DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, May 25, 2025

🍒Meditation verse - ரோமர் 1: 16 / Romans 1:16

 வேதாகமத் தியானம் - எண்:- 1,572

'ஆதவன்' 💚மே 28, 2025. 💚 புதன்கிழமை


"கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது." ( ரோமர் 1: 16)

நாம் கிறிஸ்துவை அறியாத பெயர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்த வாழ்க்கைக்கும் கிறிஸ்துவை அறிந்தபின்னர் நாம் வாழும் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அது நம்முடன் வாழ்ந்த மக்களுக்கு விசித்திரமாகத் தெரியும்.  அவர்கள் நம்மைக் கேலிகூடச் செய்யலாம். "என்ன இவன் / இவள் இத்தனைநாள் இல்லாதவகையில் திடீரென்று வித்தியாச காரியங்களைச் செய்கிறான்/ள்" என்று எண்ணுவார்கள். 

இதுபோலவே, பவுல் அப்போஸ்தலர் கிறிஸ்துவைப் போதித்த சீடர்களையும் கிறிஸ்துவை விசுவாசித்த விசுவாசிகளையும் துன்புறுத்தியவர். சபைகளைப் பாழாக்கிக்கொண்டிருந்தவர். "சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8: 3) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் இப்போது அந்தப் பவுல் தலைகீழாக மாறிவிட்டார்.  பவுலோடு செயல்பட்ட அவரது பழைய நண்பர்களுக்கு பவுலின் இந்த மனமாற்றம் வேடிக்கையாக இருந்தது. அவர்கள் அவரைக் கேலி செய்திருக்கலாம். ஆனால் அவர் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பெலனைக் கண்டுகொண்டவர். எனவேதான் கூறுகின்றார், "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்;  விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது." என்று. 

இதே அனுபவம் எனது வாழ்க்கையிலும் நடந்தது. இடதுசாரி கம்யூனிச  சித்தாந்தத்துக்கு அடிமையாகி இடதுசாரி மாதப் பத்திரிகையில் பணியாற்றியவன்  நான். அப்போது கிறிஸ்தவ ஊழியர்களை "நச்சு வியாபாரிகள்" என்று கிண்டல்செய்து கதையொன்று எழுதியிருந்தேன்.  அது பலரின் பாராட்டினைப் பெற்றிருந்தது. ஆனால் நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபின் எனது பழைய நண்பர்கள், "ஜியோ, நீயும் நஞ்சு விற்க ஆரம்பித்துவிட்டாயா?" என்று  கிண்டல் செய்தனர். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பலம் இதுதான். இன்று நாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தால் மாறுதலடைந்த பல்வேறு சாட்சிகளைக் கேட்கமுடிகின்றது. கிறிஸ்துவின் ஊழியர்களைக் கொலைசெய்தவர்கள், கிறிஸ்தவ ஆலயங்களைச்  சேதப்படுத்தியவர்கள், கிறிஸ்துவின் நற்செய்தியாளர்களைத் தங்கள் கிராமத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து விரட்டியவர்கள் என்று பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றனர். 

பெயரளவுக்கு கிறிஸ்த வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இன்றைய தியான வசனத்தை அப்போஸ்தலரான பவுல் எழுதிய மெய்யான பொருள் புரியாமலிருக்கலாம். "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து ஏன் வெட்கப்படவேண்டும்?" என்று அவர்கள் எண்ணலாம். ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுவது அவரது உள்ளத்தின் வேதனையின் குரல். கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்பட்டு பின்னர் அவரது அன்பால் ஈர்க்கப்பட்டு நற்செய்தியை அறிவிக்கும்போது கிறிஸ்துவின் முகத்தைப்பார்த்து ஜெபிக்கவே வெட்கமாக இருக்காதா? ஆனால் நான் கிறிஸ்துவின் பிள்ளை ஆகிவிட்டதால் இனி அப்படி வெட்கபடமாட்டேன் என்கின்றார் பவுல்.

நமது பாவங்கள் மெய்யாகவே மன்னிக்கப்பட்டு கிறிஸ்துவை நாம் அறிந்துகொண்டோமானால் நமது பழைய பாவ வாழ்க்கை நமக்கு வெட்கத்தை உண்டாக்கும். நண்பர்கள் கேலி செய்யலாம். ஆனால் கிறிஸ்து நமது தகப்பனும் தாயும், நண்பனுமாக மாறிவிடுவதால் அந்த வெட்கத்தை நாம் தொடரவிடமாட்டோம். அப்போது நாமும் "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்;  விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது." என்று உணர்ந்து அவரது நற்செய்தியை மற்றவர்களுக்கும் அறிவிப்போம். அது மற்றவர்களும் கிறிஸ்துவை அறிந்திட தேவ பெலனுள்ளதாக இருக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                     

Scripture Meditation – No: 1,572

AATHAVAN 💚 May 28, 2025 – Wednesday

“For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to everyone that believeth; to the Jew first, and also to the Greek.” — Romans 1:16 (KJV)

There is a vast difference between the life we lived as nominal Christians—without truly knowing Christ—and the life we now live after coming to know Him. This transformation is often evident to those around us. They may find it strange, and even mock us, wondering: “What happened to him/her all of a sudden, acting so differently now?”

Similarly, Apostle Paul was once a persecutor of Christ’s disciples and believers. He wreaked havoc on the Church. “As for Saul, he made havock of the church, entering into every house, and haling men and women committed them to prison.” Acts 8:3 (KJV)

But now, that same Paul has undergone a complete transformation. To his former companions, this change must have seemed absurd. They may have ridiculed him. But Paul had encountered the power of the gospel of Christ. That is why he declared boldly:

“For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to everyone that believeth.”

I too have experienced such a transformation in my life. I was once a staunch leftist, deeply rooted in communist ideology, and worked for a leftist monthly magazine. At that time, I even mocked Christian evangelists by writing a story that labelled them as "poison peddlers." That piece was widely praised by many.

But after accepting Christ, my old friends began mocking me, saying, “Geo, have you also started selling poison now?”

Yes, beloved, this is the true power of the gospel of Christ. Today, we hear many such testimonies of transformed lives through the gospel:

  • Those who once murdered Christian workers,
  • Those who destroyed churches,
  • Those who chased evangelists out of their villages...

...now live as followers of Christ.

Those who live only in name as Christians may not fully grasp the depth of today’s meditation verse written by the Apostle Paul. They may wonder: “Why should anyone be ashamed of the gospel of Christ?” But Paul’s words come from a heart deeply wounded by his past. After opposing Christ and then being drawn by His love to proclaim the gospel, would it not be shameful to even look upon Christ’s face? Yet Paul says with confidence: “I am now a child of Christ; therefore, I will no longer be ashamed.”

If we truly understand that our sins are forgiven and have come to know Christ, then our former sinful life will bring a sense of shame. Friends may mock us. But Christ becomes our Father, our Mother, and our Friend—and that shame will no longer have hold on us. Then we too will boldly proclaim:

“For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to everyone that believeth.”

And through us, others too may come to know Christ—by the same power of God unto salvation.

Message by: Bro. M. Geo Prakash

No comments: