DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Tuesday, May 20, 2025

🍒Meditation verse - 1 தீமோத்தேயு 5: 24 / 1 Timothy 5:24

 வேதாகமத் தியானம் - எண்:- 1,567

'ஆதவன்' 💚மே 23, 2025. 💚 வெள்ளிக்கிழமை


"சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்." (1 தீமோத்தேயு 5: 24)

இந்த உலகத்தில் துன்மார்க்கமாய் வாழ்ந்து கொடூரமான பாவச் செயல்கள் செய்யும் பலர் இந்த உலகத்தின் நீதிமன்றங்களால் தண்டனைகள் பெறுவதைப் பார்க்கின்றோம். தூக்குதண்டனை ஆயுள்தண்டனை என அவர்கள் செய்த பாவத்துக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இப்படிச்  சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து தேவன் இறுதிநாளில் வழங்கவிருக்கும்  நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; மேலும் தேவனே அவர்களுக்கு இந்த உலகினில் ஏற்ற தண்டனையை வழங்குவார். 

ஆனால் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்" என்று. ஆம்  எல்லோரும் தங்கள் செய்த கொடூர பாவங்களுக்கான தண்டனையை இந்த உலகத்தில் அனுபவிப்பதில்லை. பலர் தங்களது பணத்தின் பலத்தால் உலக நீதிமன்றங்களின் தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் நிரந்தரமாகத் தப்பித்துக்கொள்வதில்லை.  அவர்களது பாவங்கள் அவர்களது ஆத்துமாவைப் பின்தொடர்ந்து சென்று அவர்களை இருளான நரக அக்கினிக்குள் கொண்டுசெல்லும். 

தேவ பக்தியுள்ளவர்களை சோதனைகளிலிருந்து இரட்சிக்கும் அதே தேவன் சிலவேளைகளில் துன்மார்க்கர்களுக்கு இந்த உலகத்தில்  உடனேயே தண்டனை வழங்குவதில்லை. இதனையே, "கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்." (2 பேதுரு 2: 9)  என வாசிக்கின்றோம். அதாவது அவர் அந்தத் துன்மார்க்கரை இறுதி நியாயத்தீர்ப்பு நாளுக்கென்று ஒதுக்கி வைத்திருக்கின்றார். அப்போது அவர்களுக்கான தண்டனையை வழங்குவார். 

இந்த உலகத்தில் நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப தக்க பதில் தேவனால் சரிகட்டப்படுவது உறுதி. ஆனால் தேவனது நியாயத்தீர்ப்புகள் உலக நீதிபதிகள் வழங்குவதுபோன்ற தீர்ப்பல்ல. அவரது நியாயத்தீர்ப்புகள்  சத்தியமும் நீதியுமானவைகள்.  "பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 16: 7) என்று அப்போஸ்தலரான யோவான் தான் கண்ட தரிசனத்தில் கூறுகின்றார். 

தேவனது நியாயத்தீர்ப்புக்கள் இரக்கம் அன்பு இவைகளின் அடிப்படையில் மனிதர்களை நியாயம்தீர்ப்பவை. "ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்." ( யாக்கோபு 2: 13)

தவறாமல் ஆலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் கலந்துகொண்டாலும், பல்வேறு பிரசங்கங்களைக் கேட்டாலும் பல கிறிஸ்தவர்களும் எந்தவித வாழ்க்கை மாற்றமுமின்றி  இருக்கின்றனர்.  வேதம் கூறும் மரித்தவர்களின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு இவைகளைக்குறித்து முழு நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதில்லை என்பதையே இது காட்டுகின்றது. பவுல் உருவாக்கிய எபேசு சபையில்கூட பலர் இப்படியே இருந்தனர். அவர்களை அவர் துஷ்ட மிருகங்கள் என்று கூறுகின்றார். அவர்களுக்குத் தான் போராடி சுவிசேஷத்தை அறிவித்தும் அவர்கள் அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.  

"நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?" (1 கொரிந்தியர் 15: 32) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, தேவன் வழங்கும் நியாயத்தீர்ப்பு பொய்யல்ல; அது உறுதியான உண்மை. எனவே,  நமது பாவங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வழங்கப்போகும் இறுதி நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளுமுன்னும் அல்லது நாம் மரித்து அவை நம்மைத் தொடருமுன்னும் கிறிஸ்துவின் இரத்தத்தால் அவை கழுவப்படுமாறு வேண்டுதல் செய்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

Scripture Meditation – No: 1,567
AATHAVAN
💚 May 23, 2025 💚
Friday

“Some men's sins are open beforehand, going before to judgment; and some men they follow after.” — 1 Timothy 5:24 (KJV)

In this world, we often see many people who live wickedly and commit heinous sins being punished by worldly courts. Some receive capital punishment, others life imprisonment—each according to the severity of their wrongdoing. These are the ones whose sins are "open beforehand," reaching judgment even before God's final day of reckoning. Moreover, God Himself will give them the fitting punishment in this world.

However, today’s meditation verse also says, "and some men they follow after." That is, not everyone faces punishment for their grave sins during their earthly lives. Many escape human justice through wealth or influence. But they do not escape forever. Their sins follow them into eternity, leading their souls into the darkness of hellfire.

The same God who delivers the godly out of temptations does not always punish the wicked immediately in this world. As Scripture says:

“The Lord knoweth how to deliver the godly out of temptations, and to reserve the unjust unto the day of judgment to be punished.”

2 Peter 2:9 (KJV) This means God has set apart the wicked for the final day of judgment, when He will issue their sentence.

It is certain that every deed—whether good or evil—will receive a just response from God. But God's judgments are not like those of worldly judges. His justice is grounded in truth and righteousness.

“Even so, Lord God Almighty, true and righteous are thy judgments.” Revelation 16:7 (KJV) Thus declared the Apostle John in his vision.

God's judgments are not merely legal—they are filled with mercy and love.

“For he shall have judgment without mercy, that hath shewed no mercy; and mercy rejoiceth against judgment.” — James 2:13 (KJV)

Many Christians, despite regularly attending church services and listening to sermons, show no real transformation in their lives. This indicates a lack of true faith in the resurrection of the dead and in eternal judgment as taught by Scripture. Even among the members of the Ephesian church, founded by Paul, such people existed. Paul referred to them as “wild beasts,” lamenting that despite his efforts to preach the gospel, they rejected his words.

“If after the manner of men I have fought with beasts at Ephesus, what advantageth it me, if the dead rise not? let us eat and drink; for tomorrow we die.” — 1 Corinthians 15:32 (KJV)

Beloved, God’s judgment is not a lie—it is a firm truth. Therefore, let us earnestly pray that our sins may be washed away by the blood of Christ before they go ahead of us to judgment or follow us after death.

God’s Message by: Bro. M. Geo Prakash

No comments: