வேதாகமத் தியானம் - எண்:- 1,477
'ஆதவன்' 💚பிப்ருவரி 22, 2025. 💚சனிக்கிழமை
"தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 12: 6)
இந்த உலகத்தில் மனிதர்களால் கட்டப்பட்ட வானுயர்ந்த தேவாலயங்கள் பல உண்டு. இந்த ஆலயங்களுக்கு மனிதர்கள் முன்னுரிமைகொடுத்து காணிக்கைகள் கொடுத்தும் திருயாத்திரைகள் சென்றும் ஆராதித்து வருகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து வெளிப்படையாக யூதர்களிடம் தன்னைப்பற்றி தேவாலயத்திலும் பெரியவர் என்று குறிப்பிடுகின்றார். இது தேவ தூஷணமாக யூதர்களுக்குத் தோன்றியது.
இயேசு கிறிஸ்து தேவாலயத்திலும் பெரியவர் என்று தன்னைக் கூறும்போது தானே தேவன் என்று கூறுகின்றார். மேலும் இயேசு கிறிஸ்து தன்னைக் குறித்துத் தெளிவாகக் கூறினார்:- "சாலமோனிலும் பெரியவர்" (மத்தேயு 12:42), "யோனாவிலும் பெரியவர்" (மத்தேயு 12:49) "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே இருக்கிறேன்" (யோவான் 8:58) என்று. மேலும் எபிரெயர் நிருபத்தில், "மோசேயைப் பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார்." (எபிரெயர் 3:3) என்று வாசிக்கின்றோம்.
ஆம் அன்பானவர்களே, இத்தகைய வல்லமையும் மகத்துவமும் உள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அற்பமான நம்மைப்போன்ற மனிதர்களுக்குள் வந்து தங்கிட விரும்புகின்றார். அப்படி அவர் நமக்குள் வந்து தங்கும்போது நாமே அவரது ஆலயமாக மாறுகின்றோம். தேவன் தங்கும் இடம்தான் ஆலயம். "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்" ( யோவான் 14: 23) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?
எனவே நாம் நமது உடலைப் பரிசுத்தமாய் காத்துக்கொண்டு அவருக்கு ஆராதனை செய்யவேண்டும். தேவாலயத்திலும் பெரியவர் நமக்குள் இருப்பதால் நாம் அவருக்கேற்ற புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக வாழவேண்டும். அப்போஸ்தலரான பவுல் இதனால்தான், "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12: 1) என்று கூறுகின்றார்.
ஆனால், தேவாலயத்திலும் பெரியவர் நமக்குள் இருக்கின்றார் என்று கூறிக்கொண்டு நாம் ஆலயங்களுக்குச் செல்லாமல் இருப்பது அறிவீனம். அது வீண் பெருமையையே நமக்குள் விதைக்கும். இயேசு கிறிஸ்து தன்னைத் தேவாலயத்திலும் பெரியவர் என்று கூறினாலும் அவரும் ஆலயத்துக்குச் சென்றுகொண்டுதான் இருந்தார்.
ஆலயத்தில் நாம் விசுவாசிகளோடு ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்துகின்றோம். கூடி ஜெபிக்கின்றோம், சேர்ந்து ஆராதிக்கின்றோம், நமது ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றோம். மட்டுமல்ல, நமது சாட்சியுள்ள செயல்பாடுகள் ஆலயத்துக்குவரும் மற்றவர்களை கிறிஸ்துவின் அன்புக்குநேராக வழிநடத்திட வாய்ப்பு உருவாகும்.
அன்பானவர்களே, தேவாலயத்திலும் பெரியவரான கிறிஸ்து நமக்குள் வந்து தங்கிட இடம்கொடுக்கவேண்டும்; அத்துடன் நமக்குள் வந்திருக்கும் அவரை நமது சாட்சியுள்ள வாழ்க்கையால் மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும். இப்படி நாம் வாழும்போது நாம் மெய்யான ஆலயமாக வாழ்வது மட்டுமல்ல, தேவாலயத்திலும் பெரியவர் தொடர்ந்து நமக்குள் இருந்து செயல்படுவார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No: 1,477
AATHAVAN 💚 February 22, 2025. 💚
Saturday
"But I say unto you, That
in this place is one greater than the temple." (Matthew 12:6, KJV)
There are many towering
temples in this world, built by human hands. People give great importance to
these temples, offering sacrifices, making pilgrimages, and worshiping them
with devotion. However, Jesus Christ openly declared to the Jews that He is greater
than the temple. To the Jews, this seemed like blasphemy.
When Jesus Christ claimed that
He was greater than the temple, He was declaring that He Himself is God.
Furthermore, He clearly stated: "Behold, a greater than Solomon is
here." (Matthew 12:42), "Behold, a greater than Jonas is here."
(Matthew 12:41), and "Before Abraham was, I am." (John 8:58).
Additionally, in the Epistle to the Hebrews, we read: "For this man was
counted worthy of more glory than Moses." (Hebrews 3:3).
Dearly beloved, the Lord Jesus
Christ, who possesses such power and greatness, desires to dwell among us, mere
human beings. When He comes and abides in us, we ourselves become His temple.
The place where God dwells is the temple. Did not Jesus Christ say, "If a
man love me, he will keep my words: and my Father will love him, and we will
come unto him, and make our abode with him." (John 14:23)?
Therefore, we must keep our
bodies holy and worship Him. Since the One who is greater than the temple
dwells within us, we should live as those who offer reasonable worship to Him.
This is why the Apostle Paul urges, "I beseech you therefore, brethren, by
the mercies of God, that ye present your bodies a living sacrifice, holy,
acceptable unto God, which is your reasonable service." (Romans 12:1).
However, claiming that Christ,
who is greater than the temple, dwells in us and then neglecting to go to
church is unwise. Such an attitude would only lead to arrogance. Even though
Jesus declared that He was greater than the temple, He Himself continued to go
to the synagogue and the temple.
In the church, we establish
fellowship with other believers. We come together to pray, worship as one body,
and express our unity. Moreover, our faithful and exemplary actions in the
church can lead others to the love of Christ.
Dearly beloved, we must give
room for Christ, who is greater than the temple, to dwell in us. At the same
time, we must make Him known to others through our witness and godly living.
When we live in this manner, we not only become true temples of God, but the
One greater than the temple will continue to dwell in us and work through us.
Message by: Bro. M. Geo Prakash

No comments:
Post a Comment