வேதாகமத் தியானம் - எண்:- 1,468
'ஆதவன்' 💚பிப்ருவரி 13, 2025. 💚வியாழக்கிழமை
"மரம் நல்லதென்றால், அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியினால் அறியப்படும்." ( மத்தேயு 12 : 33 )
மனிதர்களைப்பற்றி நாம் அறிந்துகொள்ள அவர்களை மரங்களுக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து ஒரு உண்மையினை விளக்குகின்றார். பொதுவாக நாம் மனிதர்களது பேச்சு மற்றும் செயல்களைப்பார்த்து ஒரு சிலரை நல்லவர்கள் என்றும் சிலரைக் கெட்டவர்கள் என்றும் எண்ணிக்கொள்கின்றோம். பல அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வைத்திருப்பது இப்படித்தான்.
அரசியல்வாதிகள் பொதுவாகவே பொய்யின் பிறப்பிடமாக இருக்கின்றனர். ஆட்சியைப்பிடிக்க எந்த பொய்யையும் கூற அவர்கள் அஞ்சமாட்டார்கள். தங்கள் கூறுவதை நிறைவேற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் கூறுவார்கள். உதாரணமாக, சமீபத்தில் ஒரு கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் செலுத்துவோம் என்று கூறினார்கள். இது முடியாத காரியம் என்றாலும் அவர்கள் சொன்னார்கள். அறிவில்லாத மக்களும் நம்பினார்கள்.
ஆம் அன்பானவர்களே, நல்லவர்கள்போல பேசும் எல்லோரும் நல்லவர்களல்ல. அவர்களது செயல்பாடாகிய கனிகள்தான் அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதனை வெளிப்படுத்தும். மரமானது அதன் கனியினால் அறியப்படும். ஆட்சிக்கு வந்தபின்னர் அரசியல்வாதிகளது அவலட்சணமான கனிகள் உலகுக்குத் தெரியவருகின்றன.
அரசியலில் மட்டுமல்ல, நமது குடும்பங்களிலும் நாம் பணி செய்யும் இடங்களிலும் இத்தகைய மனிதர்களைப் பார்க்கலாம். தேவனுக்கு ஊழியம் செய்யும் ஊழியர்களிடையேயும் இத்தகைய மனிதர்களைப் பார்க்கலாம். அழகான கவர்ச்சிகரமான பிரசங்கம் செய்யும் எல்லோரும் நல்லவர்களாக இருப்பதில்லை. அவர்கள் வெளிக்காட்டும் பண்புகளே அவர்களது உண்மைத் தன்மையினை உலகுக்கு உணர்த்தும்.
நாம் உலகினில் எல்லா மனிதர்களையும் தனிப்பட்ட முறையில் அறிந்து அவர்களைக் கணிக்க முடியாவிட்டாலும் பொது வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களையாவது அவர்களது செயல்களைப்பார்த்து நாம் கணிக்கமுடியும். ஆனால் இன்று மக்கள் பொதுவாகவே யாருக்கு அதிக மக்கள் ஆதரவு இருக்கின்றதோ அவர்களை நல்லவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். இப்படித்தான் இன்றைய இளைஞர்கள் நடிகர்கள் திரைப்படத்தில் நடிப்பது உண்மையென நம்பி அவர்களை நல்லவர்கள் என்று எண்ணி அவர்கள்பின் ஓடுகின்றனர்.
"நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது." ( மத்தேயு 7: 18) என்றார் இயேசு கிறிஸ்து. கிறிஸ்துவோடு நாம் ஒட்டவைக்கப்படும்போதுதான் நாம் கிறிஸ்துவின் பண்புகளைக் கொண்டவர்களாக வாழ முடியும். நமது வேர் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுப் பரிசுத்தமாக இருக்குமானால் மட்டுமே நாம் பரிசுத்தமாக இருக்க முடியும்; நல்ல கனிகளை நாம் கொடுக்கிறவர்களாக வாழமுடியும். ஆம், "வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்." ( ரோமர் 11 : 16 )
எனவே நாம் சுயமாக முடிவெடுத்துச் சிலரது செயல்களைப் பார்த்து நல்லவர்கள், கெட்டவர்கள் என்று முடிவெடுக்காமல் அவர்கள் வெளிப்படுத்தும் கனிகளைக் கவனித்துப்பார்ப்போம். மரம் நல்லதென்றால், அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதாகவே இருக்கும். ஒரு மனிதனது வேரானது கிறிஸ்துவோடு இணைந்து பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் அவனிலிருந்து வெளிப்படும் கனிகளும் பரிசுத்தமாயிருக்கும்.
மற்றவர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமல்ல, நாமும் நல்ல கனி கொடுப்பவர்களாக மாறவேண்டுமானால் கிறிஸ்துவோடு நம்மை இணைக்கவேண்டியது அவசியம். இல்லையானால் மற்றவர்களை குறைகூறும் நாமும் நல்ல கனிகொடுக்க முடியாது. "நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15: 5) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்துவோடு நம்மை இணைத்து உலகுக்குக் கனிகொடுப்பவர்களாக வாழ முயற்சியெடுப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No: 1,468
AATHAVAN 💚 February 13, 2025 💚
Thursday
"Either make the tree
good, and his fruit good; or else make the tree corrupt, and his fruit corrupt:
for the tree is known by his fruit." (Matthew 12:33)
Jesus Christ explains a
profound truth by comparing people to trees. Generally, we judge people as good
or bad based on their words and actions. Many politicians deceive people in
this way.
Politicians are often the
birthplace of lies. They will not hesitate to say anything to win power. Even
when they know they cannot fulfil their promises, they still make them. For
example, during a recent election campaign, a political party promised to
deposit ₹1.5 million in every citizen’s bank account if they came to power.
Although this was an impossible promise, people believed it.
Yes, beloved, not everyone who
speaks well is truly good. Their actions—their fruits—reveal their true nature.
"For the tree is known by his fruit." (Matthew 12:33). After coming
to power, the wicked fruits of politicians become evident to the world.
This truth is not limited to
politics; we see such people in our families, workplaces, and even among those
who serve God. Not all who deliver eloquent sermons are righteous. Their true
nature is revealed by their deeds.
Though we may not be able to
judge every individual in the world, we can discern public figures by their
actions. However, today, people tend to judge others based on their popularity
rather than their deeds. Many youths blindly follow actors, believing that what
they portray in movies is real.
Jesus Christ said, "A
good tree cannot bring forth evil fruit, neither can a corrupt tree bring forth
good fruit." (Matthew 7:18). Only when we are connected to Christ can we
bear Christ-like virtues. If our roots are firmly established in Christ and
holiness, we will also live a holy life and bear good fruit. "For if the
root be holy, so are the branches." (Romans 11:16).
Therefore, instead of hastily
judging people as good or bad based on mere appearances, let us examine the
fruits they produce. A good tree will bear good fruit, and a corrupt tree will
bear corrupt fruit. If a man’s root is connected to Christ in holiness, then
his branches and the fruits he bears will also be holy.
It is not just about others or
politicians—if we want to bear good fruit, we must be connected to Christ.
Otherwise, even we who criticize others will fail to bear good fruit. Jesus
Christ said, "I am the vine, ye are the branches: He that abideth in me,
and I in him, the same bringeth forth much fruit: for without me ye can do
nothing." (John 15:5). Let us connect ourselves with Christ and strive to
bear good fruits for the world.
Gospel Message by: Bro.
M. Geo Prakash
No comments:
Post a Comment