வேதாகமத் தியானம் - எண்:- 1,555
நாம் ஆலய காரியங்களுக்கென்றும் நமது ஊரின் நன்மைக்காகவும் பலச் செயல்கள் செய்யலாம். அதிகமான பணத்தை ஆலயங்களுக்குச் செலவழிக்கலாம்; அல்லது தர்ம காரியங்கள் அதிகம் செய்யலாம். ஆனால் இவை அனைத்தையுமே எதற்காகச் செய்கின்றோம் என்பதே முக்கியம். தேவன் நாம் செய்யும் காரியங்களையும் அவற்றைச் செய்யும் நோக்கத்தையும் அறிவார். உள்ளான அன்புடன் நாம் செய்வது எது, பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்று தற்பெருமைக்காகச் செய்வது எது என்தையும் தேவன் அறிவார்.
பிறர் அறியவேண்டும், நம்மை மதிக்கவேண்டும் எனும் எண்ணத்துடன் செய்யும் காரியங்கள் உண்மையான அன்புடன் செய்பவையல்ல. அப்படிச் செய்வதால், நம்மை அறியாமலே ஒரு பெருமை நமக்குள் வந்துவிடுகின்றது. இதனை தேவன் விரும்புவதில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது." ( மத்தேயு 6: 3) என்று. தர்மம் செய்யும்போது மட்டுமல்ல, என்ன நல்ல செயலை நாம் செய்தாலும் இப்படியே இருக்கவேண்டியது முக்கியம்.
இதுபோலவே, சிலர் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்தை அல்லது கிறிஸ்துவைத் தாங்கள் நம்புவதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதுண்டு. வேலை பார்க்கும் இடங்களில் பிற மத நண்பர்கள் அதிகம் பணிசெய்யும்போது அவர்கள் நம்மைத் தவறாகக் கருதுவர் என எண்ணி கிறிஸ்தவ விசுவாசத்துக்கு முரணான காரியங்களைச் செய்து அவர்களோடு பல காரியங்களில் ஒத்துப்போவது சிலரது பழக்கம். இத்தகைய மனிதர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையைத் தேடுபவர்கள்.
யூதர்களில் பலர் இயேசுவைக் கிறிஸ்து என்று நம்பினாலும் அதனை வெளிப்படையாக அறிக்கையிடத் தயங்கினார்கள். காரணம், யூதர்கள் தங்களைக் கொலைசெய்துவிடுவார்கள் என்று அவர்கள் பயந்தனர். சிலர் இரகசிய சீடர்களாக இருந்தனர். ஆனால் பலர் கிறிஸ்துவை மேசியா என்று கண்டுகொண்டாலும் அதனை வெளிப்படையாக அறிக்கையிடத் தயங்கினர். இத்தகைய மனிதர்களைப் பார்த்துதான் இயேசு கிறிஸ்து, "அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்." (யோவான் -12:43) என்று குறிப்பிடுகின்றார்.
இதுபோலவே இன்று சுய மகிமையைத் தேடும் கிறிஸ்தவ ஊழியர்கள் நாட்டில் பெருகியுள்ளனர். கிறிஸ்துவை அறிவிப்பதைவிடத் தங்களது பெருமைகளை மக்கள் மத்தியில் பறைசாற்றுபவர்களாக வாழ்கின்றனர். இத்தகைய ஊழியர்களும் தேவனால் வரும் மகிமையைவிட மனிதர்களால் வரும் மகிமையைத் தேடுபவர்களே. ஆனால் அப்போஸ்தலரான பவுல் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று குறிப்பிடுகின்றார். "உங்களிடத்திலாவது,. மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை." (1 தெசலோனிக்கேயர் 2: 6) என்கின்றார் அவர்.
அன்பானவர்களே, நமது செயல்கள் அனைத்தும் தேவனை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டுமேத்தவிர நம்மை விளம்பரப்படுத்துவதற்கான சுயமகிமைக்கானவைகளாக இருக்கக்கூடாது. இப்படிச் சுயமகிமையைத் தேடுபவர்களாக நாம் வாழ்வோமானால் நாம் கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல. எனவே நம்மையே மறைத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடும்போம்.
யோவான் ஸ்நானகன் கூறுவதுபோல, "அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்." ( யோவான் 3: 30) என்று வாழ்பவர்களே மெய்யான ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள்.
Scripture Meditation - No. 1,555
AATHAVAN 💚 May
10, 2025. 💚
Saturday
“For they loved the praise of men more than the praise of God.” (John 12:43, KJV)
We may do many good works for our church and for the welfare of our community. We might spend a lot of money for church ministries or engage in various charitable deeds. But what truly matters is why we do these things. God not only sees our actions but also knows the intent behind them. He discerns whether we do things out of genuine love or out of pride, seeking honour from others.
When we act with the desire to be recognized or honoured by others, those deeds are not done with sincere love. Without realizing it, a sense of pride begins to grow within us. God does not delight in such prideful motives. That is why Jesus Christ said, “But when thou doest alms, let not thy left hand know what thy right hand doeth.” (Matthew 6:3, KJV) This principle should not only apply to almsgiving but to every good deed we do.
Likewise, some people hesitate to openly declare their Christian faith. In workplaces where people of other religions dominate, they fear being misunderstood or rejected. To avoid discomfort, they compromise their faith and go along with things that contradict Christian values. These are the kind of people who seek the praise of men rather than the praise of God.
Even among the Jews, many believed that Jesus was the Christ but hesitated to confess it openly, fearing persecution from other Jews. Some were secret disciples, and though they recognized Jesus as the Messiah, they were unwilling to publicly declare their faith. Regarding such people, Jesus Christ said: “For they loved the praise of men more than the praise of God.” (John 12:43, KJV)
Today, we see a rise in Christian workers who seek self-glory rather than the glory of Christ. Instead of proclaiming Christ, they promote their own fame among the people. These are also those who desire human praise over divine approval. But the apostle Paul made a clear distinction:
“Nor of men sought we glory, neither of you, nor yet of others.” (1 Thessalonians 2:6, KJV)
Dearly beloved, let all our deeds be for the glory of God and not for our own self-promotion. If we live seeking our own glory, we have not truly known Christ. Let us surrender ourselves to live a life that hides self and magnifies the Lord.
As John the Baptist declared, “He must increase, but I must decrease.” (John 3:30, KJV) Those who live by this truth are the true spiritual Christians.
Divine Message by: Bro. M. Geo Prakash.jpeg)
No comments:
Post a Comment