வேதாகமத் தியானம் - எண்:- 1,559
'ஆதவன்' 💚மே 15, 2025. 💚 வியாழக்கிழமை
"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." ( ஏசாயா 26: 3)
உலகினில் மனிதர்கள் பெறவேண்டிய மிகப்பெரிய ஆசீர்வாதம் சமாதானம். இந்த சமாதானத்தை நாம் எந்த வழிகளில் அடைந்திட முயல்கின்றோம் என்பதே முக்கியம். இன்று சமாதானத்தைத் தேடி மனிதர்கள் பல்வேறு துன்மார்க்க வழிகளில் முயல்கின்றனர். மதுவைக் குடிப்பதால் சமாதானம் கிடைக்குமென்று எண்ணி மதுவுக்கே அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் அதிகம். இன்னும்பலர் திரைப்படங்கள், கேளிக்கைவிடுதிகளில் சாதானத்தைத் தேடி சற்றுநேர மனச்சமாதானத்தையும் பல்வேறு நோய்களையும் வருவித்துக்கொள்கின்றனர்.
ஆனால் அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே நமக்கு பூரண சமாதானத்தைக் கொடுக்க முடியும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுக்கும் சமாதானம் இந்த உலகம் கொடுக்கும் சமாதானத்தைப் போன்றதல்ல. "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக." ( யோவான் 14: 27) என்று அவர் கூறவில்லையா?
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு அளித்த முக்கிய செய்தியே சமாதானம்தான். "வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்." ( யோவான் 20: 19)
"மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்." ( யோவான் 20: 26)
இப்படி அனைவருக்கும் சமாதானமே தேவையாக இருப்பதால் அவர் தனது சீடர்களிடம் எந்த வீட்டினுள் நுழையும்போதும் சமாதான வாழ்த்தைக் கூறும்படிக் கட்டளையிட்டார். "ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.' ( மத்தேயு 10: 12, 13) என்றார்.
உலகப் பொருட்கள், செல்வங்களில் நாம் பெறும் சமாதானம் நமக்கு நிரந்தரமாக சாதானத்தைத் தருவதில்லை. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பலர் மனச் சமாதானமில்லாமல் தற்கொலை செய்து மடிவதை நாம் பத்திரிகைச் செய்திகளில் வாசிக்கின்றோமே? ஆம் அன்பானவர்களே, இதனால்தான் இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" என்று. எனவே மெய்யான சமாதானம் நமக்கும் நமது குடும்பத்துக்கும் வேண்டுமானால் நாம் சமாதானக் காரணரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.
நோய்கள், கடன்பாரங்கள், பண நெருக்கடிகள், எதிர்காலத்தைப்பற்றிய பயம், நமது குழந்தைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம் என நமக்குச் சமாதானக் குறைவைத் தரும் எந்த காரியமாக இருந்தாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அவற்றை விசுவாசத்துடன் ஒப்படைப்போம். நிச்சயமாக அவரது பிள்ளைகளை அவர் பூரண சாமாதானத்தால் காத்துக்கொள்வார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation – No: 1,559
AATHAVAN 💚 May
15, 2025 💚
Thursday
"Thou wilt keep him in
perfect peace, whose mind is stayed on thee: because he trusteth in thee."
(Isaiah 26:3, KJV)
One of the greatest
blessings a person can receive in this world is peace. The most
important question is: In what ways are we trying to attain this peace?
Today, in search of peace, people resort to various unrighteous means. Many
believe they can find peace through alcohol, only to become enslaved by it and
ruin their lives. Others seek temporary mental relief and peace in movies and
entertainment centres, which often leave them with more emotional and physical
afflictions.
But beloved, it is only the
Lord Jesus Christ who can give us perfect peace. The peace that Jesus
Christ gives is not like the peace the world offers. Didn’t He say:
"Peace I leave with
you, my peace I give unto you: not as the world giveth, give I unto you. Let
not your heart be troubled, neither let it be afraid."
(John 14:27, KJV)
The very first message that
the risen Jesus gave to His disciples was one of peace.
"Then the same day at
evening, being the first day of the week, when the doors were shut where the
disciples were assembled for fear of the Jews, came Jesus and stood in the
midst, and saith unto them, Peace be unto you." (John 20:19, KJV)
"And after eight days
again his disciples were within, and Thomas with them: then came Jesus, the
doors being shut, and stood in the midst, and said, Peace be unto you." (John
20:26, KJV)
Because peace is essential
for everyone, He even instructed His disciples to bless every house they
entered with peace:
"And when ye come into
an house, salute it. And if the house be worthy, let your peace come upon it:
but if it be not worthy, let your peace return to you." (Matthew 10:12–13,
KJV)
The peace that worldly
possessions and wealth offer is not permanent. Haven’t we often read in the
news about millionaires taking their own lives due to lack of peace?
Yes, dear ones, this is why
today's meditation verse says:
"Thou wilt keep him in
perfect peace, whose mind is stayed on thee: because he trusteth in thee."
(Isaiah 26:3, KJV)
If we desire true peace for
ourselves and our families, it is essential that we firmly hold on to the Lord
Jesus Christ—the Prince of Peace.
Be it sickness, debt,
financial crisis, fear of the future, our children’s education, employment, or
marriage—whatever may be robbing us of our peace, let us surrender it in faith
at the feet of the Lord Jesus Christ. Surely, He will keep His children in perfect
peace.
Gospel Message by: Bro. M.
Geo Prakash
No comments:
Post a Comment