient times, God revealed Himself to the people of Israel in various ways.
Through many prophets and saints, He made Himself known and confirmed their
words by mighty deeds. When the people continued in sin, He chastened them by
allowing them to be subjected to various kings. Yet, whenever they repented and
sought forgiveness, He delivered them.
However,
they persistently rejected God and continued in their evil ways. The prophet
Isaiah follows today’s meditation verse with a powerful rebuke:
“Ah
sinful nation, a people laden with iniquity, a seed of evildoers, children that
are corrupters: they have forsaken the Lord, they have provoked the Holy One of
Israel unto anger, they are gone away backward.” — Isaiah 1:4 (KJV)
Even
an ox knows the will of its master. Likewise, a donkey recognizes its master's
intentions and understands where its food is placed; it comes at the appointed
time to eat. But God laments that despite all the good He has done for His people;
they still do not know Him.
To
know God is not merely to offer worship, but to live in union with Him—knowing
and fulfilling His will. Only when we walk in a personal relationship with Him
can we live lives that are pleasing to God. If we do not know Him, we will be
like those who simply attend church, shout praises, and disperse without
transformation. A life lived without truly knowing God will never be free from
corrupt thoughts and deeds.
The
apostle Paul affirms this: “And even as they did not like to retain God in
their knowledge, God gave them over to a reprobate mind, to do those things
which are not convenient.” — Romans 1:28 (KJV)
He
then lists the various sins to which such a corrupt mind leads.
If
animals with only five senses can understand their master's will, how much more
should we—who are created with intelligence and reasoning—strive to know God’s
will and live accordingly?
Yes,
beloved, let us take to heart the Lord’s sorrowful words: “Israel doth not
know, my people doth not consider.” Let us not live without knowledge or
understanding. Let us surrender ourselves entirely to Him. Let us confess our
sins so that His precious blood may cleanse and sanctify us. Only when our sins
are washed away can we have fellowship with Him—and only then can we do His
will on this earth.
Let
us boldly say to Him: "Lord, I am neither an ox nor an ass—I am Your
child."
God’s
Message by: Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment